இராகவன் கருப்பையா - இந்தியாவின் அகிம்சை சுதந்திரப் போராட்ட வீரரான மஹாத்மா காந்திக்கும் கருப்பின விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலாவுக்கும் ஈடு இணையற்றவர்களாக கருதப்படுகிறார்கள். இந்நிலையில் பினேங் மாநிலத்தின் ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நேத்தாஜி ராயர் சில தினங்களுக்கு முன் கோமாளித்தனமாக…
இந்தியர்களின் மக்கள்தொகை 2020-இல் 6.7%க்கு குறைந்தது!
சமீபத்தில் முடிவடைந்த 2020 -க்கான தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மலேசியாவின் மக்கள்தொகையில் பூமிபுத்ராவின் சதவீதம் 69.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சீனர்கள் மற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. 2010-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 28.3 மில்லியனாக இருந்த மலேசியாவின் மக்கள்தொகை 32.4 மில்லியனாக அதிகரித்துள்ளது,…
ஊழலை ஒடுக்க செல்வாக்கு மிக்கவர்கள் தடையா?- அன்வார்
ஊழலை ஒடுக்குவதற்குச் செல்வாக்கு மிக்கவர்கள் தடையாக இருக்கின்றனர் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். இதற்கு முன்னால் இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டவர்களில் முன்னாள் பிரதமரும் அடங்குவார் என்கிறார் அன்வார். இதுபோன்ற அரசியல் சூழ்நிலையில் நாம் எதையும் குறைவாக மதிப்பிட இயலாது. “செல்வாக்கும் ஆதிக்கமும் கொண்டவர்கள் உண்மையான நாட்டின் சீரமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை”, என்று குற்றம் சாட்டுகிறார் அன்வார்.…
தமிழ் மொழி வளர்ச்சிக்கு சோதனை மேல் சோதனை
இராகவன் கருப்பையா- இந்நாட்டில் தமிழ் பள்ளிகளையும் தமிழ் மொழியையும் பாதுகாக்க நாம் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தொடர்ந்தார்போல் சவால் மிக்க சோதனைகளும் நம்மைத் தாக்கிய வண்ணமாகத்தான் உள்ளன. தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும் என அவ்வப்போது விஷக் கருத்துகளைக் கக்கிக் கொண்டிருக்கும் சில தரங்கெட்ட அரசியல்வாதிகள் மட்டுமின்றி அவ்வாறு…
மலேசிய-சீன வாணிப சங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்கு பண உதவி
இன்று கோலாலம்பூர் சீன சமூகம் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் நான்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு மலேசிய-சீன வாணிப சங்கம் ரிம 27,000 வழங்கியது. அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு உதவும் பொருட்டு மலேசியச் சீன-வாணிப சங்கம் (Malaysia - China Chamber of Commerce) உதவித் திட்டங்களை முடுக்கி விட்டுள்ளது. அதனடிப்படையில்…
ஊழலுக்கு வக்காளத்தா? – கி.சீலதாஸ்
ஊழலால் விளையும் கேடுகளைப் பற்றி உணராத, உணர மறுக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை; ஆட்சி அவர்கள் கையில் இருக்கும் வரை ஊழல் நடவடிக்கைகளை, ஊழல் கலாச்சாரத்தை ஒடுக்கவோ, ஒழிக்கவோ முடியாது; முடியும் என்று நினைப்பது வெறும் பகற்கனவாகும். இலஞ்சம் வாங்குவோர்க்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று சட்டம் சொல்கிறது.…
`தைப் பிறந்தால் வழிப் பிறக்கும்` – பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து
எதிர்வரும் தைத் திங்கள் முதலாம் நாள் பிறக்கும் திருவள்ளுவராண்டு 2053-ஆம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை, மலேசியத் தமிழர் தேசியப் பேரவை அனைத்து மலேசிய வாழ் தமிழர்களுக்கும் உவகையோடு தெரிவித்துகொள்கிறது. தை துவக்கத்தைச் சீர்மிகு செந்தமிழர் புத்தாண்டாக வரவேற்பதை நமது சங்க இலக்கியங்கள் உறுதிபடுத்துகின்றன. தமிழர் தாயகத்தைத் தாண்டி தமிழர்…
‘பல்லில்லா புலி’யானது புரிந்துணர்வு ஒப்பந்தம்
இராகவன் கருப்பையா -கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் 9ஆவது பிரதமராகப் பொறுப்பேற்ற இஸ்மாய்ல் சப்ரி அவசர அவசரமாகச் செய்த முதல் காரியம் எதிர் கட்சிக் கூட்டணியை அரவணைத்து அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதுதான். இதன் வழி தனது சிறுபான்மை அரசாங்கத்தை தற்காத்துக்கொண்ட சப்ரி, அம்னோவின் ஊழல்வாதிகளின் நெருக்குதலில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டார். அவர் பதவியில் அமர்ந்து சில வாரங்களிலேயே மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை மக்களுக்கு ஓரளவு…
தடுப்புக்காவல், அடக்குமுறைக்கு மத்தியில் தொடரும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்
கம்போடியாவின் மிகப்பெரிய ஆடம்பர ஹோட்டல் மற்றும் சூதாட்ட விடுதியான நாகாவேர்ல்டின் தொழிலாளர்கள், கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக அதிகாரிகளால் ஒடுக்கப்பட்டனர். டிசம்பர் 2021-ல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதிலிருந்து, 30 நாகாவேர்ல்ட் தொழிற்சங்க உறுப்பினர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு…
ஜானகிராமன் வல்லினம் விருது பெறுகிறார்!
‘வல்லினம் விருது’ மலேசிய எழுத்துலகில் இயங்கும் முக்கியமான ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. ஐயாயிரம் ரிங்கிட் (RM 5,000) மற்றும் நினைவு கோப்பையும் இந்த விருதுவிழாவில் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2015இல் அ.ரெங்கசாமி அவர்களுக்கும் 2019இல் சை.பீர்முகம்மது அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2022க்கான வல்லினம் விருதை எழுத்தாளர் மா.…
படகு இருமுறை கவிழ.. தாயை காப்பற்றிய அனுபவம்!
இராகவன் கருப்பையா- வெள்ளப்பேரிடரில் நாம் கண்ட அனுபவங்கள், மனித நேயம் உள்ள மக்கள் நம்மிடையே பலர் உள்ளனர் என்பதையும், பொது நலம் காப்பதும், துணிந்து உதவுவதும் – ஒரு புதிய இலக்கணத்தை வாழ்வியலில் இணத்துள்ளதையும் உணர முடிகிறது. அந்தப்பிணைப்பு இந்தியர்களிடம் அதிகம் இருந்தாக கருதப்படுவதற்கான காரணம், அரசின் இனவாத…
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதா?
கி.சீலதாஸ் -முன்னொரு காலத்தில் கிராம வைத்தியர் ஒருவர் மிகுந்த புகழுடனும், சிறப்புடனும் வாழ்ந்து வந்தார். எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும் அதைக் குணப்படுத்துவதில் வல்லவர். இந்த மருத்துவரிடம் மருத்துவம் பயில வந்த மாணவன், குரு வைத்தியர் போகும் இடமெல்லாம் உடன் செல்வது வழக்கம். ஒரு நோயாளியின் வீட்டுக்குப் போனால் குரு…
இயற்கை பேரிடரின் ஒற்றுமையும் – கட்சி அரசியலின் பிரிவினையும்!
இராகவன் கருப்பையா - நாட்டை உலுக்கிய வரலாறு காணாத வெள்ளப் பேரிடர் நிகழ்ந்து 10 நாள்களைக் கடந்தும் இன்று வரையில் முதன்மையாகப் பேசப்படுவது ஒரே விசயம்தான் - ஒற்றுமை! அரசாங்க இலாகாக்களும் அமைச்சர்களும் கண்டும் காணாததைப் போல ஆழ்ந்த நித்திரையில் இருந்த முதல் இரண்டு மூன்று நாள்கள் மட்டுமின்றி இன்று…
நிபுணர்: கிள்ளான் பள்ளத்தாக்கு வெள்ளத்தின் போது நட்மா, எம்.கே.என் எங்கே…
வெள்ளிக்கிழமை காலை கிள்ளான் பள்ளத்தாக்கில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது, இரவு வரை பகல் முழுவதும் தொடர்ந்தது. மழைக்குப் பிறகு, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள சில பகுதிகளில் கார்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் நீர்மட்டம் அதிகரித்துள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் வீடியோ கிளிப்புகள்…
பசுபதி சிதம்பரம் – சமூக சிற்பிகளுக்கு ஓர் இலக்கணம்! –…
ம.நவீன்- சுபதி அவர்களை இரண்டாவது முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு டாக்டர் சண்முகசிவா மூலம் அமைந்தது. 2009இல் நான் லண்டன் போக வேண்டியிருந்தது. மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்து லண்டனில் பேச அழைத்திருந்தனர். டத்தோ சகாதேவன் எனக்கான விமான செலவின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டார். ஆனால் எனக்குப் பணப்பற்றாகுறை…
பசுபதி சிதம்பரம் – சமூக சிற்பிகளில் இன்னொரு நட்சத்திரம் பகுதி-1
ம.நவீன் - மாஆளுமைகள் எவ்வாறு உருபெற்று வருகிறார்கள், இயற்கை எவ்வாறு அவர்களை வடிவமைக்கிறது, காலம் உருவாக்கும் தடைகளும் சவால்களும் நேர்மறையான குணம் கொண்ட ஒருவருக்கு எப்படி வரமாக மாறுகின்றன, ஒருவர் தன் எண்ணத்தில் கொண்டுள்ள தீவிரம் அவரைச் சுற்றியுள்ள மனிதர்களையும் எவ்வகையில் மாற்றி அமைக்கிறது, குடும்பம் ஒருவரின் மன…
‘ஜெய்பீம்’ படம் அல்ல பாடம் ~ யோகி
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அண்மையில் மனதை வெகுவாக பாதித்த சில திரைப்படங்கள் குறித்து உரையாடப்பட்டது. அந்த உரையாடலுக்கான நோக்கம் என்ன? ஏன் ஜெய்பீம், அசூரன், கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் மாதிரியான திரைப்படங்களைப் படமாக மட்டும் அல்லாமல் ஒரு பாடமாகவும் பார்க்க வேண்டும்? என்றக் கேள்விகளுக்கு விடைக்காணும் நோக்கத்தில் அந்த…
மாணவ மணிகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
மலேசியவாழ் தமிழ் மக்களுக்கு வணக்கம் நலம் மலர்க! தயவுசெய்து எமது தனிப்பட்ட இக்கருத்தை கல்வி மற்ற மாணவர்கனின் மனநிலையில் எழுதப்படுகிறது என்பதை முன்னவே தெரிவித்துக் கொள்வதோடு பொறுமையுடன் படிக்கவும் . சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் யு.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப பெற்ற அதாவது 6-8ஏக்கள் பெற்ற மாணவர்கள்…
மலேசிய வரலாற்றிலேயே குறுகிய காலப் பிரதமரக சப்ரியா!
இராகவன் கருப்பையா - நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் மட்டுமே பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமை இஸ்மாய்ல் சப்ரி யாக்கோப்பிற்குதான் கிடைக்கும் போல் தெரிகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதியன்று பிரதமர் பதவியில் அமர்ந்த அவர் மிகவும் லாவகமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பக்காத்தானுடன்…
தமிழ், சீன பள்ளிகளின் தலைவிதியை நாடாளுமன்றம்தான் நிர்ணைக்க வேண்டும், நீதிமன்றம்…
இந்நாட்டில் உள்ள தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமேத் தவிர நீதிமன்றம் அல்ல என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விசயமென்பதால் நாடாளுமன்றத்தால் மட்டுமே இதனை தீர்மானிக்க முடியும் என தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம்…
மலாக்கா வெற்றியின் எதிரொலி – மஇகா. தேர்தலில் அனல் பறக்கும்
இராகவன் கருப்பையா- நடந்து முடிந்த மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காடெக் தொகுதியில் போட்டியிட்ட ம.இ.கா.வின் சண்முகம் அடைந்த வெற்றி அக்கட்சிக்கு ஒரு திடீர் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. சென்ற 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடளாவிய நிலையில் படுதோல்வியைத் தழுவிய அந்தக்கட்சி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில்…
மலாக்காவில் தோல்வி: பக்காத்தானுக்கு பாடம்!
இராகவன் கருப்பையா - நடந்து முடிந்த மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் முற்றிலும் தேவையில்லாத மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கிய அறிவிலித்தனமான ஒரு அநாவசிய செயல் என்றால் அது மிகையில்லை. இந்த திடீர் தேர்தல் நடத்தப்படவேண்டுமென மாநில வாக்காளர்கள் ஒற்றைக்காலில் நின்றார்களா? ஒரு போதும் இல்லை. குறிப்பிட்ட சில சுயநல அரசியல்வாதிகளின் அக்கப்போரினால் ஏற்பட்ட விளைவுதான் அது. ஆனால்…
பி.எஸ்.எம். போட்டியிட்டால் ம.இ.கா. மண்ணை கவ்வும் ~இராகவன் கருப்பையா
எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பி.எஸ்.எம். கட்சி பக்காத்தானுடன் கூட்டு சேரவிருப்பது ம.இ.கா.வுக்கு ஒரு பேரிடியாக அமையக்கூடும். பேராக் மாநிலத்தில் உள்ள சுங்ஙை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுப்பதற்கு ம.இ.கா. அண்மைய காலமாக பலதரப்படட் வியூகங்களைத் தீட்டிவருவதாகத் தெரிகிறது. ம.இ.கா.வின் நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது, வரவேற்கத்தக்கது. ஏனெனில் ஏறத்தாழ…
அமைச்சர் தகுதிக்கு நிகரான தூதர் நியமனம் – விக்னேசுவரனுக்கு உலகத்…
தெற்கு ஆசியா சிறப்பு தூதராக நியமனம் பெற்ற மஇகாவின் தேசியத் தலைவர் மாண்புமிகு தான்சீறி ச. விக்னேசுவரன் அவர்களுக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வாழ்த்துகளைப் பதிவு செய்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார் இந்தியா, இலங்கை, பாகிசுதான், வங்காளதேசம், நேபாளம் போன்ற சில நாடுகளை உள்ளடக்கிய…