என்ன செய்யப்போகிறோம் இதற்காக? -அ.ஈழம் சேகுவேரா

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  info@semparuthi.com

 

111

தமிழ் இனத்தின் தாய் – ஒரு யுகத்தின் தாய்,

ஏன் தனிச்சிங்கள பெளத்த பேரினவாதியின் கால்களில் விழ வேண்டும்?

அவன் சப்பாத்து கால்களுக்குள் ஏன் முகம் புதைத்து

தன் குறைகள் சொல்லி அழ வேண்டும்?

இந்த ஒளிப்படத்தில் உள்ள சக்தியற்ற-பயனற்றவர்களால் தானே

எமது இனத்துக்கு இந்த இழுக்கு!

வெட்கம்! கேடு! அவமானம்! சாபம் எல்லாம்! எல்லாமே!

ஒளிப்படத்தை நன்றே அவதானியுங்கள்.

ஈழத்தாயவள், சிங்கள கொலைவெறி பாசிஸ்ட்டுகளின்

கால்களில் விழ முன்னே,

பதறி ஓடோடிச்சென்று

கைத்தாங்கலாக தூக்கி தாங்கிப்பிடித்து தேற்றாமல்,

நிகழ்கால நீலன் திருச்செல்வம் வேடிக்கை பார்க்கிறார்.

சோகை.மாவை, தான் ஏதோ வேறொரு

உலகத்தில் இருப்பது போல, வெள்ளி பார்க்கிறார்!

‘என்ன செய்யப்போகிறோம் இதற்காக?

என்ன செய்யப்போகிறோம் இதற்காக?’

என்று எமது இயலாமைகள்-ஆற்றாமைகளை

வெளிப்படுத்தி புலம்பித்தவிப்பதை விடவும்,

‘என்ன செய்யலாம் இதற்காக? என்ன செய்யலாம் இதற்காக?’

என்று நாம் எல்லோரும் கூட்டாக சிந்திப்போமாகவிருந்தால்,

கட்டியிருக்கிற கோவணத்தையும்-கச்சைகளையுமாவது

உருவ விடாமல் பார்த்துக்கொள்ளலாம் அல்லவா!

 

-அ.ஈழம் சேகுவேரா- 
இலங்கை, முல்லைத்தீவிலிருந்து…

TAGS: