இராகவன் கருப்பையா- ஒரு பயங்கர சாலை விபத்து அதை அடுத்து கணவரின் இருதய அறுவை சிகிச்சை வரையில் தனது வாழ்வில் அடுத்தடுத்து நிகழ்ந்த பெரும் சோதனைகளை வைராக்கியத்துடன் கடந்து தன் இலக்கை அடைந்துள்ளார் தேவிகா சாய் பாலகிருஷ்ணன். பல்வேறு சவால்களுக்கிடையே தனது 14 ஆண்டு கால கனவு நிறைவேறியதாகக்…
தேசிய ஒற்றுமையைப் பேணுவதில் தாய்மொழிப்பள்ளிகளை விட தேசியப்பள்ளிகள் எந்த வகையிலும்…
தாய்மொழிப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பதாக கல்விமான்கள், தொழிலியர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆதாரம் எங்கே? தேசியப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் ஆக்கரமாக தாய்மொழிப்பள்ளிகளை விட எந்த வகையிலும் உயர்வான பங்கை ஆற்றியுள்ளனவா? ஆதாரம் எங்கே? தாய்மொழிப்பள்ளிகள் (சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள்) குறித்த அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான…
ரிம33.30, ரிம10.95, ரிம4.50: இதுதான் பள்ளிகளுக்கான பாகுபாடற்ற நிதி ஒதுக்கீடா?
-ஜீவி காத்தையா, நவம்பர் 11, 2014 கடந்த நவம்பர் 3 இல், நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சுக்கான பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இரு முக்கிய விவகாரங்களை வலியுறுத்தினார். அவை: 1. நாட்டிலுள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. 2. நாட்டின் தாய்மொழிக்…
கல்வி உருமாற்றம் : தமிழ்ப்பள்ளியே என் தேர்வு
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு, பிரதமர் துறை இந்நாட்டின் தமிழ்ப்பள்ளிகள் 150 ஆண்டுகளுக்கும் குறையாத வரலாற்றினைக் கொண்டவை என்றால் அது மிகையாகாது. மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில்தான் நம் இனத்தின் சரணாலயங்களாக விளங்கி வருகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு. மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தின் 2013-2025 குறியிலக்குகளுக்கு ஏற்பவும், தமிழ்ப்பள்ளிகளை நாட்டில்…
தாய்மொழிக் கல்வியும் கண்ணாமூச்சி ஆட்டமும் – கா. ஆறுமுகம்.
குழந்தைகள் கண்களைக் கட்டிக்கொண்டு கண்ணாமூச்சி விளையாடும்போது ஏதாவது கையில் பட்டவுடன், தேடுபவர்களைப் பிடித்து விட்டதாகக் கூச்சலிடுவார்கள். அதில் ஓர் ஆனந்தம் பரவியிருக்கும். இப்போதெல்லாம் அதிக அறிவும் ஆற்றலும் வலிமையும் பெற்ற நினைப்பில் உள்ளச் சில அரசியல்வாதிகளுக்கு அரசியல் கண்ணாமூச்சி ஒரு வேடிக்கையாகிவிட்டது. அடிக்கடி எதையாவது பேசி அதில் குளிர்…
பிஎஸ்ஆர்எம் முன்னாள் தலைமைச் செயலாளர் காமினி காலமானார்
பார்டி சோசலிஸ் ரக்யாட் மலேயாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ். தேவசிகாமணி கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் அவரது அம்பாங் இல்லத்தில் தமது 84 ஆவது வயதில் காலமானார். வழக்குரைஞருமான தேவசிகாமணி இடதுசாரி அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் லண்டனில் சட்டக் கல்வி பயின்ற காலத்திலிருந்தே அரசியலில்…
லங்கா சுக மன்னர்கள் – மாறன் மஹாவங்ஸன்
-சுவாமி சத்தியானந்தா மலாய் மொழியிலுள்ள வரலாறுகளினின்றும் லங்கா சுகம், கடாரம், கங்கா நகரம் முதலிய பழைய இராச்சியங்களை ஆண்ட சில மன்னர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். லங்கா சுகத்தை முதன்முதல் ஆண்டவன் மாறன் மஹாவங்ஸன் எனக் கூறப்படுகிறான். அவன் பாடலிபுரத்தில் கி.மு.300 ஆவது ஆண்டில் அரசு செலுத்தி…
ஹிண்ட்ராப் 2.0 இனி வேண்டாம்! தீபாவளி தீர்மானமாகட்டும்!
கா. ஆறுமுகம். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி; யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றார் புறனாற்றுக்கவி கணியன் பூங்குன்றனார். இவர்களோடு அறம் செய்யக் கோரிய ஔவையார், அரசியலுக்கும் நெறி வகுத்த வள்ளுவர், இப்படியான இத்யாதிகளோடு உழன்று உருவானதுதான் தமிழர் வாழ்வு. மேடைக்கு மெருகூட்ட…
“வந்தேறிகள்”: வரலாறு என்ன சொல்கிறது?
-ஜீவி காத்தையா, அக்டோபர் 20, 2014. அமெரிக்கா ஒரு பல்லின மக்களைக் கொண்ட நாடு. அங்கு நிற அடிப்படையிலான குமுறல்கள் இன்று வரையில் நடந்து கொண்டிருந்தாலும், அந்நாட்டு மக்கள் ஒருவரை ஒருவர் "வந்தேறி" என்றோ "திரும்பிப் போ" என்று கொக்கரிப்பதில்லை. ஏனென்றால் "திரும்பிப் போ" என்பது அந்நாட்டு மக்கள்…
2015 வரவு செலவு அறிக்கை – ஒரு சாமானியனின் பார்வை
மலேசிய மக்களுக்கு பொருளாதாரம் குறித்த சிந்தனைகளும் விழிப்புணர்வுகளும் துளிர்விட்டு கிளம்பும் மாதம் அக்டோபர் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் அக்டோபர் மாதத்தில் தான் நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கை வெளியிடப்படுகிறது. ஆண்டுதோரும் அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் முதல் வாசிப்பே ‘வரவு…
கல்வி அமைச்சர் திட்டமிட்டே தவறான பதிலைத் தருகிறாரா?
-ஜீவி காத்தையா, அக்டோபர் 15, 2014. பாலர்பள்ளி வகுப்புகள் அமைப்பதற்காக 2014 ஆண்டு பட்ஜெட்டில் மொத்தம் ரிம58 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஒதுக்கீட்டின் கீழ் பாலர்பள்ளி வகுப்புகள் இல்லாத 351 தமிழ்ப்பள்ளிகளில் எத்தனை பாலர்பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் எழுத்து வாயிலாக கேட்டிருந்த…
“பாவையின் செருப்பை எடுத்த பாரதப் பிரதமர்”
இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான காஷ்மீர் சம்பந்தப்பட்ட தகராற்றில் இந்தியாவுக்கும் அதன் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் எதிராக பாக்கிஸ்தான் காராச்சியில் ஒரு பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்பாட்டத்தின் போது அதில் பங்குபெற்றவர்களில் பலர் நேருவுக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியதோடு அவரது கொடும்பாவியை எரித்து தக்களுடைய ஆத்திரத்தைக்…
இன்று 2015 பட்ஜெட்: அதில் பத்து ஆராங் பெரியக்காளுக்கு நஜிப்…
இன்று நாட்டின் ஆறாவது பிரதமர் நஜிப் ரசாக் நிதி அமைச்சர் என்ற முறையில் 2015 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அந்த பட்ஜெட்டில் பத்து ஆராங்கில் வாழ்ந்து வரும் சி. பெரியக்காள் என்ற 77 வயதான மாதுக்கு ஜூன் 2013 லிருந்து, 2013…
மாலினிக்கு உதவ, அமைச்சர் முன்வரவேண்டும்!
காராக் 1/10/2014 – திருமதி மாலினி வாசுதேவன் வயது 36, இரு சிருநீரகங்களும் பழுதடைந்த நிலையில் சிறமங்களை எதிர்நோக்கி வருகிறார். மருத்துவர் அவரை dialysis எனப்படும் சிறுநீரகம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு வாரத்திற்கு மூன்று முறை செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டனர். காராக் நகரில் Dialysis Centre…
“ஓர் இனம் மட்டும்தான் இந்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற…
நூருல் இசா அன்வார் தனது அரசியல் வாழ்க்கையை 1998-ல் தொடங்கினார். மலேசிய அரசியல் அமைப்பைச் சீரமைக்க ‘Reformasi’ எனும் இயக்கத்தின் வழி இவரது போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். ஆதலால், மக்கள் இவரை ‘Princess Of Reformation’ என அழைக்கத் தொடங்கினர். அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் உள்ள…
ஆளுவதற்கான இறுதி அதிகாரம் படைத்தவர் யார், மக்களா அல்லது மன்னரா?
-கிம் குவேக், செப்டெம்பர் 21, 2014 சிலாங்கூர் மந்திரி புசார் பதவி. அஸ்மின் அலி கட்சிக்கு விசுவாசமானவர் என்றால், மந்திரி புசார் பதவி வழங்கப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அவர் அறிவிக்க வேண்டும். அதைத்தான் அவரது சகாவான நிக் நாஸ்மி அஹமட் செய்துள்ளார். சுல்தானின் விருப்பத்தை…
விளக்கம் தாருங்கள், அசிஸ் பாரி வேண்டுகோள்
கடந்த வியாழக்கிழமை, சிலாங்கூர் அரண்மனையால் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மந்திரி புசார் நியமனத்தில் பின்பற்றப்பட்ட முந்தைய வழிமுறைகளை விளக்கும்படி சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி அரண்மனையை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட முடியாட்சி நாட்டில் தொடங்கிய 1959 ஆம்…
ஆஸ்ட்ரோ விழுதுகளில் எழுத்தாளர் அ.ரெங்கசாமி அவர்கள்…
2.11.2014-இல் வெளிவரப்போகும் தனது சுயவரலாற்று நூல் குறித்து இன்று எழுத்தாளர் அ.ரெங்கசாமி அவர்கள் ஆஸ்ட்ரோ விழுதுகளில் பேசுகிறார். அ. ரெங்கசாமி (பி: 1930) மலேசியாவின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களில் ஒருவராவார். 'கோலலங்காட் ரெங்கசாமி' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும்கூட. 1950 தொடக்கம் இவர் மலேசிய தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பாலும்…
இடைநிலைப்பள்ளி, உயர்க்கல்வி கழகங்களில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் திட்டவரைவு
இடைநிலைப்பள்ளி, உயர்க்கல்வி கழகங்களில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் திட்டவரைவு மீதான கருத்தாய்வரங்கம் இன்று, 6 செப்டம்பர் 2014 காலை 8.00 மணி தொடங்கி 2.00 மணிவரை தோட்ட மாளிகையில் நடைப்பெற்றது. மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர்கள், கல்வியமைச்சின் அதிகாரிகள், பள்ளி ஆய்நர்கள், தமிழ்ப்பள்ளி இடைநிலைப்பள்ளி…
சிலாங்கூரில் அரசியல் நாடகம்!
- கே. சீலதாஸ், செப்டெம்பர் 2, 2014. இந்த நாட்டின் அரசியல் இலக்கு – நாடாளுமன்ற கோட்பாடு எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கிறது என்பது பெரும் கேள்வியாக மட்டுமல்ல - சங்கடம் தரும் கேள்வியாக மாறிவிட்டதை மறுக்கமுடியாது. அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, நாடாளுமன்றத்தில் நமக்கு அப்பழுக்கற்ற நம்பிக்கையுண்டு என்று …
‘சுதந்திரம் : யாரிடமிருந்து……..யாருக்கு?’ கருத்துகளம்
57-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) நாடு தழுவிய அளவில் சிறப்பு கருத்துகளம் ஒன்றினை ஏற்பாடு செய்து, நடத்தி வருகிறது. ஆகஸ்ட் 15-ல் ஈப்போவில் தொடங்கிய இக்கருத்துகளம் , பத்து ஆராங் சிலாங்கூர், மலாக்கா, கோத்தா பாரு கிளாந்தான் ஆகிய இடங்களில் சிறப்பாக நடந்தேரியது. …
டிஸ்லெக்சியாவின் விளைவுகளும், களையும் வழியும் – முனைவர் முல்லை இராமையா
இந்நாட்டில், நம்முடைய தமிழ்ப் பள்ளிகளில், சிறப்பாகத் தேறும் பிள்ளைகளுக்கே அதிக ஆதரவும் மதிப்பும் தரப்படுகிறது. சிறப்பாகத் தேறும் பிள்ளைகள் போற்றப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருப்பினும், முழுக் கவனத்தையும் அவர்கள் மேல் செலுத்தி, UPSR ரில் சிறப்பாகத் தேறவேண்டுமென்று பள்ளிகளுக்கிடையில் நடக்கும் போட்டியில், எதையுமே வாசிக்க,…
விடிந்தும் விடியாத விடுதலை – கா. ஆறுமுகம்
“நள்ளிரவில் வாங்கினோம், இன்னும் எங்களுக்கு விடியவில்லை..” என்பவர்களும், ‘எங்கள் வீட்டு கம்பத்திற்குக் கொடி கொடுத்த விடுதலை எங்களுக்கு வீட்டை கொடுக்க வில்லை’ என்று புலம்புவர்களுக்கும் இடையே மலேசியா போன்ற ஒரு நாடு கிடைக்காது என்ற எண்ணத்தைக் கொண்டவர்களில் நானும் ஒருவன். ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றதற்குப் பல காரணங்கள் இருப்பினும்,…
மஇகாவின் 59 மில்லியன் ரிங்கிட் தலைவலி – தமிழினி
2008 தேர்தலில் படுதோல்வியடைந்த பாரிசான் 2009 முதல் 2013 வரையில் தமிழ்ப்பள்ளிகளுக்காக ரிம540 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து புதிய சாதனையை உருவாக்கியது. இதோடு 2014-இல் இன்னொரு ரிம 50 மில்லியனும் ஒதுக்கப்பட்டது. அதாவது சராசரி ஒரு தமிழ்ப்பள்ளிக்கு 1.15 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என வைத்துக்கொள்ளலாம். இதுதான்…