ஆஸ்ட்ரோ விழுதுகளில் எழுத்தாளர் அ.ரெங்கசாமி அவர்கள்…

2.11.2014-இல் வெளிவரப்போகும் தனது சுயவரலாற்று நூல் குறித்து இன்று எழுத்தாளர் அ.ரெங்கசாமி அவர்கள் ஆஸ்ட்ரோ விழுதுகளில் பேசுகிறார். அ. ரெங்கசாமி (பி: 1930) மலேசியாவின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களில் ஒருவராவார். 'கோலலங்காட் ரெங்கசாமி' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும்கூட. 1950 தொடக்கம் இவர் மலேசிய தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பாலும்…

இடைநிலைப்பள்ளி, உயர்க்கல்வி கழகங்களில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் திட்டவரைவு

இடைநிலைப்பள்ளி, உயர்க்கல்வி கழகங்களில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் திட்டவரைவு மீதான கருத்தாய்வரங்கம் இன்று, 6 செப்டம்பர் 2014 காலை 8.00 மணி தொடங்கி 2.00 மணிவரை தோட்ட மாளிகையில் நடைப்பெற்றது. மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர்கள், கல்வியமைச்சின் அதிகாரிகள், பள்ளி ஆய்நர்கள், தமிழ்ப்பள்ளி இடைநிலைப்பள்ளி…

சிலாங்கூரில் அரசியல் நாடகம்!

- கே. சீலதாஸ், செப்டெம்பர் 2, 2014. இந்த  நாட்டின்  அரசியல்  இலக்கு – நாடாளுமன்ற  கோட்பாடு  எப்படிப்பட்ட  இலக்கை  நோக்கிச்  செல்கிறது  என்பது  பெரும்  கேள்வியாக  மட்டுமல்ல -  சங்கடம்  தரும்  கேள்வியாக  மாறிவிட்டதை  மறுக்கமுடியாது.  அப்படி  எல்லாம்  ஒன்றுமில்லை,  நாடாளுமன்றத்தில்  நமக்கு  அப்பழுக்கற்ற  நம்பிக்கையுண்டு  என்று …

‘சுதந்திரம் : யாரிடமிருந்து……..யாருக்கு?’ கருத்துகளம்

57-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.)  நாடு தழுவிய அளவில் சிறப்பு கருத்துகளம் ஒன்றினை ஏற்பாடு செய்து, நடத்தி வருகிறது. ஆகஸ்ட் 15-ல் ஈப்போவில் தொடங்கிய இக்கருத்துகளம் , பத்து ஆராங் சிலாங்கூர், மலாக்கா, கோத்தா பாரு கிளாந்தான் ஆகிய இடங்களில் சிறப்பாக நடந்தேரியது. …

டிஸ்லெக்சியாவின் விளைவுகளும், களையும் வழியும் – முனைவர் முல்லை இராமையா

இந்நாட்டில், நம்முடைய தமிழ்ப் பள்ளிகளில், சிறப்பாகத் தேறும் பிள்ளைகளுக்கே அதிக ஆதரவும் மதிப்பும் தரப்படுகிறது. சிறப்பாகத் தேறும் பிள்ளைகள் போற்றப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருப்பினும், முழுக் கவனத்தையும் அவர்கள் மேல் செலுத்தி, UPSR ரில் சிறப்பாகத் தேறவேண்டுமென்று பள்ளிகளுக்கிடையில் நடக்கும் போட்டியில், எதையுமே வாசிக்க,…

விடிந்தும் விடியாத விடுதலை – கா. ஆறுமுகம்

“நள்ளிரவில் வாங்கினோம், இன்னும் எங்களுக்கு விடியவில்லை..” என்பவர்களும், ‘எங்கள் வீட்டு கம்பத்திற்குக் கொடி கொடுத்த விடுதலை எங்களுக்கு வீட்டை கொடுக்க வில்லை’ என்று புலம்புவர்களுக்கும் இடையே மலேசியா போன்ற ஒரு நாடு கிடைக்காது என்ற எண்ணத்தைக் கொண்டவர்களில் நானும் ஒருவன். ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றதற்குப் பல காரணங்கள் இருப்பினும்,…

மஇகாவின் 59 மில்லியன் ரிங்கிட் தலைவலி – தமிழினி

2008 தேர்தலில் படுதோல்வியடைந்த பாரிசான் 2009 முதல் 2013 வரையில் தமிழ்ப்பள்ளிகளுக்காக ரிம540 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து புதிய சாதனையை உருவாக்கியது. இதோடு 2014-இல் இன்னொரு ரிம 50 மில்லியனும் ஒதுக்கப்பட்டது. அதாவது சராசரி ஒரு தமிழ்ப்பள்ளிக்கு 1.15 மில்லியன்  ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என வைத்துக்கொள்ளலாம். இதுதான்…

சின்னத்திரையால் சீரழியும் சமூகம்

"நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நம் செயல்களைவிட நம் எண்ணங்கள்தான் என சான்றோர்கள் கூறுகின்றனர். அதுதானே உண்மை. எண்ணம்போல் தானே வாழ்வும் அமைகிறது" எப்போது வீட்டிற்குள் நுழைந்தாலும் அழுகுரல்களில் சத்தம் காதை அடைக்கிறது. இல்லையென்றால் மிக மட்டமாக ஆண் பெண் பேதமின்றி, வயது வித்தியாசமின்றி யாராவது யாரையாவது திட்டிக் கொண்டிருப்பார்கள்.…

செம்பருத்தி வாசகர்களின் கவனத்திற்கு…

செம்பருத்தி வாசகர்களின் கவனத்திற்கு, தற்போது செம்பருத்தியின் வாசகர்கள் அதிகமான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். அவர்களின் கருத்து சுதந்திரத்தைச் செம்பருத்தி வரவேற்கிறது. அதன் எல்லை எது என்பதை நிர்ணயம் செய்யும் பொறுப்பையும் வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தணிக்கை என்ற பெயரில் உங்களின் கருத்துகளை முடக்கும் எண்ணம் எங்களுக்கு…

கோழையானதால் மன்னிப்போம் – மறப்போம் – இலக்கியா

கடந்த ஒரு வாரமாக தமிழ்ச் சமூகம் கொந்தளித்துப் போய் கிடக்கிறது. அறிக்கைகள் பறந்துக் கொண்டிருக்கின்றன. ஆளாளுக்குக் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்னதான் நடந்தது? சம்பவம் 1 அவள் இரண்டாம் ஆண்டு மாணவி. நன்னெறி பாடவேளை. வகுப்பறையில் எதற்காக பேசினாள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. வகுப்பறையில் பேசுவது அவ்வளவு…

வாகன நெரிசலுக்கு யார் காரணம்? – தமிழினி

வாகன நெரிசல் பலரை கோபத்தின் விளிம்பிற்குப் கொண்டு செல்கிறது. நாள்தோறும் பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்துகிற பட்சத்தில் என்னைவிட அதுகுறித்த அதிக தகவல்கள் உங்களிடம் இருக்கக்கூடும். மலேசியா சுதந்திரம் அடைந்து 57 ஆண்டுகள் நிறைவடையப் போகிற இன்றைய நிலையிலும் தரமானதொரு பொதுப் போக்குவரத்து சேவையை வழங்க முடியவில்லை என்பதே…

வேண்டும் ஒரு கடவுள்!

  -முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஜூலை 5, 2014.   தமிழர் சமய வாழ்க்கை நெறியற்ற குறியற்ற போக்கில் போய் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழினத்தில் தோன்றிய அருளாளர்கள் ஒரு கடவுள் வழிபாட்டை முன்மொழிந்து சிவபெருமானின் பரத்துவம் குறித்த சித்தாந்தத்தை முன் வைத்தனர்.…

மூட நம்பிக்கையால் குழந்தைகளின் அறிவாற்றல் மூடப்படுகிறது – சுதா சின்னசாமி

அன்மையில் ஒரு நிகழ்வுக்கு சென்றிருக்கையில், சில சடங்கு சம்பிரதாயங்களை கவனிக்க நேர்ந்தது. பாட்டிமார்கள் சில சடங்கு முறைகளை யோசித்து யோசித்து அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். என்னோடு உட்கார்ந்திருந்த பிள்ளையும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்து சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கினால். பதில் கிடைக்குமா என்ற ஆர்வ கோளாரில் சிலரிடம் ஒவ்வொரு சடங்கின்…

புகை பிடித்து குழந்தைகளின் காதுகளைச் செவிடாக்குவோம் – தமிழினி

இப்போதெல்லாம் உணவகங்களுக்கு உணவருந்தப் போவதென்றால் உணவு சுவையாக இருக்குமா என்று யோசிப்பதை விட அங்கு புகைப்பிடிக்காதவர்கள் நிம்மதியாக அமர்ந்து உணவருந்த இடம் இருக்குமா என்று யோசிப்பதுதான் மிக முக்கியமாக இருக்கிறது. அந்தளவிற்கு புகைப்பிடிப்பவர்கள் நமது பெரும்பாலான உணவருந்தும் நேரங்களை நிம்மதியற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தைக் படியுங்கள். காலை…

பண்பற்றதாகி வரும் மின்னல் பண்பலை – தமிழினி

திங்கட்கிழமை, காலை மணி 7.25. மின்னல் பண்பலையில் பாடல் ஒலிக்கிறது. லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன்;  இன்னும் எழுதல; அத உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன்; கொடுக்க முடியல. தொரத்தி தொரத்தி காதலிச்சேன்; வெறி பிடிச்ச நாயாட்டம்,  ஆசைய மூடி மறைக்காத; உங்கப்பன் பேச்சை மதிக்காத; ஐ லவ் யூ சொல்லிடு.. காலையில் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அழைத்துச்…

மலேசிய கலை உலகத்தில் உள்ள போலி அறிவுவாதம் – ம.நவீன்

மலேசிய கலை இலக்கிய வெளிபாட்டின் மீது எனக்கு எப்போதும் எதிர்பார்ப்பும் அதைவிட அதிக ஏமாற்றமும் உண்டு. ஊடகங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு சில கலை ஆக்கங்களைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கும்போது அவற்றை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் போலி அறிவுஜீவித்தனங்களாகவே  (Pseudo Intellectuals) உள்ளன.  இந்தப் போலி அறிவுஜீவிகளை அடையாளம் காட்டுவது…

சீன, தமிழ் மொழிகளுக்கு எதிரான அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகள் – கி.சீலதாஸ்.

சீனம்,  தமிழ்,  ஆகிய  மொழிகளுக்கு  அரசமைப்புச்  சட்டத்தில்  பாதுகாப்பு  இருந்த  போதிலும்  அவை  கற்பிக்கப்படுவதும்,  அவற்றின்  வளர்ச்சியும்  தேசிய  ஒருமைப்பாட்டுக்கு  ஊறு  விளைவிப்பதாகச்  சில  அரசியல்வாதிகள்  குற்றம்  கண்டார்கள்.  இது  நியாயமற்ற,  ஆதாரமற்ற  குற்றச்சாட்டு. [தமிழ்க் கல்வியும் தமிழ்ப்பள்ளியும் நமது உரிமை - பகுதி 2]  பல  நாடுகளில்  பல …

தமிழ்க் கல்வியும் தமிழ்ப்பள்ளியும் நமது உரிமை – கி. சீலதாஸ்

பகுதி 1. கல்வியின்  முக்கியத்துவத்தை  உணராத  காலமும்  இல்லை, நாடும்  இல்லை, தீர்க்கத்தரிசிகளும் இல்லை, தத்துவஞானிகளும்  இல்லை, முனிவர்களும்  ரிஷிகளும்  இல்லை.  ஆனால்  பல்லாயிரம்  நூற்றாண்டுகளாக  கல்வியானது  எல்லா  மக்களுக்கும்  கிடைக்கவில்லை  என்பது  வரலாறு  கூறும்  உண்மை. ஐக்கிய  நாடுகளின்  மக்கள்  தொகை  கணக்கெடுப்பின்படி  அக்டோபர், 2011வரை  மக்களின்  எண்ணிக்கை …

சீக்கிரம், மெல்ல மெதுவான போது..

சுதா சின்னசாமி.  அவசரமான வாழ்க்கை. அன்றாடம் பம்பரம் போல் சுழலும் சூழல். காலையில் எழுந்ததிலிருந்து வேலை, பணி, கடமைகள். இதில் எங்காவது செல்வது என்றால் கூட அரக்கப் பறந்து, பிறரையும் அவசரப் படுத்தும் நிலை. என் மகளுக்கு இப்போது தான் நான்கு வயதாகிறது. காலையில் எழுந்ததிலிருந்து உறங்கும் வரை…

அடுத்த தலைமுறையை செதுக்கும் ஆசிரியர்கள், அரசியல் அடிமைகள் அல்ல!

சாந்தலட்சுமி பெருமாள். 'ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி' என்ற சொல்லை வேதவாக்காக கருதி, பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள். கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கற்றல் கற்பித்தல் திறன்களைத் திறம்படக் கற்று, அவற்றை மாணவர்களுக்குப் போதித்து வரும் நம்மை கல்வியாளர்களாக இந்தச் சமூகம்…

தமிழ்ப்பள்ளிகளின் தாரே ஜமீன் பார்கள்!

தமிழினி. இசான் பள்ளிக்கூடம் செல்லப்பிடிக்காத ஒரு எட்டு வயது சிறுவனாவான். ஒவ்வொரு பாடமும் அவனுக்கு கடினமாக இருப்பதுடன் அவன் என்றென்றும் தேர்வில் தோற்றுக்கொண்டே இருக்கிறான். மேலும் அவன் உடலில் இயக்கிகளின் ஒருங்கிணைப்பு செயற்திறன் குறைவாக உள்ளதால், அவன் ஒரு பந்தை நேர்கோட்டில் தூக்கி எறிய சிரமப்படுவான். அவனுக்கு உதவி செய்வதற்கு…

900 பத்தாது, சுரண்டலுக்குப் பரிகாரம் வேணும்!

தமிழினி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனிதவள அமைச்சு மேற்கொண்ட ஓர் ஆய்வின் மூலம் நமது நாட்டு தொழிலாளர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் 720 ரிங்கிட்டிற்கும் கீழ் வருமானம் பெறுவதாக கண்டறியப்பட்டது. அந்த ஆய்விற்குப் பின், கடந்தாண்டு தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளமான 900.00 ரிங்கிட் வழங்க வேண்டும் என்றும்…

மதமாற்ற விவாகரத்தில், தோற்றது நீதியா? வீழ்ந்தது தர்மமா?

கா. ஆறுமுகம். தீபாவும் வீரனும் 2003-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்து மத முறைப்படி  திருமணம் செய்து கொண்டனர். அத்திருமணம் முறைப்படி திருமணச் சட்டத்தின் கீழ் பதிவும் செய்யப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2012-இல் வீரன் இஸ்லாத்தைத் தழுவினார். அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும் 9 வயதில் ஒரு மகளும்…