சுமத்ரா தீவில் படகில் தத்தளித்த 30 இலங்கை அகதிகள் மீட்பு!…

இந்தோனேசியாவில் சுமத்ரா பகுதியில் நியாஸ் தீவுப்பகுதி அருகே படகில் தத்தளித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 30 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சித்தது தெரிய வந்துள்ளது. இலங்கையில் தொடர்ந்து வரும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.…

முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (13) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு உப்புக்கராச்சியில் உள்ள லயன்ஸ் கழக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. ஜனநாயக…

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகள் தீவிரம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வடக்கில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால், தேவைப்படின் முப்படைகளின் உதவியை சிறிலங்கா…

வடக்கில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் புலி முத்திரை குத்துவது பொருத்தமற்றது:…

வடக்கில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் புலி முத்திரை குத்துவது பொருத்தமற்றது என்று இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். சில குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச்செயல்கள் அனைத்தையும் விடுதலைப் புலிகளின் மீது சுமத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆவா குழுவானது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல என்று கூறியுள்ள…

திட்டமிடப்பட்ட முறையில் எமது தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்: கோடீஸ்வரன்

இந்த மண்ணிலே நடைபெற்ற இனப்படுகொலை எமது மக்களை திட்டமிட்ட முறையில் அழிப்பதற்காகவும் , தமிழ் மக்களின் இரத்தத்தை குடிப்பதற்காகவும் பேரினவாதிகளால் ஏவப்பட்ட ஒரு படுகொலையாகவே இதைப் பார்க்கின்றேன் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அம்பாறை, வீரமுனையில் 232 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 27…

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆதரவளிக்கமாட்டோம்! சுமந்திரன் உறுதி

எந்தவொரு சூழ்நிலையிலும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் தற்போதைய வடிவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மாகாண சபைகளை நேரடியாக நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது, மற்றும் ஒரே நேரத்தில் அனைத்து…

நல்லூரை நோக்கி தமிழ் கலாச்சாரத்துடன் படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்!

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலான பக்தர்கள் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் வெளிநாட்டு முருக பக்தர்களும் நல்லூரை நோக்கி படையெடுத்துள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வருகை…

திருகோணமலையில் எங்களது தொன்மை அழிவடைகின்றது: யாழில் குமுறிய இளைஞன்

திருகோணமலையில் எங்களுக்கு அடி விழுகிறது எனத் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் யாழில் மனம் குமுறியுள்ள சம்பவம் பலரையும் சோகத்தில்ஆழ்த்தியுள்ளது. அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிய உலக சைவ இளைஞர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று யாழ்.நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை…

சம்பந்தன் – மஹிந்த சந்திப்பு: தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பயம்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியாகவும் மற்றும் சமூக ரீதியாகவும் பல்வேறு குழப்ப நிலைகள் தோன்றியுள்ளன. தென்னிலங்கை அரசியலில் பிணைமுறி மோசடி தொடர்பான சர்ச்சை சில திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. யாரும் எதிர்பாராத நேரத்தில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை துறந்திருந்தார். இதனைத் தொடர்ந்து…

உலக சைவ இளைஞர் மாநாடு சைவத்தமிழ் எழுச்சிப் பேரணியுடன் யாழில்…

அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் உலக சைவ இளைஞர் மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது. நாளை மறுதினம் வரை மூன்று தினங்கள் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. “தமிழ் எங்கள் மொழி.. சைவம் எங்கள் வழி” எனும் மகுட வாக்குடனும், “சைவத்தமிழ் மறுமலர்ச்சியில் இளைஞர்களின் பங்கும்…

தமிழர்களுக்கெதிரான கலாசாரப் பேரழிவை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்கிறது: சுரேஷ்

எமது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் கலாச்சாரம், பண்பாடு என்பன ஒன்றித்துப் போயுள்ளது. எமது மொழி, சமயம், வாழ்க்கை முறை என்பவற்றையொட்டி எமது பண்பாடுகளும், நாகரீகங்களும், பழக்க வழக்கங்களும் அமைந்துள்ளன. ஆகவே, இவை அழிக்கப்படும் போது எமது இனம், மொழி, நாகரீகம், பண்பாடு என அனைத்தும் அழிக்கப்படும். இதனைக் கலாசாரப்…

வடக்கு முதலமைச்சரை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்!

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னேஸ்வரனை ஆதரித்தவர்கள் ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கின்றனர். எதிர்பார்ப்புகளுடனேயே தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மைத்திரி – ரணில் (சு.க – ஐ.தே.க) கூட்டு முன்னணிக்குக்கு ஆதரவளித்திருந்தனர். ஆனால் இந்த மக்களிடத்திலே பாதுகாப்பற்ற மனநிலையும் பதற்றங்களுமே அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான…

50 வீதத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நாட்டை விட்டு சென்று விட்டனர்!…

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நாட்டின் நலனுக்காக அல்லாமல் தமது அரசியல் எதிர்காலத்திற்காக செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி தாமதமாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளுடன்…

6 மாதகால போராட்டத்தில் மூவர் மரணம்! நீதி வழங்குவது யார்?…

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 6 மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இது வரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று தாயார் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். இது மனித உரிமையை மதிக்கின்ற நாட்டிற்கு நல்ல விடயம் அல்லவெனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய…

இலங்கை அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது! சம்பந்தன்

மனித உரிமை விடயத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து தப்பிக்க முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது, கருத்து…

வடக்கு மக்களின் பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை தெற்கு!

வடக்கு மக்களின் பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை தெற்கு! – இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று சம்பந்தனிடம் பிரிட்டன் எம்.பிக்கள் குழு வாக்குறுதி (photos) “வடக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கில் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்று நினைக்கின்றோம்.”  இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு…

தமிழகத்தில் போராட்டம் வலுத்தாலும் இலங்கை அரசின் கொள்கை மாறாது! மகிந்த…

தமிழ் நாட்டில் எத்தகைய போராட்டம் நடத்தப்பட்டாலும் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளை அரசு கைவிடாது என கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த…

தமிழரசுக் கட்சியையும் விக்னேஸ்வரனையும் பிடித்திருக்கும் கோளாறு!

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை என்கிற முடிவுக்குத் தமிழரசுக் கட்சி வந்திருக்கின்றது. அதன் பிரகாரம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த மருத்துவர் ப.சத்தியலிங்கம், தன்னுடைய பதவியிலிருந்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை விலகியிருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அனந்தி சசிதரன், தமிழரசுக்…

யாழ். குடாநாட்டில் பலருக்கும் குறி! தொடரும் தேடுதல் வேட்டை

கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதால் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். வெளிநாடொன்றிலிருந்தே 'ஆவா' குழு இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ள போதும் அதை உறுதி செய்யும் வகையில் தற்போது…

ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்த தமிழ்த் தலைமைகள் கோடாரி காம்புகளாகின! யாழில்…

அரசியல் கைதிகளின் விவகாரம் என்பது அவர்களின் சொந்த விவகாரமல்ல. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் காரணமாகத் தான் அவர்கள் அரசியல் கைதிகள் ஆனார்கள் என பிரபல அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்ஸன் ஆகியோர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டு ஐந்து…

ஈழத்தமிழர்களை வதைக்கும் இன்னொரு போர் – ‘பூனை’ மைத்திரியின் சட்ட…

கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும், கையறு நிலையில் அவரின் மனைவியிடம் நீதிபதி இளஞ்செழியன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதுமாக, கல்நெஞ்சக்காரரையும் கரைய வைத்து விடும்! ஈழத்…

மஹிந்தவும் நானும் இணைந்து ஆட்சி!! சம்பந்தன்

எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர் . இந்த நாடு என்றும் பிளவுபடவும் கூடாது. எமது பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அதனை புரிந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என…

வடமாகாணத்தில் 5 இலட்சம் பேர் வறட்சியால் பாதிப்பு: அனர்த்த முகாமைத்துவ…

தற்போது நிலவி வருகின்ற வறட்சி நிலை காரணமாக நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பெருமளவிலான மக்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் வறட்சியினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. 19 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சுமார் 12 இலட்சம் பேர்…