வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.
தயவு செய்து பொறுமையாக படித்து பாருங்கள்
அழுதுவிட்டேன் இது போன்ற கவிதைகளை பதிவு இடுவதில் பெருமை
படுகின்றேன்!
நான்
உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
முதுமையின் வாசலில் – நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்…
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !
என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான்
சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே…..
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு
கூர்க !
ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே…..
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
இதயம் கொள்க !
ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே….
ஒரே
மாயாவி கதையை
ஒரு நூறு முறை
எனை படிக்கச் சொல்லி
நீ
உறங்கிய
இரவுகளை ஞாபகம்
கொள்க !
நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே….
உன்னை
குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை
எனக்காக புதுப்பித்துத் தருக!
புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் – உன்
புயல் வேகப் புரிந்துகொளல்
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை !
கேவலப் படுத்தாதே….
கற்றுத் தருக ! கவனித்துப்
பழக அவகாசம் தருக !
இனி,
சில நேரங்களில் –
என்
நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்!
நிறைய வேலை இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே…..
என் அருகிருந்து
ஆற்றாமை தேற்றுக!
ஆசுவாசப் படுத்துக!
என் கால்கள்
என்னை ஏமாற்றுகையில்
நீ
முதல் நடை பழக
என் விரல்
நீண்டது போல்
கைகொடுத்து
எனக்கு உதவி செய்க !
ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது
போதுமென்று !
வருத்தப் படாதே…..
சில
வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை…
சில
வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை…
காலம்
வரும்போது – இதை
நீயும்
புரிந்து கொள்வாய் !
இனி நான் வேண்டுவதெல்லாம்
நீ எனை
புரிந்து கொண்ட
புன்னகை !
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்…..
என் வாழ்வு
அமைதியோடும் – உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..????
( ஓர் தாய் முதுமையில்
மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை…)
இது ஏதோ ஒருவர் அனுப்பியது அல்ல நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நடக்கப்போவது..!!
நமது தாய், தந்தையை பேனி காப்பது நமது தலையாய கடமை,
நமது உயிர் இருக்கும் வரை நாம் அவர்களை பேனிக்காப்போம்.
நமக்கும் ஒரு நாள் இந்த முதுமை வரும் அதற்குள் நமது பணியை சிறப்பாக செய்து நமது பெற்றோரையும் சிறப்பாக வாழ வைப்போம்.
-தமிழ்ச்செல்வி
இந்தக் கவிதையை படித்துவிட்டு உண்மையிலேயே நானும் அழுதுவிட்டேன்!!! அம்மா அப்பா உண்மையிலேயே எனக்கு நீங்கள்தான் தெய்வங்கள்!!! அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!!
நன்று
வியாபாரமில்லை காதல் வுமக்கு யாம் செய்தோம் எமக்கு நீர் செய்யவேண்டும் யென்று,சேமநிதி காப்புறுதி சேமிப்பு இவைகளை இழந்தால் வரும் துயரம்.
இளமை வலிமை போனால் பணமே ஆயுள் வுதவி அதையும் இழந்தால் நரகமே இறுதி.அதாவது கண்ணீர்.கூட்டாக வாழ்பவர்க்கு இல்லை அவதி மற்றவருக்கே இவை,மாமியாரை அனுசரித்து போனால்தானே மருமகளை வும்மை மதிப்பால் நானே ராஜ நானே மந்திரி வாழ்க்கை வாழ்ந்தால் ஒருவரும் வுதவார்.
பிள்ளைகளை மட்டும் நம்பாதே வுற்றார் வுரவினர் அவசியம்,வுன் மகன் வும்மை எதிர்த்தால் அலட்சியம் செய்தால் தட்டி கேட்பார்கள்,அடக்கி வைப்பார்கள் புரிந்தால் சரி,
வுமக்கு யாரும் இல்லை என்பதால் கேட்பாரு அற்றதால் முதியோர் இல்லம் அநாதை ஆசிரமம் அவசியமாகிறது.
அணைத்து குற்றமும் அந்த தாயையே சாரும்,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை,
வாழ்க நாராயண நாமம்.
அருமை . படித்தவுடன் கண்களில் ஈரம் கசிந்தது
அன்புடன் பதுமன்
என்னை பெற்ற என் அன்னை படிப்பு அறிவு இல்லாதவர் ஆனால் அறிவு ஞானம் உள்ளவர் -நான் வேலை நிமித்தம் ஊர் சுற்றிய பொது திடீர் என்று மறைந்து விட்டார்– இன்றும் என்னால் இதை ஏற்கமுடிய வில்லை -23 ஆண்டுகள் கடந்து விட்டது– நான் கடவுள் (சாமி) கும்பிடும் வழக்கம் கிடையாது. ஆனால் அவரையும் அவருக்காகவும் அன்றிலிருந்து இன்றுவரை வணங்குகிறேன். என் மனக்கண்ணில் ஒவ்வொரு வினாடியும் அவரை நினைவுகூறுகிறேன்– எவ்வளவோ அவருக்கு செய்திருக்கமுடியும் செய்திருக்க வேண்டும்– இவ்வளவு அவசரத்தில் என்னை பிரிவார் என்று என்ன வில்லை. அவரை நான் தொலைக்காட்சி வழியில் பதிவு செய்ய மறந்து விட்டேன்– என் இதயம் இன்றும் கணத்துக்கொண்டே இருக்கிறது.
இவங்களுக்கு சந்தர்ப்பம் கிடைச்சா போதும்? சுய பச்சாபம் தேடுவான்கள்…
அட நன்றாக இருக்கிறதே ….
அஞ்சான் அவர்களே யாரை குறிப்பிடுகின்றீர்? நான் என்றுமே யாரிடமிருந்து பச்சாதாபத்தை எதிர்பார்ப்பதும் இல்லை ஏற்பதும் இல்லை– என் தாயாரை பற்றி கூறினால் அதன் வழி சிலராவது நான் செய்யாததை செய்வார்கள் என்றுதான்/