இந்தியாவின் வடகிழக்கே மணிப்பூர் மாநிலத்துக்குள் நுழைந்து, பர்மிய இராணுவம் ஒரு முகாமை அமைக்க முயன்றதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் கணிசமாக வாழும் மோரே பகுதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து தமிழோசையிடம் பேசிய மேரே தமிழ் சங்கத் தலைவர் வி. சேகர், அந்தப் பகுதியில் பர்மியப் படைகள் நிரந்தர முகாமை அமைக்கவில்லை என்றும் முகாம் அமைக்கும் நோக்கில் ஒரு இடத்தை அவர்கள் சுத்தப்படுத்துவதை அறிந்த மாவட்ட அதிகாரிகள் அங்கே நேரில் போய் பார்த்ததாகவும் கூறினார்.
பர்மிய இராணுவம் நுழைந்ததாகக் கூறப்படும் பகுதி யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பில் இந்தியாவுக்கும், பர்மாவுக்கும் இடையே பல காலமாக கருத்து வேறுபாடுகள் நிலவிவருகின்றன. அந்தப் பகுதியில் மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்கள் உள்ளன.
இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு இந்தப் பகுதிகளில் நடைபெற்றதில்லை என்று வி. சேகர் தெரிவித்தார். ஏற்கனவே சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் முறுகல் நிலை காணப்படும் சூழலில் இந்தச் சம்பவம் வந்துள்ளது.
பாகிஸ்தானை தவிர மற்றயேவனும் இவங்க கண்ணுக்கு தெரியாது சீனா, இலங்கை. தற்பொழுது பர்மா.
அண்டை நாடுகள் எல்லாம் சொந்தம் கொண்டாடி இந்தியா என்று ஓன்று இல்லாமல் போகவேண்டும். அன்றுதான் தமிழர்களுக்கு விடிவெள்ளி!!!!
உன்மயை சொணிங்க சார் அதுவும் காங்கிரஸ் ஒழியனும்.
அடபோங்கையா.. இத்தாலி டில்லியிலேயே முகாமிட்டுவிட்டது.. எல்லையைப் பற்றி இப்போதுதான் கவலைப் படுகிறீர்கள்…