இந்தியாவில் பசுமாடுகளை ஏற்றிச் சென்ற நபரை 15 பேர் கொண்ட கும்பலொன்று தாக்கியதில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பால் கான் ஹரியானாவைச் சேர்ந்த இவர் (இஸ்லாமியர்) கடந்த 1 ஆம் திகதி ஜெய்பூரில் இருந்து பசுமாடுகளை வாங்கிக் கொண்டு வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.
அப்போது வாகனம் தேசிய நெடுஞ்சாலை 8 ல் சென்று கொண்டிருந்த போது பசு காவலர்கள் மாடுகளை ஏற்றிச் சென்ற நான்கு வாகனங்களையும் நிறுத்தி, உள்ளே இருந்த நபர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இதில் நான்கு நபர்கள் படுகாயமடைந்ததாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் பால் கான் என்ற 55 வயது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-http://news.lankasri.com