இராகவன் கருப்பையா- ஒரு பயங்கர சாலை விபத்து அதை அடுத்து கணவரின் இருதய அறுவை சிகிச்சை வரையில் தனது வாழ்வில் அடுத்தடுத்து நிகழ்ந்த பெரும் சோதனைகளை வைராக்கியத்துடன் கடந்து தன் இலக்கை அடைந்துள்ளார் தேவிகா சாய் பாலகிருஷ்ணன். பல்வேறு சவால்களுக்கிடையே தனது 14 ஆண்டு கால கனவு நிறைவேறியதாகக்…
லிட்டல் இந்தியாவில் மதுபானக் கடைகள்தான் நமது அடையாளமா? தமிழினி
பிரிக்பீல்ட்ஸ் என்றவுடன் பலருக்கும் முதலில் அங்கிருந்த கள்ளுக்கடைதான் ஞாபகம் வரும். அந்த கள்ளுக்கடை அகற்றப்பட்டு சில ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கூட அந்த கள்ளுக்கடையை அடையாளப்படுத்தி சில பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஏன் அங்கிருக்கிற கற்பக விநாயகர் கூட சிலவேளைகளில் கள்ளுக்கடை விநாயகர் என்றே அறியப்படுகிறார். அந்தளவுக்கு பிரிக்பீல்ட்ஸ் மக்களின்…
கமலநாதன் கண்ணாமூச்சி ஆடுகிறார்! – வே. இளஞ்செழியன்
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தமிழ் இடைநிலைப்பள்ளிக்கான விண்ணப்பம் மறுக்கப்பட்டதாக திரு கமலநாதன் கூறியிருக்கிறார். (காண்க: http://www.semparuthi.com/?p=106997.) திரு. கமலநாதனின் இக்கருத்தில் பல சிக்கல்களுள்ளன என்று வே. இளஞ்செழியன் செம்பருத்திக்கு அளித்த தகவல்கள் காட்டுகின்றன. 1) பினாங்கு மாநிலத்தில் ஒவ்வோராண்டும் ஏறத்தாழ 6,500 மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் கற்கின்றனர். அவர்களில்…
சமுதாயம் உயர என்ன செய்யலாம்? கி.சீலதாஸ்
பகுதி 3. பொதுவாகவே, இன்றைய இந்தியர்களின் நிலை என்ன? எப்படியாவது முன்னுக்கு வரவேண்டும். வரவேற்க வேண்டிய, உத்தமமான உற்சாகம். அந்த உற்சாகம் எதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால், எப்படியாவது முன்னுக்கு வரவேண்டும் என்கின்ற வெறியே தவிர வேறொன்றுமில்லை. முன்னுக்கு வரவேண்டும், நல்லா சம்பாதிக்க வேண்டுமென்கிற நோக்கம், …
வியாக்கியானங்களே வாழ்க்கையாகி விதியாவதா?
கி.சீலதாஸ். பகுதி 2. மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த ஒருவனுக்கு கடவுள் உதவி செய்ய நினைத்து கொஞ்சம் பணம் கிடைக்கும்படி செய்தாராம். பணத்தைப் பெற்றுக்கொண்டவன் வீடு திரும்பும்போது வழிப்பறி கொள்ளையன் தட்டிக்கொண்டு போய்விடுகிறான். கடவுள் பரிதாபப்பட்டார். வழிப்பறி கொள்ளையர்கள் நிறைந்துவிட்ட உலகில் இப்படியும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் மீண்டுமொரு …
தமிழன்தான் முதல் குரங்கு என்றால் திருப்தியா?
கி.சீலதாஸ். பகுதி 1. இன்றைய மலேசியாவில் தமிழர்களின் அல்லது பொதுவாக இந்தியர்களின் நிலை என்ன? எதிர்காலத்தில் அது எப்படி இருக்கும்? என்ற கேள்விகளை எழுப்புவது நியாயமானதாகவும் காலத்துக்கேற்ற கேள்விகளாகவும் இருக்கும். இன்றைய இந்தியர் சமூகம் அதன் நாளைய சந்ததியின் நலனைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம். எனவே,…
வேதமூர்த்தி பிரதமருக்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டும்
பதவி விலகிய வேதமூர்த்தி இண்ராப்ட்-தேசிய முன்னணி கூட்டு ஒப்பந்தத்தைக் காப்பாற்ற தவறிய பிரதமர் நஜிப் மீது வழக்கு தொடர வேண்டும் என்கிறார் கா. ஆறுமுகம். மலேசியாவின் கட்சி அரசியல் சார்பற்ற வகையில் இந்தியர்களின் முதலாவது துணை அமைச்சராக கடந்த வருடம் மே 16-இல் பதவியேற்ற பொ. வேதமூர்த்தி கடந்த…
வெண்ணிற இரவுகள் : நம்பிக்கையான முயற்சி!
இப்போது காலை மணி 6. ஒரு விடுமுறை காலையில் எழுந்து ‘வெண்ணிற இரவுகள்’ பற்றி எழுத என்ன காரணமாக இருக்க வேண்டும்? மலேசியாவில் பிறந்துவிட்ட காரணத்தினால் இங்கு முன்னெடுக்கப்படும் கலை ரீதியான எல்லா முயற்சிகளும் ஆதரவு தரும் எண்ணம் எனக்கில்லை. அது இலக்கியமாக இருந்தாலும் , சினிமாவாக இருந்தாலும்…
திட்டம் தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்தும்!
வே. இளஞ்செழியன். கடந்த 14 பிப்ரவரியன்று “டிரஸ்ட் ஃபண்ட்”, என்றத் தலைப்பில் ஒரு கட்டுரை பதிவுசெய்யப்பட்டது. திரு. ஜீவி காத்தையா கட்டுரையை இயற்றியிருந்தார். பேரா. நா. இராஜெந்திரன் தலைமையில் இயங்கிவரும் திட்டவரைவுக்குழுவின் கடந்த ஓராண்டுப் பணியைக் கேள்விக்குட்படுத்தியதோடு, பரிந்துரையிலுள்ள அறங்காப்பு நிதியம் (trust fund) “தமிழ்ப்பள்ளியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் இறுதி ஆணி”யாக அமையும் என்று கட்டுரை வருணித்தது. “தமிழ்ப்பள்ளிக்கு உரிய உரிமைகளைநிலைநிறுத்து[ம்] தீர்மானத்தை நிறைவேற்றி அதனை பிரதமர் நஜிப்பிடம் வழங்கு[வதில்தான்] ...…
தமிழ்ப் பள்ளிகள் வேண்டுமா? வேண்டாமா?
- முனைவர் ஆறு. நாகப்பன் தமிழ்ப் பள்ளிகள் வேண்டுமா, வேண்டாமா என்ற இரண்டு முடிவுகளில் வேண்டாம் என்பதுதான் பாரிசான் அரசின் முடிவு. தேர்தல் என்ற ஒரு மாரடைப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்துவிடுவதால் வேண்டாம் என்ற பாரிசானின் முடிவை நிதானமாக இந்தியர்களின் புத்திக்குள் திணிக்க வேண்டி…
“டிரஸ்ட் ஃபண்ட்”: தமிழ்ப்பள்ளிகளுக்கு சூதாட்ட நிறுவனங்களின் பெட்டகத்திலிருந்து நிதி உதவி…
ஜீவி காத்தையா, பெப்ரவரி 14, 2014. மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கினால் அமைக்கப்பட்ட எதிர்கால தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்டவரைவு குழு வரைந்துள்ள திட்டத்தின் மீதான இறுதி பங்களிப்புகளை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பெறுவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய அளவில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்திற்கு கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் முனைவர்…
வைதீஸ்வரியின் குடியுரிமை போராட்டம், “குளொரக்ஸ்” வரை போக வேண்டுமா?
மாணவி க. வைதீஸ்வரி இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வில் அமருவது கேள்விக் குறியாகியுள்ளது. 1996-ல், ஜொகூர்பாரு சுல்தானா அமீனா அரசு மருத்துவமனையில் பிறந்த இவர் 18 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறார். இவரின் தந்தை கலைச்செல்வன் த/பெகுப்பன். இவர்மலேசியர். தாயார் சாந்தா த/பெரெங்கநாதன் ஒரு சிங்கபூர் பிரஜை. இவர்களின் இரண்டாவது…
2000 ஏக்கர் நிலம்: சந்தேகங்களுக்கு முனியாண்டியும் வீராவும் விளக்கம் தருவார்களா?
-மு. குலசேகரன், பெப்ரவரி2, 2014. பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் கடந்த 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த வாரிய இயக்குனர்களை அதிகார பூர்வமாக பேரா முதலமைச்சர் அதே ஆண்டு ஆகஸ்டு 30ஆம் தேதி அறிவித்தார். இன்று வரை இந்த 2…
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி போராட்டம் குறித்த நியூ ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ் செய்தி…
மு. குலசேகரன், நியூ ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ் பத்திரிகை கடந்த 19ந் தேதி, காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து பெர்னாமாவை மேற்கோள்காட்டி செய்தி ஒன்றை எழுதியிருந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் காட்டுமிராண்டித் தனமாகவும், அடாவடித்தனமாகவும் நடந்துகொண்டாதாகக் கூறியுள்ளது. அதையே வாசகர்கள் கடிதம் அங்கத்தில் 24 ஆம் தேதி அன்று…
எல்லார் மூக்கிலேயும் அரசியல்
-முனைவர் ஆறு. நாகப்பன், ஜனவரி 26, 2014. ஒரு ஊர்ல பத்தே பத்து பேர்தான் இருந்தாங்க. அதாவது பத்துக் குடும்பத்துக்கு பத்துத் தலைவருங்க. அந்த பத்துப் பேருக்கு என்ன பேருங்கிறது முக்கியமில்ல. அந்த ஊருக்கு ஒத்த ஊருன்னு பேரு. அதான் முக்கியம். ஒவ்வொரு தலைவருக்கும் மூணு மூணு…
தைப்பூசத்திற்கான விதிமுறைகளுக்கு இயக்கங்கள் ஆதரவு!
தைப்பூசம் என்பது ஒரு தெருவிழா ஆகாமல் இருப்பதை உறுதி செய்ய சமூகம் முன்வர வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அது நுகரும் கலாச்சாரத்தன்மைக்கு ஆளாகி தனது பண்பாட்டு சமயத்தன்மையை இழந்துவிடும் என்பதால் இந்த விதிமுறைகளை உருவாக்க முற்பட்டோம் என்கிறார் குணராஜ். கடந்த ஒரு மாத காலமாக இது சார்பாக…
பன்மொழிகளை கற்பவர்களுக்கு மூளை வளர்ச்சி அதிகம்
கா. ஆறுமுகம். பகுதி 3. இந்த இறுதிப்பகுதியில் மேலும் சில அறிவியல் சான்றுகள் பன்மொழிக்கு ஆதரவாக தரப்பட்டுள்ளன. பன்மொழிகளை கற்றுக் கொள்வதால் என்னென்ன பயன்கள் என்பதை முழுமையாக் இப்போதே அறிந்து கொள்ள இயலாது. ஆனால், அறிவியல் அடிப்படையில் நல்ல பயன்கள் கிடைக்கும் என்று மட்டும் தெரிகிறது. பன்மொழி பேசும் பிள்ளைகளின்…
ஒரே மொழிக் கொள்கை இந்த நூற்றாண்டின் கல்வி அறியாமை
கா. ஆறுமுகம். பகுதி 2. பலமொழி தெரிந்த மூளை தான் சிறந்தது என்று கூற இயலாது. ஆனால், அது நெகிழ்வானது (flexible), சமயோசிதமானது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. பலமொழி உலகம் கற்றுக் கொடுத்த மிகப் பெரிய பாடம் அது தான். ஆனால் அதன் ஆபத்தை அறியாமல் அமெரிக்கா போன்ற ஒற்றை…
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு, மூளைத் திறன் அதிகமாகும்!
கா. ஆறுமுகம். பகுதி 1. என்ன தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு, மூளைத் திறன் அதிகமாகுமா, உண்மையா அல்லது சும்மா ஒரு கதைக்காவா? உண்மைதான். இதை நான் சொல்லவில்லை, ஆய்வுதான் சொல்கிறது. அதாவது பல மொழிகள் தெரிந்தவர்கள் ஒரே மொழியை மட்டும் அறிந்திருப்பவரை விட மேம்பட்டிருப்பது பல ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்குக் குழந்தைகள்…
பெரியக்கா கொல்லப்படுகிறார்
மாதம் ரிம 95 மட்டும் பெற்று வரும் தன்னைப்போன்றோர் எப்படி உயிர் வாழ்வது என்று கேட்கிறார் பெரியக்கா. கருந்தங்கம் விளைந்த பத்து ஆராங்கில் பிறந்து, வளர்ந்து, பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரையில் படித்து சுறுசுறுப்பாக வாழ்ந்து வந்த பெரியக்கா த/பெ சின்னையா இன்று தமது எழுபத்தேழாவது…
கல்விப் பெருந்திட்டம் தாய்மொழிக் கல்விக்கு ஆபத்தானது
சுதந்திர மலேசியாவில் தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை அழித்து விட்டு மலாய் மொழியில் மட்டுமே கற்றலையும் கற்பித்தலையும் நிலைநிறுத்துவதற்கான தேசியப்பள்ளி உருவாக்கப்படும் திட்டம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1956 ஆம் ஆண்டில் அன்றைய கல்வி அமைச்சராக இருந்த அப்துல் ரசாக் வெளியிட்டார் (ரசாக் அறிக்கை). அந்த தேசியப்பள்ளியில் மலாய்…
உலகத் தலைவர்களுக்கு இருட்டில் தீனி போட்டால், தின்னவாமாட்டார்கள்?
-ஜீவி காத்தையா, செம்பருத்தி.கோம், நவம்பர் 25, 2013. பிரதமர் நஜிப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீ பெர்டானாவிற்கான மின்சார செலவு பல மில்லியன் ரிங்கிட் ஆகியுள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதால் நியுசிலாந்து நாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்து விருந்து வைத்து விருந்தாளிகளை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் பழக்கமும் பெருந்தன்மையும்…
தொட்டில் குழந்தைகள்
-முனைவர் ஆறு. நாகப்பன், நவம்பர் 22, 2013. ஐந்து மணி என்று போட்டிருந்த கூட்டத்திற்கு ஐந்தே முக்கால் வரை யாரும் வரவில்லை ஒரே ஒரு பெண்மணி வாசலில் நின்றுகொண்டு இரண்டு ஆண்கள் மட்டும் இருக்கிற அறைக்குள்ளே நுழையலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். "வாங்கம்மா, ஒக்காருங்க" என்று…
நஜிப்புக்கு நோபல் பரிசு!
-ஜீவி காத்தையா, செம்பருத்தி,கோம், நவம்பர்21, 2013. மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் போர்க் குற்றவாளியாக வேண்டிய சிறீ லங்கா அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்புக்கு மதிப்பளித்து சிறீ லங்காவில் நடைபெற்று முடிந்த காமன்வெல்த் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டார். அழைப்பு விடுப்பவர்கள் கொடியவர்களாக இருந்தாலும் அதற்கு மதிப்பு…