டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த விவசாயிகள் போராட்ட குழு தலைவர் பேசியதாவது, தமிழக முதல்வர், தி.மு.கவின் செயல் தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதியன்று நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில் தங்கள் பங்கேற்க போவதாகவும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
”எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மே 25-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் இதை விட பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்த அய்யாக்கண்ணு, தாங்கள் இன்றோ, நாளையோ தமிழகம் திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.
-lankasri.com