திப்பு சுல்தான் மன்னில் இருந்து ஏவுகணை தன்னைத் தானே அழிக்கும் கருவி கண்டுபிடிப்பு

kaynesபெங்களூர்: கெய்ன்ஸ் டெக்னாலஜி என்ற இந்திய நிறுவனம் ஏவுகணைகள் தன்னைத் தானே அழித்துக் கொள்ள உதவும் கருவியை கண்டுபிடித்துள்ளது. திப்பு சுல்தான் மன்னில் இருந்து ஏவுகணை தன்னைத் தானே அழிக்கும் கருவி கண்டுபிடிப்பு மைசூரைச் சேர்ந்த கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனம் ஏவுகணைகள் தன்னைத் தானே அழிக்க உதவும் கருவியை கண்டுபிடித்துள்ளது.

எலக்ட்ரானிக் சேஃப் ஆர்ம் அன்ட் ஃபயர் சிஸ்டம்(இஎஸ்ஏஎப்எஸ்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த கருவி ஏவுகணையை பரிசோதிக்கையில் ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால் அதை அழிக்க உதவும். அந்த கருவி ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓவின் ஆய்வு மைத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக பாதுகாப்பு துறையில் உள்ளது கெய்ன்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. திப்பு சுல்தான் மன்னில் இருந்து ஏவுகணை தன்னைத் தானே அழிக்கும் கருவி கண்டுபிடிப்பு கெய்ன்ஸ் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் சரத் பட் கூறகையில், கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனத்திற்கு மைசூர் தவிர நாட்டின் 7 பகுதிகளில் ஃபேக்டரி உள்ளது. பெங்களூரில் டிசைன் மையம், மும்பையில் சர்வீஸ் மையம் ஆகியவை உள்ளது.

மேலும் ஜுரிச் மற்றும் ஹாம்பர்கிலும் அலுவலகங்கள் உள்ளது. திப்பு சுல்தான் மன்னில் இருந்து ஏவுகணை தன்னைத் தானே அழிக்கும் கருவி கண்டுபிடிப்பு 1,200 ஊழியர்களை கொண்ட எங்கள் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.340 கோடி ஆகும்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டின் கடற்படை பிரிவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பல காலமாக சப்ளை செய்து வரும் நிறுவனம் கெய்ன்ஸ். மேக் இன் இந்தியா திட்டம் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்லும் என்றார்.

கெய்ன்ஸ் தயாரிப்புகளில் 30 சதவீதம் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஹாலந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கெய்ன்ஸ் நிறுவனம் ப்ளூடூத் பார் கோடு ஸ்கேனர், ப்ளூடூத் பல்பு உள்ளிட்டவற்றை தயாரித்துள்ளது.

திப்பு சுல்தான் மன்னில் இருந்து ஏவுகணை தன்னைத் தானே அழிக்கும் கருவி கண்டுபிடிப்பு மைசூர் மன்னர் திப்பு சுல்தான் அந்த காலத்திலேயே உள்நாட்டில் ஏவுகணை தயாரிக்க உதவியுள்ளார். அவர் ஆங்கிலேய படைக்கு எதிராக 2 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

http://tamil.oneindia.com

TAGS: