தமிழன் நாடு வேலி இலா காடா காடா!

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

உலகத் தமிழனுக்கு அடிப்படையில் தனி நாடு கிடைக்கும் வரை நாம் பரதேசிகள்தாம் ! இந்த பாடல் வழி புதிய தமிழர் நாட்டுக்கு உரமிடுவோம்.இது செழித்தால் தான் உலக தமிழனுக்கு அங்கீகாரம் இல்லையேல் அநீதிகள்தான். நல்லத் தமிழன் யாரேனும் பாடல் ஒலி/ஒளி பெற உதவலாம்.

 

india-tamil-naduதமிழன் நாடு வேலி இலா காடா காடா
வந்தேறிகள் ஏய்க்கும் முதலாளி மேடு மேடு
இன்று நாடு என்றான் அது பொய் பொய்
மாநில மண் என்றான் விலைபோகுது பூமி பூமி
இதரவன் நம் நாளங்களை அறுத்து அறுத்து
அரசியல் சுருதி பாடுகிறான் பார் பார்

குருதிகளை குடித்தே ஏய்ககிறான் ஏய்ககிறான்
மண்ணை டில்லிக்கு குத்கை விட்டான்  விட்டான்
திராவிட அரசியல் கூத்து அது மடமை மடமை
எழுதிபோனான் முட்டாள் கூற்று மறு மறு
தமிழன் மட்டும் திராவிட கூலியாம் இல்லை இல்லை
தெளிந்தவன் தப்பித்துபபோனான் போகட்டும் போகட்டும்

ஆடியவன் எவனும் தமிழனில்லை சொல் சொல்
ஆளா இல்லை தமிழா நீ எழு எழு
பின்னணி உனக்கு சுதந்திரம்  முழங்கு முழங்கு
தமிழன் முன்னணி ஆக்கம் பெற வைகையில் வை வை
சீரழியும் தமிழையும் தமிழனையும் காப்போம்   காப்போம்
காப்பு கட்டு சத்தியம் உனக்கு உரிமை உண்டு உண்டு

எட்டு திசை அதிலே நீ காவல் நிற்க நிற்க
எதிர்த்தே நில் நீ நிலையாய் வெல்க  வெல்க
வட வெங்கட தென் குமரி உனதடா உண்மை உண்மை
உன் தமிழ் மொழி அதிலே முதலடா கொள் கொள்
இன்டியத்திற்குள் சிக்கியது மடைமைடா மாற மாற
தமிழ்தான் அங்கே முதன்மையடா எழுது எழுது

இந்தியமும் திராவிட பார்ப்பன்யமும் பொய் பொய்
ஆதியின் பரம்பரை நாமடா நடத்து நடத்து
தமிழன் சாதியே சிவனின் போதனை சரணம்  சரணம்
நீ இயற்கையின் வளமட சூரியன் உன் சொந்தம் சொந்தம்
தனிநாடு விடுதலை தரிசிக்க நீ  தா தா
ஐக்கிய நாடு ஆதரிக்க கோடிகள் அதிகம் அதிகம்

உன்னவன் தமிழன் ஐக்கியம் தேடு தேடு
தமிழவன்  உனக்கு ஆதரவு தருவான் பாடு பாடு
மாற்றான்  கட்சிகளின்  தனிநாடு  இல்லை இல்லை
தமிழன் தேசியத்தில் மட்டும் அதனைக கேள் கேள்
தாயிடம் சொல்லு தமிழினம் காக்க போ  போ
தரணி வாழ் தமிழனே தனியாய் வா வா
தமிழன் கூட்டணி குடியரசாக  மலர மலர

தமிழர் தேசியம் உனது உடமையாக நட நட
இதரவன்  அருவருடிகள் பதறி ஓட ஓட
நிலையாய் உன்னை உடனே மாற்று மாற்று
தமிழர் நாடு உலகத தமிழனுக்கு வித்திட வித்திட
நீ உரக்க பாடி தமிழர்  களமதில் சேரு சேரு
தமிழீழம் தானா வரும் தமிழகம் அங்கே அங்கே
அங்கீகார பெற  தாயக தாய் மேல் சத்தியம் சத்தியம்.

ஆக்கம். ம. அ. பொன் ரங்கன்
இயக்குனர் உலகத தமிழர் பாதுகாப்பு இயக்கம்
து .தலைவர் . நாம் தமிழர் மலேசியா

TAGS: