வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
மற்ற விலங்குகளிலிருந்து
மாறுபட்டனவாக ..
நாய்கள்..
பல வகையினவாய்..
பெருங்குரலெடுத்து
போரிடும் சில..
கை ஓங்கிட ஓடிடும் ..
போவோர் வருவோர்
எவரையும் பொருட்டாக எண்ணாத
மோன நிலையோடு சில..
நன்றிக்கும் பாசத்திற்கும்
வாலாட்டி ஆட்டியே
வயதாகிப் போகும் சில..
வலியோனைக் கண்டிட
வாலினை இடுக்கிலடக்கி
பம்மும் சில ..
வெகுசாமர்த்தியமாய் ..
சாலையைக் கடக்கும் சில..
அவசரக் குடுக்கைகளாய் ஓடி
அடிபட்டு கிடக்கும் சில..
என்று அவைகளில் பலவகை..
ஏனெனில்..
மனிதனோடு நீண்ட நெடுங் காலமாய்
நட்போடு ..
இருந்துவருபவை..
அவை!
-கருணா
மிகவும் அருமையான வரிகள்…..வாழ்த்துக்கள்
எனக்கும் பிடித்திருக்கு மிகவும் அருமை.
நாய்யை வருணித்து மனிதனுக்கு ஒப்பிட்டு நாய் மலத்தை மனிதரின் முகத்தில் பூசிய புதுக் கவிதையோ இது?
தமிழரை அழித்தது தமிழரே,கருணா,கருணாநிதி மற்றும்2,ஆதலால் பிறரை விரல்நீட்டி தன் குறையை மறைப்பது இக் காலத்திற்கு சாத்தியமில்லை,
வாழ்க நாராயண நாமம்.