இலங்கையில் நடைபெற இருக்கும் கொமன்வெல்த் கூட்டம் வேறு நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இலங்கையில் நடைபெற்றால் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரி வளாகத்துக்குள் வெள்ளிக்கிழமை முதல் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் கூட்டம் வேறு நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இலங்கையில் நடைபெற்றால் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும்.
சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் தமிழக அரசின் இலவச லப்டாப் வழங்கப்பட வேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
மத்திய அரசாங்க குழுவினர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டால் தமிழனுக்கு அதை விட அவமானம் வேறு எதுவும் மில்லை