வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
கொள்வோம்
சொந்த இனத்துக்குள்
அடித்துக் கொள்வோம் – ஆனால்
நாங்கள் நாய்கள்
அல்ல…….
இனத்தின் உரிமையில்
கவலையில்லை
அடுத்தவன் உணவை
அபகரிப்போம்
கூட்டமாக இருந்தாலும்
ஒற்றுமையிருக்காது – ஆனால்
நாங்கள் நாய்கள்
அல்ல……
கண்ட இடத்தில்
சிறுநீர் கழிப்போம்
நாகூசும் வார்த்தைகளை
கக்கி வைப்போம்
யாரை பார்த்தாலும்
உறுமியிருப்போம் -ஆனால்
நாங்கள் நாய்கள்
அல்ல……
மனித தன்மை
உண்டு
நன்றியோடும் இருப்போம்
அவற்றையெல்லாம் மறந்திருப்போம்
ஆனால்
நாங்கள் நாய்கள்
அல்ல……
யார் எங்கு குரைத்தாலும்
கூட்டாக குரைப்போம்
ஏனென்று கேட்காமல்
எங்களுக்குள்ளேயே
கடித்து குதறிக்கொள்வோம் – ஆனால்
நாங்கள் நாய்கள்
அல்ல………
நாய்க்கான அனைத்து
குணமும் எங்களிடத்தில்
விசுவாசமும் கூட –ஆனால்
நாங்கள் நாய்கள்
அல்ல!!!!
(சிவாலெனின்,சுங்கை,பேராக்)
தற்போது நிலவும் ( ம.இ.கா.) குளறுபடிகள் மற்றும் தமிழர்களிடையே காணப்படும் ஒற்றுமையின்மை, பொதுவாக இந்நாட்டில் இந்தியர் நிலையை எடுத்தியம்பும் கவிதை, நன்று. பாராட்டுகள்.
நன்றி மணியம் அவர்களே
மிகவும் அருமை…வாழ்த்துக்கள்
சில கேடுக்கெட்ட ஆறறிவு ஜென்மங்களை விட ஐந்தறிவு நாய்கள் மேல் !
கருத்துக்களுக்கு மிக்க நன்றி…….
இப்படி நல்ல கவிதை இருப்பதை காணாமலே ,நேற்று ;
நம் நாட்டு சமீப கால நடப்புகளுக்காக மனம் நொந்து
நெகிரி நிலம் சம்பந்தமான அறிக்கைக்கு …கருத்து எழுதி பதிவேற்றி
இருக்கிறேன் .மிகப் பொருத்தமான கருத்து !
என்று மாறுமோ இந்நிலை ?