இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் எல்லாப் பெரிய நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவை பாதுகாப்புப் படையினர் அமல்படுத்தி வருகின்றார்கள்.
பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிரிவினைவாதக் குழுக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்களை தடுக்க ஆட்சியாளர்கள் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள்.
வியாழனன்று, ராணுவ முகாமுக்கு வெளியே கூடிய ஒரு கூட்டத்தை கலைக்க இந்திய சிப்பாய்கள் சுட்டதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் , மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்தப் பகுதியில் இருந்த ஒரு மசூதியில் இந்திய எல்லைப்பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையைக் கண்டித்து இந்த கூட்டத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்திருந்தனர்.
பாதுகாப்புப் படையினர் மதக் கல்வி பயிலும் மாணவர்களை தாக்கியதாகவும், புனிதக் குரானை அவமதித்ததாகவும் கிராமவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த ஒரு விசாரணைக்கு இந்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். -BBC
சாவgrgdவலைபாலம் போல் மேருகுடு நி sயூஸ் ப jhfadbhaVTV DVAVDAGGSDVADTVATFTCTSDAFSDCSAFFDSTFSVCJZGFSYUZCVYUDVCHZVCYVYUSDVFYSVCHVYUFVZSUVABBBIA IJIBROTI KUIH ROTI MAVU PONRA