வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com

உன்னை நீ அறிந்தால் ………!!!!
தமிழா !
நெஞ்சுரம் கொண்ட நீ
நசுக்கப் படுகிறாய் …….
நம்மினம் நம் சமுதாயம்
என்ற எண்ணம்
உன் மண்டையில் நிலைக்குமானால்
வெற்றி மீது வெற்றி கிடைக்க
வேர்வை சிந்தி உழைத்துபார்
நீ கோட்டைவிட்ட அனைத்தும்
உன் வசம் வரும் ……. !!!!
கல்வி பொருளாதாரம் மதம் இனம்
அனைத்திலும் நீயே உனக்கு நிகர்
உன்னை நீ அறிந்தால்………!!!!
subra klang