தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதன் பின்னணியில் பரபரப்பு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் ஏமாற்றி விட்டார்கள்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ஆம் திகதி முதல் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் இன்று மதியம் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த அவசர சந்திப்பு, சுமார் அரை மணி நேரம் இடம்பெற்றது .இந்த ஆலோசனை சந்திப்பின் பின்னர் மாலை 6 மணியளவில், ஆளுநர் மாளிகைக்கு, மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விஜயம் செய்தனர்.
இந்த விஜயத்தின் போது ராமமோகன் ராவும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என அப்பல்லோ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்கலாமா என்றும், துணை முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
முன்னதாக இன்று காலை தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் சீர் குலைந்துவிட்டதாக பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசிடமிருந்து ஆளுநருக்கு, கொடுக்கப்பட்ட சமிக்ஞைகளை தொடர்ந்து இதுபோன்ற தற்காலிக ஏற்பாடுகளை நோக்கி ஆளுநர் நகர்வுகள் அமைவதாக கருதப்படுகின்றது.
எனினும், கடைசியில் காவிரிப் பிரச்சினை குறித்தும், அரசாங்க ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்றும் பேசி தெரிந்து கொண்டதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது.
இதனையடுத்து குறித்த இருவரினதும் பரபரப்பான விஜயம் அட போங்கப்பா.. என்று சப்பென்றாகி விட்டது அத்தனை பேருக்கும்.
-http://www.tamilwin.com
வாழ்த்துக்கள்
நாடகம் அரங்கேறியுள்ளது.
தற்காலிக …இடைக்கால …நடப்பியல் …
உதவியல்..உருப்படியான இப்படி பல
இலக்கிய முன்னோடிகள் உண்டு,
பொய் சொல்லக்கூட நிபுணர்கள்
வேண்டும். அதுதமிழர் நாட்டு
அரசியலில் மட்டும்தான் நடப்பியலாகும்.
காரணம் கவனர் சுவாரிசமான தெலுங்கர் ?
செப்புடான்னுடா !
திரு. பொன் ரங்கன் அவர்களே, இதற்கு என்ன இருகிறது தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடம் என்று. என்னை கேட்டால். நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது அறிவு. எவன் ஒருவன் தன் அறிவை சரியான இடத்தில் பயன் படுத்துகிறனோ அவன் சரியான இடத்தில் அமர்வான். உங்களுக்கு நோய் வந்து மருதுவரை பார்க்கும் பொழுது அவரிடம் நீர் தமிழரா, தெலுங்கான, மலையாளியா, கன்னடகறன என்று கேட்டா மருதுவம் பார்ப்பிர்கள். உலகம் இன்று அறிவியல் துறையில் முன்னேறி கொண்டு இருகிறது. நாம் ஏன் இப்படி இருக்கிறோம். எப்போ திருந்துவோம் ஐயா. தமிழ் நாட்டை அரசியல் வைத்து நாம் இங்கு இப்படி எழுதினால் திருந்த மாட்டோம். (தற்காலிக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம்…!) தலைப்பு நல்ல கருதை கூறலமே. ஏன் தெலுங்கனை இழுக்க வேண்டும் ஐயா. இங்கு இருக்கும் அரசியல் வாதிகள் நிறைய தெலுங்கர்கள். என்ன சொல்ல போகிறிர்கள். அடுத்து அவர்களிடம் தமிழன் வேலை செய்கிறானே. புரியவில்லை ஐயா. உங்களின் கோண புத்தி.