மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 14 முறை அவகாசம் கொடுக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 157 பேரிடம் விசாரணை நடத்தியது.
ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியில் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை ஆவணங்களை ஆய்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணைம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், 5 ஆண்டு விசாரணைக்கு பின் அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறது. சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார்.
3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் 14 முறை ஆணையத்திற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.
-mm