ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்களின் கைது நடவடிக்கையின் -உண்மை காரணம்.!

ஐயா ஹீலர் பாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். அவர் சுகப்பிரசவம் குறித்த வகுப்பு நடத்த விளம்பரம் கொடுத்து இருந்தார், அதனால் கைது செய்கிறோம் என காரணம் கூறுகிறார்கள்…

ஆனால் உண்மையில் காரணம் அதுவல்ல. இது ஒன்றும் முதல் வகுப்பல்ல. சுகப்பிரசவம் குறித்து ஏற்கனவே பல வகுப்புகள் – மருட்டி பிரசவம் – நடத்தி உள்ளார். அப்போது கைது செய்யவில்லை. மேலும் 8 வருடங்களாக நோயில்லாமல் வாழ கற்று கொடுத்து வருகிறார்…

இப்போது இரண்டு வருடங்களாக தற்சார்பு வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களையும் கற்று கொடுத்து வருகிறார். தேங்காய் எண்ணெய் சோப்பு , செக்கு நல்லெண்ணெய் , செக்கு கடலை எண்ணெய், தூய தேங்காய் எண்ணெய், இயற்கை அரிசி, இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள், இயற்கை உணவு பொருட்கள், இன்னும் பல…

மேலும் தற்சார்பு வாழ்க்கைக்கு தேவையான பயிற்சியை அளிக்கவும் உள்ளார். இதற்கான வகுப்பு வரும் “ஆகஸ்ட் 15” அன்று சென்னையில் நடக்க உள்ளது. இதில் நம் வீட்டில் பயன்படுத்தும் “42” வகையான பொருட்களை நாமே குறைந்த செலவில், தரமாக தயாரிப்பது எப்படி என ஹீலர் பாஸ்கர் பயிற்சி தர உள்ளார். மேலும் பன்னாட்டு நிறுவன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அந்த வீடியோவில் கூறி உள்ளார்…

ஏற்கனவே குளியல் சோப்பு , கலப்பட எண்ணெய் மார்க்கெட் இவரால் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது . பலரும் தூய தேங்காய் எண்ணெய் சோப்பு, செக்கு எண்ணெய்க்கு மாறி வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இதில் பலத்த அடி. “வருமானம் இழப்பு”…

இதில் மேலும் 42 பொருட்கள் குறித்த பயிற்சி என்றால் சும்மா விடுவார்களா கார்ப்பரேட் முதலாளிகள்..! எதாவது காரணம் கிடைக்குமா என்று காத்திருந்து. இந்த சுகப்பிரசவ பயிற்சியை காரணமாக வைத்து கைது செய்து விட்டார்கள்…

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இயற்கை மருத்துவம் பற்றி கூறினால் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆங்கில மருத்துவத்தை பற்றி குறை கூறினாலும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் பெரும்பாலும் மீடியாக்கள் மூலமாக பிரச்சாரம் செய்து , பயம் காட்டி ஆங்கில மருத்துவத்தை நடத்தி விடலாம். முட்டாள் மக்கள் என்ன சொன்னாலும் நம்புவார்கள் என அவர்களுக்கு தெரியும்.

ஆனால் தற்சார்பு வாழ்கை என்று பேசினால் போதும். உங்களை கைது செய்து விடுவார்கள். ஏனென்றால் கார்ப்பரேட்டுகள், இல்லுமினாட்டிகளுக்கு அவர்கள் வியாபாரம் முக்கியம். அதை இழக்க ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அதற்காக எதையும் செய்வார்கள்…

தற்சார்பு பேசுபவன் கார்ப்பரேட் கம்பெனிகளின் முதல் எதிரி. சுதந்திர தினத்தன்று , கார்பொரேட் கம்பெனி பொருள்களில் இருந்து விடுதலை தர நமக்கு பயிற்சி தர இருந்தார் ஹீலர் பாஸ்கர்…

அவர்களது வியாபாரத்தில் கை வைத்தால் கார்ப்பரேட் அலறுவான். அதிகாரத்தை பாய்ச்சுவான். இதுதான் ஹீலர் பாஸ்கருக்கும் நடந்தது…

உலகத் தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம்… www.facebook.com

TAGS: