இனவாதத்தைக் கிளப்புவது, பிற இனத்தவர்களை இழிவுப்படுத்திப் பேசுவது, மற்ற சமயத்தினரின் நம்பிக்கைகளை கேலி செய்வது போன்ற நடவடிக்கைகள் அறிவுள்ளோர் மேற்கொள்ளமாட்டார்கள். மேற்சொன்ன செயல்கள், நடத்தைகள் யாவும் குற்றமென சட்டம் கூறுவது உண்மை; ஆனால், இன்று மலேசியாவில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வது வெட்கக்கேடானதாகும்.
இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்கின்ற நாம், முன்னேறிய நாடுகளோடு சேர்ந்துவிடவேண்டும் என்கின்ற உத்வேகம் நாட்டில் பரவலாகக் காணப்படும்போது இனத்துவேஷம், பிற இனங்களை அவமதிப்பதும், மற்ற சமயங்களை இழிவுப் படுத்துவதும் நாகரிகமான செயலாகக் கருத முடியாது.
முன்னேற்ற நாடுகள் என்ற பட்டியலில் சேர்த்துக்கொள்ளும்போது வெறும் பொருளாதார செழிப்பை அடைந்துவிட்டதை தரப்படுத்தப்பட்ட அளவாக மட்டும் கருதாமல் நாட்டில் பிற இனங்களுக்கும், பிற சமயங்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையைப் பற்றியும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து.
நம் நாட்டின் அரசமைப்புச் சட்டம் சில அடிப்படை உரிமைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. குறிப்பாக இஸ்லாம்தான் கூட்டரசின் சமயம் என்றபோதிலும் மற்ற சமயங்கள் அமைதியுடனும், இணக்கத்துடனும் வழிபடலாம் என்கிறது அரசமைப்புச் சட்டத்தின் 3ஆம் ஷரத்து.
அடுத்து, எல்லோரும் சட்டத்தின் முன் சமம், சட்டத்தின் சமமானப் பாதுகாப்பு உண்டு என்கிறது அரசமைப்புச் சட்டத்தின் 8ஆம் ஷரத்து. இதன் பொருள் என்ன? இங்கு கொடுக்கப்பெற்ற பாதுகாப்பு இரண்டு வகையாகும். ஒன்று சட்டத்தின் முன் எல்லோரும் சமம். அடுத்து சமமானப் பாதுகாப்பு. எனக்குப் பாதகம் நேராத வகையில் சட்டம் பாதுகாக்க வேண்டும். சட்டத்தின் சரிசமமான பாதுகாப்பு எனக்கு உண்டு. அதேவேளையில் எனக்குத் தீங்கு செய்பவர்க்கு சட்டம் சரிசமமான கடமையைச் செய்து தண்டனை வழங்கவேண்டும்.
இனத்துவேஷம் ஒன்றும் புதிதல்ல, சமயத் தகராறு சமயங்கள் முலைத்தக் காலந்தொட்டு வளர்க்கப்பட்ட கலையாகும். ஆனால், பிற சமயங்களை இழிவுப்படுத்துவதை கடிந்து, தடை செய்தார் அசோக சக்கரவர்த்தி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு.
இனத்துவேஷம், பிற சமயங்களை கேலி செய்வது இவை அனைத்தும் நாகரிக உலகில், கட்டுப்பாடான, சுபிட்சமான வாழ்வுக்கு பொருந்தாது என்பது ஒருபுறமிருக்க; இவை கட்டுப்படுத்தப்படாமல் விட்டால் பொருளாதாரத்திலும் பின் தங்கும் நிலை ஏற்படலாம் என்பதை உணர்ந்த வெள்ளைக்காரர் காலனித்துவ வாதிகள், இனத்துவேஷம், சமயத்துவேஷம் போன்ற நடவடிக்கைகள் சட்டவிரோதச் செயல்கள் என்று சட்டத்தை வகுத்தனர். அதுவே தண்டனைச் சட்டம் (Penal Code).
அதில் 504ஆம் பிரிவின்படி யாராவது பொது அமைதிக்குலைவு ஏற்படுவதற்கு காரணியாக இருப்பின் ஈராண்டுவரை நீடிக்கும் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அது ஒருபுறமிருக்க, பொதுத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்தோடு நடந்து கொண்டால் அதுவும் குற்றமென்கிறது தண்டனைச் சட்டத்தின் 505(b), (1)பிரிவு. இந்தச் சட்டத்தின்படி ஈராண்டு சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டுக்குமே ஆளாகலாம்.
சமய உணர்வுகளைப் பாதிப்புறச் செய்யும் சொற்கள், பேச்சு நடவடிக்கைகள் யாவும் குற்றமென்கின்றன தண்டனைச் சட்டத்தின் 298, 298A பிரிவுகள்.
1948ஆம் ஆண்டின் நிந்தனைச் சட்டத்தின் 3(e)ஆம் பிரிவின்படி இனத்துவேஷ நடவடிக்கை குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதல்முறை குற்றத்திற்கு ஐயாயிரம் வெள்ளியும் மூன்றாண்டுவரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சட்டம் இருக்கிறது, அது அமலாக்கப்பட்டால்தானே அதன் வலிவும், அது தரும் வலியும் தெரியும். வெறும் உதட்டளவில் இனத் துவேஷ, சமயச் சர்ச்சையை கிளப்பும் அசிங்கமான நடவடிக்கை கண்டிப்பதால் பலன் இல்லை. அதோடு, சட்டத்தால் மட்டும் இந்த இனத் துவேஷ, சமயத் துவேஷ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இயலாது. மாறாக இவற்றிற்கு எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக பள்ளிக்கூடங்களில் இன சமய ஒற்றுமையை வலியுறுத்தும் பாடங்களை கற்பிக்கவேண்டும்; நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
இன, சமய ஒற்றுமையின் அவசியத்தை, முக்கியத்துவத்தை ஒரு கடமையாகக் கொண்டு நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவெண்டும். இன சமய ஒற்றுமை செய்தியைப் பரப்பவேண்டும். இதை அரசுதான் செய்யவெண்டும். பொது இயக்கங்களும், பொது மக்களும் இதில் பங்குபெறலாம். உதாரணத்திற்கு லஞ்ச ஒழிப்பு, போதைப் பொருள் தடுப்பு போன்ற செய்தி மக்களிடம் சேர சுவரொட்டிகள், திரைப்பட துணுக்குகள், போன்ற செய்திகள் பரப்புவதுபோல் இனத் துவேஷம், சமய எதிர்ப்பு நடவடிக்கைகள் நாட்டின் நலனைக் கொடுக்கும் என்று வலியுறுத்தும் செய்திகள் இலக்கியங்கள் படைக்கப்பட்டால் நன்மை பயக்கும்.
நிரந்தர சுபிட்சத்துக்கும், நாட்டில் அமைதி நிலவ இன, சமய, நல்லிணக்கம் தேவை. இதைப் புரியாமல் நடந்துகொள்பவர்கள், செயல்படுபவர்கள் நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் சக்திகளாவர்.
வீடு சரியாக இருந்தால் , நாடு சரியாய் இருக்கும் !
Mr.தாஸ், நீங்கள் கூறுவதுபோல, சமய விவகாரங்களில் முறைக்கேடுகள் நடந்தால், Penal Code பிரிவு 298 தண்டனை வழங்குகிறது. அண்மையில், தலைநகரில் Baju Merah வினர் நடத்திய கலவரம் உங்களுக்கு தெரியும். அதில், சீனக் கல்விச் சாலைகளை மூடவேண்டும் என கோஷமிட்டிருந்தனர். அதனால், இவர்களை தண்டிக்க, கல்வி விவகாரச் சட்டங்கள், Penal Code ல் இல்லையே, ஏன்?
ஐயா இந்த நாட்டில் இன சமய நல்லிணக்கம் கெட்டுப் போனதற்கு அம்னோ அரசியல் தலைவர்களும் , சமய தீவிரவாதிகளும் தான் காரணம். ஒரு இனத்தையோ , சமயத்தையோ இழிவு செய்யும் போது உடனடியாக அதற்க்கு தீர்வு அல்லது ஒரு நடவடிக்கை அரசு கண்டிப்பாக எடுக்க வேண்டும் ஆனால் இங்கு ஆட்சிப் புரியும் அமைச்சர்களோ கண்டும் கானது இருப்பதால் தொடர் கதையாகவே போய்க்கொண்டு இருக்கிறது.தற்சமயம் இதற்க்கு ஜொகூர் சுல்தான் போல் சமய விழாக்களில் கலந்துக் கொள்வது மட்டும் இல்லாமல் இன சமயத்தை இழிவு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு செய்தார்கள் என்றால் சற்று குறைய , இன பேத விரிசல் இல்லாமல் போக வாய்ப்புகள் உள்ளது.இதை மற்ற மாநில சுல்தான்களும் பின்பற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பொருளாதாரத்தின் வளர்ச்சி மாத்திரம் வளர்ச்சி அடைந்த நாடு ஆகாது.பல துறைகளில் மாற்றங்கல் வர வேண்டும்.
இந்த்தியாவில் டில்ஹியில் ஹிந்து ஆலயம் பாதுகாப்போடு இருப்பதற்கு சீக்கியர்கள் பலர் ஹிந்து மதம் மாறியதே காரணம்.
மலேசியாவிலும் பெரும் சமுகம் சிலர் ஹிந்து ஆனால் மதிப்பு காணும்,சுபிட்ஷம் ஏற்படும்.
மச்யரகாட் அந்தாரா பங்சா தகுதி பெற அனைவரும் கல்வி பெறுதல் அவசியம்.
வாழ்க நாராயண நாமம்.
பொது மக்கள் விலைவாசி ஏற்றத்தால் சினம் கொண்டு கிடக்கும் நேரத்தில் இனவாதம் கிளப்பிவிட்டால் அம்னோ BN கொஞ்சம் காலம் குளிர் காயலாம் ஐயா ! இனவாதம் கிளப்பி விடுபவர்கள் அம்னோ BN விசுவாசிகள்,சட்டம் பதுங்குமே தவிர பாயாது சாமி !
நண்பர் kayee ammu! உங்கள் விளக்கத்தில் சிறு திருத்தம். சென்ற மாதம் நான் டில்லி போயிருந்தேன். விமான நிலையத்திற்கு அருகே ஒரு பழம்பெரும் ஹிந்து கோவில் ஒன்று உள்ளது. அவ்வாலயம் 1898ல் கட்டப்பட்டது என ஒரு சிறிய கல்வெட்டில் எழுதப்பட்டிருந்தது. டில்லியில் சீக்கியர்களை போல ஹிந்துக்களும் அதிகம். இவர்கள் யாரும் மதம் மாறியவர்கள் அல்ல. வாழையடி வாழையாக ஹிந்துக்களே. ஹாரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மட்டுமே சீக்கியர்கள் அதிகம். வட இந்தியாவில் மதமாற்ற பிரச்சினைகள் மிகக் குறைவு.
முன்பு பலமுறை சொல்லி இருக்கிறேன்— ஜோன் கென்னெடி போன்ற தலைவர் இனி பிறப்பாரா என்பது சந்தேகமே. இரு கருப்பு இன மாணவர்களின் பாதுகாப்புக்காக 14000 துருப்புகளை அனுப்பியவர்.இது தலைமைத்துவம். நியாயம் நீதி எல்லாம் ஊழல் வாதிகளுக்கு புரியாது. புரிய வேண்டிய தேவை இல்லையே.
ஆளுங் கட்சியே இனவாதத்தை ஊக்குவிப்பதால் இனவாதம் குற்றமாகக் கருதப்படுவதில்லை! அதனால் தண்டிக்கப் படுவதும் இல்லை! குற்றம் என்பது பொதுமக்களுக்கு மட்டுமே!
என்னுடைய கருத்து வேறு சிங்கம்.எப்படி நலமா நண்பரே,வாழ்க வளமுடன்,
வாழ்க நாராயண நாமம்.
சட்டம் நுருல் இசாவை தாக்கவில்லையே கிரிமினல் குற்றமானாலும் மன்னிக்க வாய்ப்புள்ளது ஆனால் அவள் நாட்டு துரோகி மன்னிப்பே கிடையாது,சட்டம் என்ன செய்கிறது தூங்க்கு கிறதோ ?,
நாராயண நாராயண.