இம்முறையும் இறுமாப்பெய்துகின்றேன் தமிழா! -பொன்.காந்தன்

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

eelamtஇருளை கடந்த
இரவொன்றில் எழுதுகிறேன்
அருளை உன்
அடிமனதில் கிடந்து
கொப்பளித்த கொதிப்பை
கொட்டித்தள்ளிய தமிழா

இருளை கடந்த
இரவொன்றில் எழுதுகிறேன்
அருளை உன்
அடிமனதில் கிடந்து
கொப்பளித்த கொதிப்பை
கொட்டித்தள்ளிய தமிழா

 

நீ நடக்கிற மண்ணில்
நான் புரண்டு வணங்குகின்றேன்.உன் மானத்தின் மீது
மலர்மாரி பொழிந்து பூரிக்கின்றேன்.
தமிழனாய்
உங்களொடு ஒருவனாய்
இருப்பதை நினைத்து
இம்முறையும் இறுமாப்பெய்துகின்றேன்.

சரித்திரத்தை மாற்றும் உன் சக்தி முன்
மலையென கிடக்கும்
மமதை இடியும் என்பதை
விடியலின் அவாவொடு
வெளிப்படுத்தி இருக்கின்றாய்.

மகிந்த
அரியணை இழந்து போகும்
சுபநேரத்தை
விரல் நுனியில் வைத்திருந்த
என் வீரியத்தமிழா
உன்னை வெண்புரவி
பூட்டிய தேரிலேற்றி
பூமியெங்கும் உலாவர
கனவு காண்கின்றேன்.

உன் அடி மனதின்
அபிலாசைகளின் முன்
எவனும் எதிர் நிற்க முடியாது
என்பதை முழக்கினாய்.

இது இன்னொரு வரலாற்றுப்பாடம்
எம்மை அடக்க நினைப்பவனுக்கும்
அடி வருடிகளுக்கும்.பூபாளத்துக்காக நூற்றாண்டுகளாய்
தவமிருக்கும்
உன் பர்னசாலையில் புகுந்து
அசிங்கம் செய்த அரக்கனை
சபித்தாய் சரித்தாய்.

 

இதுவும் உன் சமர்தான்.
இது உன் ஓயாத அலைகள்
ஆறாவதோ ஏழாவதோ இருக்கலாம்.
உன் அடங்கா பற்றின் தீச்சுவாலை
இரண்டாவதோ மூன்றாவதோ இருக்கலாம்.

எட்டாந்திகதி காலையில்
நீ கற்பூர புல்வெளியில் துயில்
கலைத்ததாக இருக்கலாம்.
வாழ்க உன் அவதாரம்.மகிந்தவுக்கும் அவன் கூட்டத்துக்கும்
தாங்கள் இங்கு கட்டுவது
மணல் வீடு என்று உணர
மமதை விடவில்லை.

மரணித்தவனின்
கல்லறையை உடைத்தெறிந்து
அங்கு சந்தணமாய்
தூங்கியவனின் துயில் கலைத்து
கோபத்தின் எல்லைவரை
மனதுகளை கட்டியிழுத்தவனுக்கு
இப்பொழுது நடந்திருக்கின்றது சங்காரம்.

முடிவு இதோ கடைசி காலத்தில்
பூனைக்கும் எலிக்கும் பயந்த கிட்லர்பேரால்
மூலைக்குள் போகிறான் முடியிழந்து.
இனி அவனுக்கு பார்ப்பது
எல்லாம் பரம எதிரிகளாகவே இருக்கும்.

ஆசியாவின் அசிங்கத்தை
வீழ்த்திய மகிழ்ச்சியில்
அவன் குலமே மகிழ்ந்து கூத்தாடுகின்றது.
இனி அவனோடு ஒட்டியிருந்த
கொடுக்கான்களும் நட்டுவகாலிகளும்
கோவணத்தோடு நின்று கொண்டு
பதவிப் பிச்சைகளுக்கு பல்லிழிக்கலாம்.

பாதையில்லா பரதேசிகள்
பாவ மன்னிப்புக்கோரலாம்.புதிய சித்தாந்தங்களோடு
புன்னகைக்கு முயலலாம்.
அப்போதும் நீ அகன்ற மனதோடு
தெளிந்த ஞானத்தோடு உன் தவம்
குலையாமல் இருப்பாய் தமிழா.

 

நாம் நம்  பாதையின் இடையில் கடித்துக்குதறி
நின்ற வெறி நாயொன்றை விரட்டி இருக்கின்றோம்.
இது பெரிய வெற்றிதான்.
தர்மத்துக்கும் கிடைத்;த வெற்றி.
எமக்கு போடப்பட்ட முள்முடியிருந்து
ஒரு முள் பிடுங்கப்பட்டது போன்ற வெற்றி.

ஆசை வார்த்தைகளுக்கும் அற்ப சலுகைகளுக்கும்
சீனிக்கும் பருப்புக்கும் சீற்றத்தை மறந்து
தமிழன் சிரித்தபடி சேவகம்
செய்வான் என்று நினைத்தவனுக்கு
எம் குலத்தில் மரித்தவர்கள்
பேரால் கொடுத்த மாபெரும் அடி இது.

நம் கும்பகர்ணர்களுக்கு மன்னன் இராவணண்
இனி தூங்கக்கூடாது என
கடுமையான கட்டளை இட்டிருக்கின்றார்.
கடந்த சிலநாட்களாய் சினத்தோடு
திரிந்த இராவணனையும் அவன் தம்பிகளையும்
என் தெருக்களில் கண்டேன்.

காலங்கள் வரும்பொழுது
தாம் வரலாற்றில் உயிர்த்தெழுவோம்
என்று சொல்லிச்சென்றார்கள்.
எட்டாம் நாள் காலையில்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டவரை
சங்கிலியன் குளக்கோட்டன்
பண்டார வன்னியர்கள் திரண்டிருந்த
காலக்காட்சியில் நாம் கலந்து மகிழ்ந்தேன்.

சோத்துப்பார்சல் கொடுத்து
அழைத்துப்போன சோழப்பரம்பரையின்
சொந்த குணத்தை காண அரியசந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தது.
சமுர்த்தி என்ன ரம்பையின் நாட்டியமா!

கொள்ளையடித்த தங்க
நகையை அள்ளித்தெளித்தால்
சிங்கத்தின் வாலில் கிறங்விடுமா எம் நிலம்
இன்னும் திருந்தாத நம் தெருப்பொறுக்கிகளுக்கும்
இத்தருணத்தில் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.

நீங்கள் அடித்த கூத்தில் தமிழ் நிலமே
தன் பக்கம் என்று தவறான கணக்கை
போட்டுவிட்டார் மகாராஜா.
உங்களுக்கு பின் நீங்களே இல்லை என்ற
புதிய சிந்தாந்தத்தை ;இப்பொழுது புரிந்திருப்பான் அவன்.

புரிந்தென்ன சரிந்துவிட்டது அவன் கனவு கோட்டை.

கவனம் யாவும் இழந்து குடும்பத்தொடு
கௌரவ கோவணத்தோடு நிற்கும்
மகிந்தவின் கண்ணில் பட்டுவிடாதீர்கள்
உங்களை கட்டையில்
வைத்து ஒட்ட வெட்டி
தன் தோல்வி கடுப்பை தீர்த்துவிடுவார்.

 

நல்ல குளமாய் பார்த்து
முதலில் ஊத்தையை கழுவுங்கள்
எங்களோடு பிறந்த கோடறிக்காம்புகளே!இனியேனும் திருந்தலாமா என
குந்தியிருந்து சிந்தியுங்கள்.

இல்லையெனில் ஓயாமல்
அறுபது வயதுவரை வால்பிடித்தால்
பாவத்தை பார்த்து வால் பிடி
பென்சனாவது கிடைக்கும் எது உத்தேசம்.

 

மகிந்த மாமா நாமல் அங்கிள் நான் யாரடி சிறுக்கி
தமிழன் ரத்தம் காயவில்லை
கண்ணீர் இன்னும் ஒயவில்லை.
இங்கு அரக்கன் அங்கிள்.அவன் அருகில் போய்
புளகாங்கிதம் அடைந்தவர்கள்.

பிள்ளைகளை அவன் கைபட விட்டவர்கள்.
அவன் பெயரை உச்சரித்து
பேய்கூத்தாடியவர்கள்.
அவன் வரட்டும் என உள்ளும்
வெளியே வெள்ளையாய் நடித்தவர்கள்.ஓடுவீர்
கீரிமலை கேணியுண்டு
கன்னியா உண்டு
புண்ணிய தீர்த்தத்தில் நீராடுங்கள்.

கல்லறைகள் உடைக்கப்பட்ட
எங்கள் காவல் தெய்வங்களின்
பற்றையுடன் பசாசுகள் குடியிருக்கும் நிலமுண்டு
கடைக்கண்ணால் பாருங்கள் மன்றாடுங்கள்
பாவம் தீர்கிறதா என பார்ப்போம்.
இது விடுதலை கிடைத்துவிட்டதாக
எழுதும் பள்ளு அல்ல.

பரவசமும் அல்ல.நாம் நிதானிக்க கிடைத்த இடம்.
அவ்வளவுதான்.
இதுவும் சிலுவைப்பாடல்தான்.
இத்தனை துயர்களுக்குப்பிறகும்
இலட்சிய வேட்கையோடு வாழும்
என் உறவுகளுக்காக எதுவும் கொடுக்கலாம்.

 

என் தமிழர்களின் அரசியல்
ஞானத்துக்காக அட்டாங்கமாய்
வீழ்ந்து வணங்கலாம்.
எத்தனை பிறவிக்கும் இம்மண்ணிலேயே
பிறக்குமாறு வரம் கேட்கலாம்.
என் வேரில் பிறந்த வீரியங்களே!

நீங்கள் சாதித்தவற்றில்
உங்களை சாய்த்தவனை சங்கரித்த
இந்நாளும் வரலாற்றில் இடம் பிடிக்கின்றது.
இனியும் ஓய்வு கிடையாது உறவுகளே!
எம் சந்ததிக்காகதானே இன்னும்
நெருப்புடன் இருக்கின்றோம் எப்போதும்
உயிர் குளிரும் விடியல்வரை
உயிர் மயிராகவே இருக்கட்டும்..!

-பொன்.காந்தன்
TAGS: