கவுகாத்தி : குறைந்த விலையில் நிறைவாக சாப்பிட முடியும் என அரசியல் தலைவர்கள் பலர் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வரும் வேளையில் ஒருவருக்கு தலா ரூ.2.50 என்ற விகிதத்தில் ரூ.20ல் 8 பேர் நன்றாக சாப்பிடலாம் என அசாம் மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் நிலோமோனி சென் தேகா தெரிவித்துள்ளார்.
மேலும் அதனை தான் நிரூபித்து காட்டவும் தயாராக உள்ளதாக அவர் சவால் விட்டுள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்புகளிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் தருண் கோகோய் தெரிவித்துள்ளார்.
ஆனால் அமைச்சர் தேகா, தனது கருத்திற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை எனவும், இன்னும் ஒரு வாரத்தில் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து அதில் தனது கருத்தை நிரூபிப்பதுடன் ஒவ்வொருவரின் கேள்விக்கும் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.