வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.
இத்தனை கவிதைக்கும் அர்த்தங்கள் தந்தவன் நீ
என் வாழ்வின் வாசம் நீ
என் பிறப்பின் பயணம் நீ
என் கனவின் சுய ரூபம் நீ
என் முதல் சிரிப்பும் நீ
என் இறுதி கண்ணீரும் நீ
ஆனால் அறிவாயா என் உயிரே
உன் சின்ன விழி சிதைக்க வந்தவள் நானென்று ..
உன் உயிரை உறைய வைத்த முதல் ராச்சசி நானென்று
உறவை உயிர்ப்பிக்க உயிரை கொன்றவள் நானென்று
பழகிய நாள் முதல் இன்று வரை சங்கடங்கள்
அதிகம் தந்தவள் நானென்று
புதுப்பித்த பூக்கள் இரண்டு இருள் கொண்டது
என்னால என்று மட்டும் தெரியவில்லை ..
மொத்தம் சிரித்த நாட்களை உடைத்து எரிந்தது
ஏன் தோழனே …
நீ இன்றி அகண்ட ஒரு இருட்டில் அழவைத்தது
ஏன் தோழனே
நித்தம் ஒழிக்கும் உன் அலை பேசி குரல் காணாமல் போனது
ஏன் தோழனே
சிரிக்க வைத்தாய்,அழ வைத்தாய் ,
ஆறுதல் கூற மறந்தது ஏன் தோழனே
உன்னை விட்டொரு உயிர் உடன்
நான் நலம் கொள்வேன் என்று எண்ணினாயா ..
உன்னை மறந்தும் புன்னகை பூபேன் என்று எண்ணினாயா
சிதைத்த ஒரு காதல் என்னை மாற்றும் என எண்ணிணாய ..
அட பைத்தியமே
நெஞ்சுக்குள் புதைத்து வைத்த என் நட்பை
யாரேனும் எடுக்க நினைத்தால்….
என் உயிரை களைத்தல்லவா எடுக்கமுடியும்
உயிரை கலைத்து எடுக்கும் முன் உன்னுள் நான் உறங்கி போக மாட்டேனா
-திவ்யா