இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழையும் போது அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளக்கூடாது என்று இந்தியா இலங்கை கடற்படையினரிடம் கோரியுள்ளது.
கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இந்திய பிரதி வெளியுறவு அமைச்சர் வி.கே. சிங் இந்த தகவலை வெளியிட்டார்.
ஏற்கனவே இந்திய மீனவர்கள் தாக்கிய 6 சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில் இந்திய மீனவர்களை மனிதாபிமான முறையில் பார்க்குமாறு அமைச்சர் கோரினார்.
இலங்கை கடற்படையினரால் கடந்த வருடத்தி;ல் 964 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அதேநேரம் 303 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
-http://www.tamilwin.com