ஆசிரியர் சிறப்பு ஆட்சேர்ப்பு : ‘இதுவரை இடம் கிடைக்காத கல்வித்துறை…

இடைக்கால ஆசிரியர்கள் மற்றும் தற்போதுள்ள ஆசிரியப் பட்டதாரிகளுக்கு ‘ஒருமுறை’ (one-off) ஆசிரியர் சிறப்பு ஆட்சேர்ப்பு திட்டத்தில் முன்னுரிமை அளிக்குமாறும், அதனைக் கட்டங்கட்டமாக செயல்படுத்துமாறு பி.எச். கல்விக்குழு (ஜே.கே.பி.பி.எச்.) கல்வி அமைக்சைக் கேட்டுக்கொண்டது. ஜூலை 7-ஆம் தேதி தொடங்கும் ஆட்சேர்ப்பில், ஆசிரியர் தரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவது குறித்தும், இந்தக் குழு…

பி.எச். : அவசர காலத்தை நீட்டிக்க தேவையில்லை

ஆகஸ்ட் 1-க்குப் பிறகு, அவசரகாலத்தை நீட்டிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) தலைமை மன்றம் உறுதியாக உள்ளது. பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், அமானா தலைவர் மொஹமட் சாபு மற்றும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருக்கு இடையிலான ஒரு கூட்டு அறிக்கையில், அவசரநிலை…

கைரி : கட்டுமானத் துறைக்கான தடுப்பூசி ஜூலை 1 முதல்…

கட்டுமானத் துறை சார்ந்தவர்களுக்கான கோவிட் -19 தடுப்பூசி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி, பொதுப்பணி துறை அமைச்சின் ஒருங்கிணைப்புடன் தொடங்கும். இந்தத் துறைக்கான தடுப்பூசி திட்டம், கட்டுமான தளங்கள் மற்றும் பி.கே.பி. அமலாக்கத்தின் போது செயல்பட்டு வரும் கட்டுமான திட்டங்களில் கவனம் செலுத்தும் என தேசியக் கோவிட் -19…

சோபா விருது விழாவில் மலேசியாகினிக்குச் சிறப்பு விருது

நேற்று இரவு, ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியப் பதிப்பாளர்கள் சங்கம் (சோபா) விருது வழங்கும் விழாவில் மலேசியாகினி சிறப்பு விருதைப் பெற்றது. "அழுக்கு பணம்" புழக்கத்துடன் தொடர்புடைய ஃபின்சென் ஃபைல் (Fail FinCEN) திட்டத்தில் மலேசியாகினியின் ஈடுபாட்டிற்காக, ‘விசாரணை அறிக்கை சிறப்பு விருது’ எனும் அந்த மரியாதைக்குரிய விருது வழங்கப்பட்டது.…

1.9 மில்லியன் பேர் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளை முடித்துள்ளனர் –…

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) கீழ், நாட்டில் இதுவரை 6,823,104 மருந்தளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா தெரிவித்தார். டாக்டர் ஆடாம் தனது கீச்சகத்தின் மூலம், முதல் மருந்தளவை 4,924,334 பேர் பெற்றுள்ளதாகவும், அந்த எண்ணிக்கையில் 1,898,770 பேர் இரண்டாவது மருந்தளவைப்…

அம்னோ உச்சமன்றம் கட்சி தேர்தலை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டது

அம்னோ அரசியலமைப்பின் அடிப்படையில், பெரும்பான்மை உச்சமன்ற உறுப்பினர்கள் கட்சி தேர்தலை 18 மாதங்களுக்கு ஒத்திவைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து, அம்னோ அதை ஒத்தி வைத்தது. அம்னோ உச்சமன்ற உறுப்பினரான ஒருவரின் கூற்றுபடி, இயங்கலையில் செய்யப்பட்ட தீர்மானத்தின் மூலம் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. “தற்போதைய பி.கே.பி. 3.0 காரணமாக, அம்னோ உச்சமன்றக்…

பிரதமராக ஹிஷாமுடின் : அக்கடிதம் போலியானது என்கிறது அவரது அலுவலகம்

புதிய பிரதமராக வர, தனக்கு தேசிய முன்னணியின் (பிஎன்) ஆதரவு இருப்பதாகக் கூறி, செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினர் பேரரசருக்கு ஒரு கடிதம் எழுதியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று பிஎன் பொருளாளர் அலுவலகம் மறுத்துள்ளது. ஆன்லைனில் பரவிய அக்கடிதம் "போலியானது மற்றும் பொய்யானது" என்று ஹிஷாமுடினின் தகவல் தொடர்பு…

முழுமையாக கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக அம்பாங் மருத்துவமனை

சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.எஸ்.), அம்பாங் மருத்துவமனையை ஹைப்ரிட் கோவிட்19-இலிருந்து, முழு கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக, நேற்று (ஜூன் 23) முதல் மாற்ற முடிவு செய்துள்ளது. சிலாங்கூர் மாநிலச் சுகாதார இயக்குநர் டாக்டர் ஷாரி ங்காடிமன் கூறுகையில், கோவிட்-19 நேர்வுகளின் தினசரி அதிகரிப்பு…

நாடாளுமன்றத்தில் போதுமான வசதிகள் உள்ளன, கலப்பின அமர்வு நடத்த தயார்…

தேவைப்பட்டால், எந்த நேரத்திலும் கலப்பின (hybrid) மக்களவை அமர்வுகளை நடத்த நாடாளுமன்றத்தில் போதுமான வசதிகள் உள்ளன. மக்களவை துணை சபாநாயகர் மொஹமட் ரஷீட் ஹஸ்னோன், நாடாளுமன்றமும் தேவையான பிற தொழில்நுட்பப் பகுதிகளைச் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றார். "நிச்சயமாக போதுமான அளவு வசதிகள் தயாராக உள்ளன, அதைச் (கலப்பின…

‘ஐரோப்பாவின் 5 மில்லியன் தடுப்பூசிகளுக்கு என்ன நேர்ந்தது?’

மலேசியாவுக்கு அனுப்பப்பட்டதாக ஐரோப்பா கூறிய ஐந்து மில்லியன் மருந்தளவு தடுப்பூசிகளின் நிலையைத் தெளிவுபடுத்துமாறு அமைச்சர் கைரி ஜமாலுதீனிடம் கேட்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் கோவிட் -19 தடுப்பூசிகளை ஏகபோகப்படுத்துவதாகக் கூறிய கைரியின் குற்றச்சாட்டுகளை ஐரோப்பிய ஒன்றியத் தூதர் மிச்சாலிஸ் ரோகாஸ் மறுத்துள்லதால், இந்தத் தெளிவு தேவை என்று, இன்று ஓர்…

சுல்தான் இப்ராஹிம் : ஜொகூர் சட்டமன்றக் கூட்டம் ஆகஸ்ட் 12-ல்…

ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், ஜொகூர் மாநிலச் சட்டமன்றம், 2021 ஆகஸ்ட் 12-ம் தேதி கூடுவதற்கு ஒப்புக் கொண்டார். கோத்த இஸ்கந்தாரில் நடைபெறவுள்ள அந்தச் சட்டமன்றத்தின் நான்காவது அமர்வுக்கு வருகை தந்து, அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவும் சுல்தான் இப்ராஹிம் ஒப்புக் கொண்டார். "மக்கள் மற்றும் ஜொகூர்…

‘அரசியல் நியமனங்கள் நம்பகத்தன்மையை, பல்கலைக்கழகத்தின் பிம்பத்தைப் பாதிக்கின்றன’

தகுதி இல்லாத அரசியல் நியமனங்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால், உயர்க்கல்வி நிறுவனங்களின் (ஐபிடிஏ) நம்பகத்தன்மையும் பிம்பமும் பாதிக்கப்படும் என்று பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) கல்விக்குழு தெரிவித்துள்ளது. "ஐபிடிஏ-க்களில் உள்ள பதவிகளைத் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசியல் பிரதிநிதிகளுக்குத் தகுதி அடிப்படையில் இல்லாமல் விநியோகிப்பது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஐபிடிஏ-க்களின் பிம்பத்தையும்…

25 பிஎன் எம்.பி.க்கள் ஜாஹிட் மீதான நம்பிக்கையை இழந்தனர் –…

பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜீஸ், தேசிய முன்னணியின் (பிஎன்) 42 எம்.பி.க்களில், பெரும்பான்மையினர் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறினார். யாங் டி-பெர்த்துவான் அகோங் முன்னிலையில் ஆஜராக, செம்புராங் எம்.பி.யும் வெளியுறவு அமைச்சருமான ஹிஷாமுடின் ஹுசேன் அழைக்கப்பட்டால், அவருக்கு…

4,743 புதிய நேர்வுகள், முதலிடத்தில் சிலாங்கூர்

கோவிட் 19 | இன்று நாட்டில், 4,743 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 77 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,554 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 5,557 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…

ஆய்வு : ஊழல்களால் கட்டுமானச் செலவுகள் 15 விழுக்காடு அதிகரிப்பு

பொருட்களின் விலை உயர்வு மட்டுமின்றி, சொத்து மேம்பாட்டு செலவினங்களில், 14.8 விழுக்காடு அதிகரிப்புக்குக் காரணம் ‘ஊழல்’ என ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. "விநியோகச் சங்கிலியில் ஊழல் : நுகர்வோர் மீதான வடிவங்களும் தாக்கங்களும்" (“Corruption in the Supply Chain: Forms and Impacts on Consumers”)…

கணபதி மரணம் : மற்றொரு மலேசியாகினி செய்தியாளரிடம் விசாரணை

மலேசியாகினி செய்தி நிறுவனம் வெளியிட்ட மூன்று கட்டுரைகள் தொடர்பாக, மற்றொரு செய்தியாளரின் சாட்சியத்தைப் போலீசார் இன்று எடுத்தனர். அந்த மூன்று கட்டுரைகளும், கடந்த பிப்ரவரி மாதம், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்துபோன, பால் வர்த்தகர் ஏ கணபதி (40) தொடர்பானவை. மலேசியாகினி செய்தியாளர் பி…

‘கடன் ஒத்திவைப்புக்கான நேர்காணல், இயக்குநர் பதவிக்கு விண்ணப்பித்தது போல் உள்ளது’

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) 3.0 காலகட்டத்தில், அரசாங்கம் வழங்கிய இலக்கு வைத்த கடன் ஒத்திவைப்பு, விண்ணப்பதாரர்களுக்குப் பெரும் சிக்கலைக் கொடுப்பதாக அம்னோ தலைவர் கூறியுள்ளார். அஹ்மத் ஜாஹித் ஹமிடி, விண்ணப்பதாரர்களிடமிருந்து பல புகார்களைப் பெற்றதாகக் கூறினார், அவர்கள் அதற்குத் தகுதி பெறுவதற்கான நேர்காணல் எவ்வளவு கடினமாக உள்ளது…

‘14 நாட்கள் நாடாளுமன்றம் திறப்பு : அம்னோ அரசியல் பணியகத்தின்…

நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்க, அம்னோ வழங்கிய 14 நாள் காலக்கெடு அம்னோ அரசியல் பணியகத்தின் முன்மொழிவு, உச்சமன்றத்தின் பரிந்துரையல்ல என்று அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். கொள்கையளவில், அரசியல் பணியகம் ஒரு கருத்தைச் சமர்ப்பிக்க முடியும் என்றாலும், கட்சியின் முடிவு உச்சமன்றத்தின் முடிவுக்கு உட்பட்டது…

எஸ்.பி.எம்.-இல் 9ஏ பெற்ற மாணவர், மாற்றுத்திறனாளி என்பதால் பல்கலைக்கழக வாய்ப்பு…

மாற்றுத் திறனாளி (ஓ.கே.யூ) மாணவர் ஒருவர், அவரது உடல் நிலை காரணமாக உள்ளூர் பொது உயர்க்கல்வி நிறுவனத்தில் (ஐ.பி.தி.ஏ.) தனது படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அக்கறைகொண்ட யு.எம். இந்தியப் பட்டதாரிகள் (குமிக் - Concerned UM Indian Graduates) மாணவர்கள் குழு கூறியது. இந்தக் குழு உயர்க்கல்வி…

உலகச் சுகாதார நிறுவனம் அனைத்து வகையான தடுப்பூசிகளையும் அங்கீகரிக்க வேண்டும்…

உலகச் சுகாதார அமைப்பால் (டபிள்யூ.எச்.ஓ.) பட்டியலிடப்பட்ட அனைத்து வகையான கோவிட் -19 தடுப்பூசிகளையும், உலக நாடுகள் அங்கீகரிக்குமாறு உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொள்ள வேண்டுமெனத் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில், உலகச் சுகாதார நிறுவனம்…

4,611 புதிய நேர்வுகள் – மே நடுப்பகுதியில் இருந்து மிகக்…

கோவிட் 19 | இன்று நாட்டில், 4,611 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 69 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,477 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 5,439 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…

எஸ்ஓபி மீறல் காரணமாக, 150 கட்டுமானத் தளங்கள் மூடப்பட்டன –…

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும்போது, கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (சிஐடிபி) சோதனை செய்த மூன்று கட்டுமான தளங்களில் ஒன்று கோவிட் -19 எஸ்ஓபிக்களுக்கு இணங்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. செயல்பாட்டில் இருந்த 446 கட்டுமான தளங்களில், எஸ்ஓபிகளை மீறியதற்காக 150-ஐ மூடுமாறு சிஐடிபி உத்தரவிட்டதாக பொதுப்பணி…

எம்.ஆர்.என்.ஏவைப் பயன்படுத்தி மலேசியா கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கி வருகிறது

எம்.ஆர்.என்.ஏ. (ரிபோநியூக்ளிக் அசிட் மெசஞ்சர்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மலேசியா கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கி வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். இந்தத் தடுப்பூசி, முதன்முதலில் 2020 நவம்பரில் சுகாதார அமைச்சு மற்றும் மலேசியப் புத்ரா பல்கலைக்கழகம் (யுபிஎம்) ஆகியவற்றின் கீழ் உள்ள மருத்துவ ஆராய்ச்சி…