பணப் புழக்கத்தினால் நோய் தொற்றுமா?

இராகவன் கருப்பையா - கோறனி நச்சிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் 4 கட்ட மீட்புத் திட்டத்தை பிரதமர் மஹியாடின் அறிவித்துள்ள போதிலும் 'ஹெர்ட் இம்யூணிட்டி' எனப்படும் கூட்டெதிர்ப்பு சக்தியை அடையும் காலம் எப்போது வரும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில் கடந்த சில வாரங்களாக…

மலேசிய அரசாங்கத்தின் நேர் கொண்ட பார்வையில் உணவகத் தொழிலாளர்கள்! ~இராகவன்…

மலேசியாவில் உணவகம் ஒன்றில் வேலை செய்த போது தாம் துன்புறுத்தப்பட்டதாக இந்திய பிரஜை ஒருவர் அந்நாட்டுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருவது தெரிந்ததே. தமிழகத்தின் கலைஞர் தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் 'நேர்கொண்ட பார்வை' என்ற ஓரு…

தந்தையர் தினக்கட்டுரை:  தன்னலம் மறந்து என் நலம் போற்றிய என்…

இராகவன் கருப்பையா தனது தந்தையை நினைவு கூறுகிறார் -ஆர் 'அப்பா, கடவுள் தந்த வரமல்ல - வரமாகவே வந்த கடவுள்' எனும் வாசகத்தில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளதை பல காலக்கட்டங்களில் நாம் அனைவருமே உணர்ந்துள்ளோம். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து கடந்த 1940ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அம்மா…

பேரரசரின் ஆலோசனையும் அதன் வியாக்கியானங்களும்

இராகவன் கருப்பையா-  கூடிய விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் எனப் பேரரசர் விடுத்த ஆலோசனையைத் தங்களுடைய வசதிக்கேற்ப வெவ்வேறு மாதிரி திரித்துக் கொண்டு பலவிதமான வியாக்கியானங்களைப் பறைசாற்றும் அரசியல்வாதிகளின் போக்கினால் பொது மக்கள் சினமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நம் நாட்டில் ஜனநாயகம் படும் அவஸ்தைக்கு இவ்வாரம்…

கைபேசியில் பயின்று 8ஏ எடுத்தார் பிரவீனா! ~இராகவன் கருப்பையா

இயங்கலை வழியாக கல்வி பயில தம்மிடம் மடிக்கணினி ஒன்று இல்லாததை ஒரு குறையாகவே தான் கருதவில்லை என்று கூறுகிறார் இவ்வாண்டின் எஸ்.பி.எம். தேரவில் 8ஏ எடுத்து சாதனை புரிந்துள்ள பிரவீனா சந்திரன். கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து கோறனி நச்சிலின் கோரப்பிடியல் சிக்கி ஆண்டு முழுவதும் 5 மாதங்கள்…

இந்தியர்கள் அனைவரும் தடுப்பூசி பெற சமூக இயக்கங்கள் உதவ வேண்டும்!

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் கோறனி நச்சிலுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய தடுப்பூசி நடவடிக்கைகள் அண்டை நாடுகளுடன்  ஒப்பிட்டு பார்க்கையில் இன்னமும் மெதுவாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது சராசரி விகிதம் நமது பின்தங்கிய நிலையையே காட்டுகிறது. இருந்த போதிலும்…

அறம் செய்ய கரம் வேண்டும்: மாணவர்கள் வேண்டுகோள் ~இராகவன் கருப்பையா

கோறனி நச்சிலின் கோரப்பிடியில் சிக்கி கடந்த 15 மாதங்களாக அவதியுறும் தரப்பினரில் பள்ளிப் பிள்ளைகளின் நிலையே சற்று மோசமாக உள்ளது. தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியாமலும், பாடத்திட்டங்களை முழுமையாக முடிக்க இயலாமலும், முறையாக தேர்வு எழுத முடியாத நிலையிலும் மாணவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருவது வருத்தமளிக்கும் ஒரு…

அரசாங்கத்தின் அசட்டுத்தனமும் மக்களின் மெத்தனப் போக்கும்

இராகவன் கருப்பையா- இன்னும் 4 மாதங்களில் நம் நாட்டில் கோறனி நச்சிலின் கோரத் தாண்டவத்திற்குப் பலியாவோரின் எண்ணிக்கை 26,000தை தாண்டக்கூடும். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் வழி இந்தத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது என உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவியல் சபை உறுப்பினர் முனைவர் அடிபா…

தோழர் சின்னப்பன் ஓர் அறிவுக்களஞ்சியம் – எஸ் அருட்செல்வன்

சகோதரர் போல் சின்னப்பனின் மரணம் பற்றி கேள்விபட்டபோது, ​​"வெள்ளைக்காரன் ஆட்சியிலே, இரப்பர் மரத் தோட்டத்திலே, கூலியாக வந்தவனே, உன் நிலைமை என்ன, அடிமை வாழ்க்கை வாழாதே, நீயும் சேர்ந்து போராடு" , எனத் தோட்டத் தொழிலாளியின் தலைவிதியையும் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையையும் பற்றி அவர் பாடியப் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.…

பி40-இல் உள்ளவர்களும் முன்கள பணியாளர்களே!

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி நடவடிக்கைகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து மருத்துவத்துறை மற்றும் காவல்துறை போன்ற முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. இந்த 2 தரப்பினருக்கு அடுத்தபடியாக எந்தத்துறையைச் சார்ந்தவர்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று தெளிவாகத் தெரியவில்லை.  உதாரணமாக, பி40 பிரிவில் உள்ள மக்கள், உடல் உழைப்பைக் கொண்டு வாழ்பவர்கள். இவர்கள் தான் கீழ்மட்ட வேலைகளிலும், நெருக்கமான…

கோறனி நச்சிலுக்கு  எதிரான போராட்டத்தில், நாம் வெற்றியா அல்லது தோல்வியா?

இராகவன் கருப்பையா- நம் நாட்டின் தற்போதைய பிரதான எதிரியான கோறனி நச்சிலுக்கு எதிரான போரில் நாம் வெற்றியா அல்லது தோல்வியா? அண்மைய வாரங்களாகச் சற்று மோசமாகி வரும் நிலைமையைப் பார்த்தால் ஒருவித அச்சம் நம்மை ஆட்கொள்ளத்தான் செய்கிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக கிடுகிடுவென உயர்ந்து வரும் மரண எண்ணிக்கை நமக்கு மிகுந்த கவலையளிக்கும் ஒன்றாக உள்ளது.…

அறிமுகம்: சூரியா டீச்சர் – ஒரு பன்முக சாதனையாளர்

இராகவன் கருப்பையா -எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 'மாதா பிதா குரு தெய்வம்' என பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் உள்ளனர் என்ற போதிலும், இறைவனுக்கு சமமாக போற்றப்பட வேண்டியவர்கள்தான் ஆசிரியர்கள். வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டுள்ள எல்லாருக்குமே ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் ஆசிரியர்கள் ஏணிப்படியாக இருந்திருப்பார்கள் என்றால்…

சந்தி சிரிக்கிறது இந்திய தலைவர்களின் சர்ச்சை! – இராகவன் கருப்பையா

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவரும் 3 நமிடம் 42 விணாடிகளிலான ஒரு காணொலியைக் கண்டு சிரிப்பதா வெறுப்பதா வெட்கப்படுவதா கோபப்படுவதா என்றே தெரியவில்லை. முன்னாள் மனிதவள அமைச்சர் குலசேகரனும் இந்நாள் மனிதவள அமைச்சர் சரவணனும் அந்த காணொலியில் நன்றாகவே கூத்தடிக்கின்றனர் என்றுதான் சொல்ல…

‘தமிழர் எழுச்சி விழா’

உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில், சுங்கை சிப்புட் தொகுதி மஇகா மற்றும் பேராக் தோழமை அமைப்புகளின் ஆதரவோடு, மாபெரும் ‘தமிழர் எழுச்சி விழா’ நடைபெறவுள்ளது. இவ்விழா எதிர்வரும் மே 2-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சுங்கை சிப்புட் மாநாட்டு மையத்தில், காலை 8 மணிக்குத் தொடங்கும். மொழி, இனம்,…

தமிழ் புத்தாண்டை முடிவு செய்வது யார்!

இராகவன் கருப்பையா -தலைநகர் அம்ப்பாங் வட்டாரத்தில் அண்மையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். 'பீசாங் கோரேங்' எனப்படும் வாழைப்பழ பலகாரம் வாங்குவதற்கு மலாய்க்கார மாது ஒருவரின் அங்காடிக்கடைக்குச் சென்ற ஒரு இந்திய இளைஞரின் திடுக்கிடும் அனுபவமே அந்த நிகழ்வு. உங்களுக்கும் இந்த பலகாரம் செய்யத்தெரியுமா என எண்ணெய் சட்டியில்…

புத்தாண்டு குழப்பம் – சித்திரையா! தையா? -இராகவன் கருப்பையா

உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 கோடி தமிழர்கள்  நாளைய தினம் தங்களுடைய புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு தேவையான கடைசி நேர ஏற்பாடுகள் அனைத்தையும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மலேசியத் தமிழர்களுக்கு இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை என்றே தெரிகிறது. ஒரு சில நாள்களுக்கு முன் மலேசியத் தமிழ் எழுத்தாளர்…

‘தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்கள் “நாம் தமிழர் கட்சியை”…

உலகத் தமிழினம் பாதுகாப்பாக இருக்க, தமிழக மக்கள் துயரின்றி வளமாக வாழ, தமிழருக்கென்று தனித்த அரசியல் அதிகாரம் நிறுவ, தமிழர் தாயக மண்ணான தமிழக மண்ணில் தமிழர் ஆட்சி மலர, தமிழகத் தமிழர்கள் தமிழர் தேசியம் வழிநின்று வாக்களிக்க வேண்டும் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வேண்டுகோள்…

பக்காத்தான் – அம்னோ கூட்டணியில் ம.இ.கா.வின் நிலைப்பாடு என்ன! ~இராகவன்…

சுமார் ஒரு ஆண்டுக்கு முன் புறவழி அரசாங்கம் அமைந்ததில் இருந்து மலேசிய அரசியல் களத்தில் அவ்வப்போது நிகழும் திடீர் திருப்பங்களுக்கு பஞ்சமே இல்லை. ஆகக்கடைசியாக இப்போது பக்காத்தானும் அம்னோவும் கூட்டணி அமைப்பது தொடர்பான செய்திகள் மக்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்துள்ளதாகத் தெரிகிறது. அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக எதிர்கட்சித்…

துளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா? ஓசோன் உடல்நலத்துக்கு நல்லதா?

துளசி துளசிச் செடிகள் ஓசோன் வாயுவை வெளியிடுகின்றன என்றும், இது, உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உகந்தது என்றும் பொருள் படும் தகவல்கள் வாட்சாப் மூலம் உலா வருகின்றன. அது மட்டுமல்ல, சில மைய நீரோட்ட நாளேடுகளும், செய்தி இணைய தளங்களும்கூட இத்தகைய கூற்றுகளை உள்ளடக்கிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.…

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழே பூமியின் மையம் – அறிவியல்…

மத நூல்களில் கூறப்படாத செய்திகள் சில, அறிவியல் உண்மைகள் எனும் பெயரில் வலம் வந்து கொண்டிருக்கும். அப்படி ஒன்றுதான் 'சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நடராஜர் சிலையின் கால் பெருவிரலின் கீழ் பூமியின் மையம் உள்ளது' என்பது. சமூக ஊடகங்களில் மட்டுமல்ல, பல லட்சம் பேர் படிக்கும் மைய…

நீல் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாம் மதம் மாறியதும், சூரியனில் ‘ஓம்’ எனும்…

இந்தப் படத்தில் இருப்பவர் நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல. இந்தப் படத்தை எடுத்தவர்தான் நீல் ஆம்ஸ்ட்ராங். தனக்குப் பின் நிலவில் இறங்கிய எட்வின் பஸ் ஆல்ட்ரினை அவர் பிடித்த படம் இது. "நிலவில் கால் பதித்த முதல் மனிதரான, அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட் ராங் நிலவில் இறங்கிய…

சமஸ்கிருதம் கம்ப்யூட்டர் கோடிங் செய்ய ஏற்ற மொழி என்பது எந்த…

கணிப்பொறி அறிவியல் அல்லது பொறியியலை பள்ளியிலோ கல்லூரியிலோ பாடமாகப் படித்தவர்கள் மட்டுமே கணினியைக் கையாள முடியும் எனும் நிலையும் சமீப ஆண்டுகளில் மாறியுள்ளது. கணிப்பொறிகளைக் கையாள்வது பற்றிய அறிவு பரவப் பரவ, அது பற்றிய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பலவும் பரவத் தொடங்கின. அவற்றுள் மிகவும் பிரபலமான புரளி சமஸ்கிருதம்தான்…

‘கடவுள் துகள்கள்’ என்றால் என்ன? ‘காட் பார்டிகிள்’ எனும் பெயரை…

சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் மலைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள 'லார்ஜ் ஹேட்ரான் கொலைடர்' மூலம் 2012இல் பேரண்டத்தில் ஹிக்ஸ் போசான் துகள்கள் இருப்பது உறுதியானது. பிரிட்டனில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த காலகட்டத்தில், உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ், 'நிறையின் தோற்றம்' என்று தமிழில் பொருள்படும்…