கோவணங்களைக் காணவில்லை

kovanam1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில்
நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம்.
விடிந்து பார்க்கும்பொழுது
எங்கள் கோவணங்களைக் காணவில்லை.

எங்கள் மேலே ஒரு போர்வை போர்த்தியிருந்தார்கள்
அது இந்திய தேசியம் என்றார்கள்.
கோவணங்கள் எங்கே என்று கேட்டோம்?
அதுதான் தேசியக் கொடியாய்ப் பறக்கிறது என்றார்கள்.

தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம்
விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம்.
வாருங்கள் அந்தக் கொடியை இறக்கிக் கிழித்து
அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்.

– கவிஞர் அறிவுமதி