உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் – யுக்தா முகி

india06713bமும்பை : உலக அழகியும், பிரபல நடிகையுமான யுக்தா முகி தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் மும்பை அம்போலி போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

யுக்தா முகி 1999 ல் நடந்த உலக அழகி போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர். இவர் பிரின்ஸ் துளி என்பவரை கடந்த 2008 ல் திருமணம் செய்தார். நியூயார்க்கை மையமாக கொண்ட வர்த்தகம் மற்றும் பைனான்ஸ் கன்சல்டன்ட் துளி. 35 வயதான முகிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இவர் போலீசில் அளித்துள்ள புகாரில் ; எனது கணவர் என்னிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி சண்டை போடுகிறார் . இயற்கைக்கு ஒவ்வாத செக்ஸ் புணர்ச்சிக்கு என்னை வற்றுபுறுத்துகிறார், மேலும் என்னை அடித்து துன்புறுத்துகிறார். இது குறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து போலீசார் செக்ஷன் 498 ( கொடுமை படுத்துதல் ) செக்ஷன் (377 ) இயற்கைக்கு ஒவ்வாத புணர்ச்சி ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் பாலிவுட் நடிகை ஜியாகான் தற்கொலை செய்தார். இது போல் பாலிவுட் நடிகைகள் பலர் தங்களின் கணவர் மீது அடிக்கடி புகார் கூறுவது இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். உலக அழகியாக இருந்தவர் யுக்தா என்பதால் போலீசார் இந்த புகாரை அலட்சியம் செய்யாமல் முக்கியத்துவம் கொடுத்து விசாரித்து வருகின்றனர்.

TAGS: