இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை, பெண்கள் கட்டிவைத்து அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ரும்காரா மாவட்டத்திற்கு உட்பட்ட ராம்கர்க் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, உறவினர் திருமணத்திற்காக குதுமித் பகுதிக்கு பெற்றோருடன் சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமியை மிதுன் அன்சாடா என்பவன், அருகிலுள்ள வனப்பகுதிக்கு கடத்தி சென்று, கொடூரமாக கற்பழித்து கொலை செய்துள்ளான்.
தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள், மிதுன் அன்சாடாவை கண்டுபிடித்து ராம்கர்க் கிராமத்திற்கு இழுத்து வந்துள்ளனர்.
பின்னர் பொதுவெளியில் அவனை கட்டிவைத்து அடித்தனர். அப்போது ஆவேசம் கொண்ட பெண்கள், பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை கொடூரமாக தாக்கியதில் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த இளைஞனை பெண்களே அடித்து கொன்ற சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-lankasri.com
சட்டம் தூங்கி கொண்டிருந்தால் இது தான் நடக்கும்!
சரியான தண்டனை. காம வெறி பிடித்த மனித மிருகத்தை கொள்வதில் தவறில்லை.
இந்தியாவில் கற்பழிப்பு கலாச்சாரம். தமிழ் படங்களை பாருங்கள்– பெண்களை கொடுமைப்படுத்துவதும்-கலாட்டா பண்ணுவதும் கற்பழிப்பு காட்சிகளும் படம் முழுவதிலும் இருக்கும்– அப்படி செய்வது தினசரி நடக்கும். பெண்களை அப்படி காட்டாவிட்டால் இந்த நாதாரிகள் தூங்க மாட்டார்கள். அவனுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது. தமிழ் நாட்டில் எத்தனை குழந்தை கற்பழிப்புகள்?