வெட்கமில்லை! வெட்கமே இல்லை!!

-முனைவர் ஆறு. நாகப்பன், செப்டெம்பெர் 29, 2013. நாடு விடுதலையடைந்து 56 ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்னோ என்ற ஒரே கட்சி தொடர்ச்சியாக ஆட்சி செய்து அற்புதமான அனுபவம் பெற்றுள்ளது. ஆசிய நாடுகளிலும் உலக இஸ்லாமிய நாடுகளின் வரிசையிலும் அதி முன்னேற்றம் அடைந்த நாடு மலேசியா என்று நமது தலைவர்கள்…

சின் பெங்கின் அஸ்தி பேசினால்!

கி.சீலதாஸ். செம்பருத்தி.காம்.  இரண்டாம்  உலகப்போர்  ஆரம்பமாவதற்கு  முன்  மலாயா  சிங்கப்பூர்  பிரதேசங்களில்  கட்டுக்கோப்பான, வலுவான  அரசியல் இயக்கம்  இயங்கவில்லை. 1938ஆம்  ஆண்டு  இபுராஹீம்  யாக்கூப்பின்  பெரும் முயற்சியில்  கோலாலம்பூரில்  கெசத்துவான்  மிலாயு  மூடா  (மலாய்  இளைஞர்  சங்கம்)  அமைக்கப்பட்டது.  இந்த  இயக்கத்தின் முக்கியமான குறிக்கோள்  எல்லா  மலாய்க்காரர்களையும்  ஒற்றுமைப்படுத்தி  …

சின் பெங்: நாடு திரும்பும் வாய்ப்பை நழுவவிட்டாரா அல்லது வாய்ப்பு…

  -ஜீவி காத்தையா, செம்பருத்தி .கோம் தடை செய்யப்பட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சின் பெங் நாடு திரும்பும் வாய்ப்பை நழுவவிட்டு விட்டார்.என்று மலேசிய போலீஸ் படையின் முன்னாள் தலைவர் ஹனிப் ஒமார் நேற்று கூறியதாக தமிழ் நேசன் செய்தி கூறுகிறது. சின் பெங்…

சின் பெங்: வரலாற்று வீரர் வரலாற்று நாளான இன்று விடை…

ஜீவி.காத்தையா, செம்பருத்தி.காம். பிடிக்கிறதோ, இல்லையோ, அவருடைய பெயரைக் குறிப்பிடாமல் மலேசிய நாட்டின் வரலாறு எழுதப்பட முடியாது என்ற அளவிற்கு நாட்டை கைப்பற்றிய ஜப்பானியர்களையும், நாட்டை ஆண்டு வந்த பிரிட்டீஷ் காலனித்துவவாதிகளையும் எதிர்த்துப் போராடி நாட்டின் வரலாற்றோடு இரண்டறக் கலந்து விட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர்…

குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?

கி.சீலதாஸ், செம்பருத்தி.காம். குண்டர்களுக்கு   எதிரான   காவல்துறையின்  நடவடிக்கையில்  சரியாக  இருக்கலாம்.  அணுகுமுறை   கேள்விகுறியாக   மாறிவிடலாம்.  சட்டத்தின்  மீது  நம்பிக்கை   உடையவர்கள்   சட்டத்தை   பேணும்படி   வலியுறுத்தியவர்கள்,  சட்டதைக்  கையில்   எடுத்துக்கொள்ளக்   கூடாது  என்ற  அபிப்பிராயத்தை  ஒதுக்கிவிட  முடியாதே. குண்டர்களின்  அட்டகாசம்,  ராட்சஸ குணமும், செயல்களும்  நாட்டின்  சுபிட்சத்தை  கெடுக்கும்   அளவுக்கு …

கை கட்டி-வாய் பொத்தி- தலையசைப்பதுதான் கூட்டுப்பொருப்பு

கி.சீலதாஸ், செம்பருத்தி.காம். உண்மையைச்  சொன்னால்  அல்லது   நல்லதை  எடுத்துரைத்தால்  சிலருக்கு   கோபம்  பொத்துக்  கொண்டுவரும்  என்பதற்கு  உதாரணமாகக்  காட்சி  தருபவர்  வேறு  யாருமல்ல, சாட்சாத்  உள்துறை  அமைச்சர் – டத்தோ ஸ்ரீ  டாக்டர்  ஜாஹீது  ஹமிடி. ஒரே  அரசியல்  கட்சியில்  இருந்தாலும்  சரி  அல்லது  பல  கட்சிகள்  ஒன்றுகூடி …

சீன, தமிழ்ப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படும்: இம்முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது?

-ஜீவி காத்தையா, செம்பருத்தி.கோம், செப்டெம்பர் 9, 2013. இந்நாட்டில் சீன மற்றும் தமிழ்மொழிப் பள்ளிகள் நிலைநிறுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இல் கூறப்பட்டுள்ளது. தேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 என்று கூறப்படும் மலேசிய அரசின் மிக அண்மையக்…

மலேசிய கல்விப் பெருந்திட்டம்: தமிழுக்கு ஆபத்து

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 5, 2013. தமிழும் சீனமும் உலகின் மூத்த மொழிகள். இவ்விரண்டு மொழிகளுமே அவற்றின்  தாயகமான இந்தியா, சீனா மற்றும் ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளைத் தவிர்த்து மலேசியாவில் மட்டுமே பள்ளிகளில் முழு நேரமாகப் போதிக்கப் படுகின்றன. இவை மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட…

மலேசியாவின் நிரந்தரமற்ற தற்போதைய அரசியல் நிலவரம்!

கி. சீலதாஸ், செம்பருத்தி.காம் 13-ஆம்  பொதுத்தேர்தல்  முடிந்து  நூறு  நாட்களுக்கு  மேலாகிவிட்டது. 5.5.2013- இல்  இருந்து  இதுவரை  நாட்டு நடப்பு,  நாட்டின்  அரசியல்  எந்தத்  திசையை   நோக்கிப்   போய்க்  கொண்டிருக்கிறது  என்பதை  நிர்ணயிப்பது   சிரமமாகவே  இருக்கும்.  இதற்குக்  காரணம்  என்னவெனில்  வெற்றி  பெற்ற  தேசிய  முன்னணிக்குத்  திருப்தி  இல்லாத …

வன்முறை நாடகம்!

- முனைவர் ஆறு. நாகப்பன், ஆகஸ்ட் 30, 2013.  இந்திய இளைஞர்கள் நடத்தும் வன்செயல்களுக்கும் குற்றச்செயல்களுக்கும் பின்னால் முக்கிய அரசியல் புள்ளிகள் இருப்பதாக உள்துறை அமைச்சர் கூறுகிறார். (மக்கள் ஓசை 29.8.2013, முதல் பக்கம்) இதைத்தான் கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் என்ன…

கல்வியில் இந்தியர்களின் நிலை மோசமாகியுள்ளது

கா. ஆறுமுகம். செம்பருத்தி.காம் மலேசியாவில் வாழும் மூன்று முக்கிய இனங்களில் இந்தியர்கள்தான் பலவீனமானவர்கள். அவர்களின் வாழ்வாதார உருமாற்றத்திற்குக் கல்வியால்   முக்கிய பங்காற்ற இயலும். இந்த நிலைபாட்டுடன் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக பல வகையான திட்டங்களில் அரசியல் அமைப்புகளும் சமூக அமைப்புகளூம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் நமது…

தமிழ்ப்பள்ளிகள் பாதிப்படையும், போராடுங்கள்!

மலேசியக் கல்வி பெருந்திட்டம் தமிழ்ப் பள்ளிகளையும் தமிழ்க் கல்வியையும் வெகுவாக பாதிக்கும். எனவே, அதற்காக நமது சமூகம் சீனர்களைப் போல் போராட வேண்டும் எனக் கோருகிறார் தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகம். கடந்த வியாழன் அன்று (22.8.2013) துணைப்பிரதமர் முஹிடின் யாசின் கல்விப் பெருந்திட்டம் (2013-2025) மீது எதிர்ப்பு…

எவரஸ்ட் மூர்த்தியின் மரணமும், காளியம்மாவின் கதறலும்

இமயமலை  வீரர்  மூர்த்தி  மரணமடைந்ததைத்  தொடர்ந்து  சில   சட்ட  சிக்கல்கள்   ஏற்பட்டன்.  அவர்  உயிரோடு   இருக்கும்போது   இஸ்லாத்தைத்  தழுவிட்டாராம்,  எனவே, இஸ்லாமிய இலாகா  மூர்த்தியின்  சடலத்தைத்  தம்மிடம்  ஒப்புவிக்கும்  அதிகாரத்தை  ஷரியா   நீதிமன்றத்தில்  இருந்து  அது  பெற்றது.  இதை  அறிந்த  அவருடைய  மனைவி  காளியம்மாள்  உயர்நீதிமன்றத்தில்  வழக்குத்…

அல்லாஹ் விவகாரம்: நஜிப்பின் 10 கட்டளைகள் ஒரு கண்துடைப்பா?

-ஜீவி காத்தையா, செம்பருத்தி. கோம்.  ஆகஸ்ட் 20, 2013  இந்நாட்டில் அல்லாஹ் என்ற சொல்லை இஸ்லாமியர் அல்லாதவர்கள் பயன்படுத்துக் கூடாது. ஆண்டவனை குறிக்கும் அச்சொல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற கடுமையான போக்கு நிலவுகிறது. "அல்லா என்ற வார்த்தையைப் பயன் படுத்துவது விசேடமாக முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது. இதை இஸ்லாமியர் அல்லாதவர்கள்…

திருடப்பட்ட எகிப்திய புரட்சியின் பின் என்ன நடைபெறுகிறது

நன்றி: மைற்கற்கள் (http://shkifthihar.blogspot.com) எகிப்தில் இராணுவப் பயங்கரவாத தாக்குதலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் ஆகியோறின் விபரங்களை ஆதாரங்களுடன் வெளியிடப்போவதாக இஹ்வான்கள அறிவித்துள்ளனர். VIDEOஎகிப்தில் இராணுவ சதிப் புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முர்ஷியிக்குஆதரவாக நடாத்தப்படும் தொடரானஆர்பாட்டத்தின் மீது இராணுவத்தினர் நேற்றுநடத்திய தாக்குதல்களில் 2500 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக இஹ்வான்களின்உதியோகபூர்வமற்ற தாகுவல்கள்குறிப்பிடுகிறது. இதேவேளை 525 பேர் வரைகொல்லப்பட்டுள்ளதாகவும் 3700 பேர் காயமடைந்துள்ளதாகவும் எகிப்து இராணுவ நிர்வாகம் ஒத்துக்கொண்டுள்ளது. அதிகமானவர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள் ஆனால் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச…

ஓர் இந்து, முஸ்லிமுடன் குடும்பம் நடத்துவது குற்றமா?

கி. சீலதாஸ், செம்பருத்தி.காம்  (சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! கட்டுரைத் தொடர்ச்சி பகுதி 6  - இதற்கு முன்பு வெளியான பகுதிகள் இப்பகுதியின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன). ஷியாமளாவும்  டாக்டர்  ஜெயகணேசனும்   1998ஆம்  ஆண்டு  இந்து   ஆச்சாரப்படி   திருமணம்  செய்து   கொண்டனர்.  அவர்களுக்கு   இரண்டு   பிள்ளைகள்   இருக்கிறார்கள்.  19.11.2002-இல்   ஜெயகணேஷ்   இஸ்லாத்தைத் …

குழந்தைகளை கைப்பற்ற குறுக்கு வழி

எப்படி நமது அரசியலமைப்பு சட்டம் களவாடப்பட்டது? எதனால் சமயம் சார்புடைய சர்ச்சைகளில் முஸ்லிம் அல்லாதவரும் ஷரியா நீதிமன்றம் செல்ல நேர்ந்தது?  இதற்கு ஓர் இணக்கமான முடிவை எப்படிக் காண்பது? விடை கான, விருவிருப்பாகவும் தெளிவாகவும் மூத்த வழக்கறிஞர் கி. சீலதாஸ் செம்பருத்திக்காக ‘சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! ‘ என்ற தலைப்பில்…

உலகம் வியந்து பார்க்கும் தமிழன் ஒருவன் படைத்த சாதனை

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை…

“Keling memang dasar pariah sejak sejarah lagi”

ஜீவி. காத்தையா, செம்பருத்தி.காம் தேசிய தொடக்கப்பள்ளிகளிலும், இடைநிலைப்பள்ளிகளிலும் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. ஆகவே, சுங்கை பூலோ குளியலறை ஒன்றும் புதியதல்ல. அவ்வாறே, இந்திய மாணவர்களை இழிவுபடுத்திய பள்ளி ஆசிரியர்களைத் தற்காப்பதற்காக விரைந்தோடும் துணை அமைச்சர்களின் செயல்பாடுகளும் புதிதல்ல. சுங்கை பூலோ ஸ்ரீ…

தாய்மொழிக்கல்விக்காக டோங் ஸோங் விடுத்த 728 பிரகடனம்

செம்பருத்தி.கோம், ஜூலை 27, 2013. மலேசிய சீன மன்றங்கள் 728 ஒருங்கு கூடுதல் கல்வி பெருந்திட்டம் 2013-2025 க்கு கண்டனம் தாய்மொழிக் கல்வி மேம்பாட்டிற்கு தீங்கானது மலேசிய ஐக்கிய சீனப்பள்ளி குழுக்கள் மன்றம் (டோங் ஸோங்) ஏற்பாடு பிரகடனம் மலேசிய ஐக்கிய சீனப்பள்ளி குழுக்கள் மன்றம் (டோங் ஸோங்)…

மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தை எதிர்த்துப் போராட சபதம்!

செம்பருத்தி.காம் டோங் ஜவ் ஸோங் (DJZ) என்ற சீனக்  கல்வி அமைப்பின் தலைவர் யாப் சின் தியன் ‘ மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025’ எதிர்த்து அது தாய்மொழிக் கல்விக்கு ஏற்ற வகையில் மாற்றம் காணும் வரை போராடப்  போவதாக சபதமிட்டார்.   இன்றுக் காலை கோலாலம்பூர் சூங்…

மலேசியாவில் ஊழல்

பூபாலன் முருகேசன். செம்பருத்தி.காம்   ஊழலுக்கு எதிராக தீவிரமாகப் ‘போர்’ தொடுத்திருப்பதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருப்பதினூடே, மலேசியாவில் ஊழலின் அளவு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. GTP எனப்படும் அரசாங்க உருமாற்றத் திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும்,  தேசிய அடைவு நிலைக்கான முக்கிய த்துறைகளின் கீழுள்ள ஊழல் எதிர்ப்பு…

நஜிப்பை அம்னோ அகற்றினால் – நமது நிலை என்ன?

கா. ஆறுமுகம். செம்பருத்தி.காம்  அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. முதன் முதலாக மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற மக்கள் கூட்டணி எதிர்கட்சியாகவும் பெரும்பான்மை வாக்குகளை இழந்த தேசிய முன்னணி ஆளும் கட்சியாகவும் உள்ளன. நியாயமான தேர்தலா என்ற வினா ஒரு புறம் இருக்க, அடுத்த தேர்தலில் தேசிய…