மாவோ தாக்குதல் எஸ்.பி உள்பட 5 பேர் பலி: கூடுதல் போலீசார் விரைவு

india03713bராஞ்சி: ஜார்கண்ட்டில் மாவோக்கள் நடத்திய தாக்குதலில் 5 போலீசார் பலியாகி இருப்பதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. ஜார்கண்ட் , சட்டீஸ்கர் மாநிலங்களில் மாவோ.,க்கள் அட்டூழியம் அவ்வப்போது தலை தூக்குவதும் பின்னர் அமைதி ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

நக்சல்கள் போலீசாரை குறி வைத்து தாக்குகின்றனர். கடந்த மாதம் சட்டீஸ்கரில் காங்., முன்னாள் மத்திய அமைச்சர் சுக்லா மற்றும் காங்., நிர்வாகிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இன்று பாகுர் மாவட்டம் கத்திகுர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட எஸ்.பி., அமீர்ஜித் பாலிகார் தனது பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்று கொண்டிருந்தார். இந்நேரத்தில் மறைந்து இருந்த நக்சல்கள் போலீஸ் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் . இதனையடுத்து இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி அமீர்ஜித் மற்றும் 4 போலீசார் கொல்லப்பட்டனர். இந்த பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அர்ஜூன்முண்டா கண்டனம் : இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்வர் அர்ஜூன்முண்டா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இது போன்ற கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

TAGS: