அதிகாரம் படைத்தவர் பட்டியல்: சோனியா காந்திக்கு 6-வது இடம்

நியூயார்க்:  அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் அங்கீகாரம் படைத்த 100 பெண்மணிகள் பட்டியலில் இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி 6 வது இடத்தையும், ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முதலிடத்தையும் பிடித்துள்ளனர்.

போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வோர் ஆண்டும் உலகின் அதிகாரம் படைத்த 100 பெண்மணிகள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சோனியாவை தவிர பெப்ஸி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவன அதிகாரி பத்மஸ்ரீ வாரியர், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைவர் சாந்தா கோச்சர், பயோகான் நிறுவன அதிபர் கிரண் மஜூம்தார் ஆகிய இந்திய பெண்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

TAGS: