மாலை மயங்கும் வேளை
மனமது மயங்கி நின்றேன்
சோலையில் பூக்களின் கூட்டம்
வண்டிற்கோ அதன் மேல் நோட்டம்
விண் முகில் வானில் பல கோலம்
குருவிகள் கீச்சிலே பல ஜாலம்
சில்லென தென்றல் தழுவிச் செல்ல
மனமோ மயங்கி எங்கோச் செல்ல
மலர்களின் மணமோ மேளும் மெருகேற்ற
என் மனமோ துவங்கியது உன்னைச் சுற்ற
அந்த நாள் ஞாபகம் என்னை வாட்ட
நீ வருவாயோ ஒருநாள் என்னைத் தேற்ற
சட்டென கார்மேகம் கூடி இடி முழங்க
என் கற்பனை கலைந்ததே இனி எதை எழுத?
-(அரசு, ஈப்போ)