பெண்ணை தாக்கிய பொலிசுக்கு பதவி உயர்வா? கொந்தளித்த மக்கள்

policeதமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை அறைந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் சாமளாபுரத்தில் நடந்த மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பொலிஸ் தடியடி நடத்தினர், ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண்ணை ஓங்கி அறைந்ததில் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.

இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பாண்டியராஜனுக்கு ஈரோடு மாவட்ட சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.ஆக பதவி உயர்வு வழங்கியுள்ளது தமிழக அரசு.

பெண்ணை தாக்கியவருக்கு பதவி உயர்வா என மக்கள் கொந்தளித்துள்ளனர்.

-lankasri.com

https://youtu.be/iD5Vqv0L6m4

TAGS: