அல்தாந்துயாவின் தந்தை நாளை மகாதிரைச் சந்திக்கிறார்

கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தாந்துயாவின் தந்தை – சேடேவ் சாரீப்பூ – நாளை புத்ராஜெயாவில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டை சந்திக்கவுள்ளார். நாளை மாலை 5 மணியளவில், பிரதமர் அலுவலகத்தில் அச்சந்திப்பு நடைபெறும் என சேடேவ்-இன் வழக்கறிஞர் ராம்கர்ப்பால் சிங் தெரிவித்தார். மகாதிரிடம் என்ன…

கொலைக்கான சூத்திரதாரி மிக முக்கியமானவர், அல்தாந்துயாவின் அப்பா கூறுகிறார்

கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகியின் தந்தை, சேடேவ் ஷாரிபூ, தனது மகள் அல்தாந்தூயாவைக் கொன்றதற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் போலிஸ் கொமாண்டோ சிரூல் அஷ்சார் உமார் பற்றி கவலைப்படவில்லை என்றார். மாறாக, தனது மகளைக் கொலை செய்யத் திட்டமிட்டவர் யார் என்று தெரிந்துகொள்ள விரும்புவதாக, சேடேவ் கூறினார்.…

சிலாங்கூரின் புதிய எம்பி ஹரப்பான் கட்சிகளின் ஆதரவைப் பெற்றவரில்லையாம்: இட்ரிஸ்…

சிலாங்கூரின்  புதிய   மந்திரி  புசாராக    நியமிக்கப்பட்டிருக்கும்   அமிருடின்   ஷாரி   பக்கத்தான்   ஹரப்பான்   கட்சிகளின்   ஆதரவைப்  பெற்றவரில்லை  என்கிறார்   ஈஜோக்   சட்டமன்ற    உறுப்பினர்    டாக்டர்   இட்ரிஸ்    அஹமட். அனைத்து   ஹரப்பான்  கட்சிகளாலும்    ஏற்றுக்கொள்ளப்பட்ட   ஒரே   மந்திரி  புசார்   வேட்பாளர்   தான்   மட்டுமே  என்றாரவர். “பக்கத்தான்  ஹரப்பானின்   அனைத்துக்   கட்சிகளின்   ஆதரவும்  …

அமிருடின் ஷாரி சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார்

சிலாங்கூர் மந்திரி பெசார் யார் என்ற ஊகங்களுக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் ஷாரி சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை மணி 10.15 க்கு, கிள்ளான் இஸ்தானா அலாம் ஷாவில் அவர் சிலாங்கூர் சுல்தானின் முன் பதவிப்…

போலீஸ்: நஜிப் கோல்ப் விளையாட வந்தார், ஓடிப்போவதற்காக அல்ல

  வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா நாட்டை விட்டு ஓடிப்போக முயற்சிக்கிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வதந்திகளை கெடா போலீஸ் தலைவர் ஸைனால் அபிடின் காசிம் நிராகரித்தார். அவர்கள் இருவரும் நேற்று 30 மூட்டை முடிச்சுகளுடன் லங்காவி…

எச்எஸ்ஆருக்குப் பதிலாக ஒரு மாற்றுத் திட்டம்?

கோலாலும்பூர்-  சிங்கப்பூர்   அதிவிரைவு  இரயில்   திட்டத்துக்குப்  பதிலாக   செலவுகுறைந்த   மாற்றுத்    திட்டமொன்று   அரசாங்க  ஆலோசகர்  மன்றத்தின்   பார்வைக்குக்  கொண்டுவரப்பட்டுள்ளதாக   த    ஸ்டார்   அறிவித்துள்ளது. கெரேதாஅபி  தானா  மலாயு(கேடிஎம்)  இப்போது   வைத்துள்ள  இரட்டைத்  தட  இரயில்   பாதையைத்    தரம்  உயர்த்தி   அதையே   புதிய   திட்டத்துக்குப்  பயன்படுத்திக்  கொள்ளலாம்   எனப்    பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். …

துணைப் பிரதமர்: புதிய அமைச்சர்கள் இவ்வாரம் அறிவிக்கப்படலாம்

பிரதமர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்   வார  இறுதிக்குள்   புதிய   அமைச்சர்களை    அறிவிக்கக்கூடும்    என்று  துணைப்   பிரதமர்    டாக்டர்   வான்  அசிசா  வான்  இஸ்மாயில்   இன்று   கூறினார். செய்தியாளர்   கூட்டமொன்றில்  புதிய   அமைச்சர்கள்  நியமனம்   எப்போது    என்று   அவரிடம்   கேட்டதற்கு,  “இதே  கேள்வியைத்தான்  பிரதமரிடம்   நானும்   கேட்டேன்”,  என்றாரவர். “சில …

லியு: ஹரப்பான் ஆட்சி நிலைத்திருக்க மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும்

பக்கத்தான்   ஹரப்பான்    தொடர்ந்து    ஆட்சியில்   இருக்க   வேண்டுமானால்   மலேசியர்களின் - குறிப்பாக,  நடுத்தர,  குறைந்த   வருமானம்  பெறும்   மலாய்க்காரர்களின் -பொருளாதாரப்  பிரச்னைகளுக்குத்   தீர்வு   காணப்பட   வேண்டும்   என்கிறார்  டிஏபி   அரசியல்  விவகாரப்   பிரிவுத்   தலைவர்    லியு  சின்  தொங். “ஐந்தாண்டுக்   காலத்தில்   அவர்களின்    வாழ்க்கை   மேம்பாடு   காணுமானால்   அடுத்த   …

மகாதிரின் தொழில்நுட்ப அறிவு கண்டு வியந்து போனார் ஜேக் மா

அலிபாபா   குழும  நிறுவனரும்   அதன்   செயல்முறை    தலைவருமான    ஜேக்  மா  இன்று  காலை   டாக்டர்    மகாதிர்   முகம்மட்டைச்   சந்தித்தபோது   பிரதமரின்   தொழில்நுட்ப   அறிவின்  ஆழம்   கண்டு   அசந்து  போனார். பிரதமர்   அலுவலகத்தில்   மகாதிரைச்   சந்தித்த  பின்னர்    பெர்னாமாவிடம்  பேசிய    ஜேக்  மா,   “அவரின்  தொழில்நுட்ப    அறிவு    என்னை   வியக்க  …

அரசாங்க தலைமைச் செயலாளராக அபு காசிம் நியமிக்கப்படலாம்

  தற்போது அரசாங்க தலைமைச் செயலாளராக இருக்கும் அலி ஹம்சாவின் இடத்தில் முன்னாள் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைவர் அபு காசிம் நியமிக்கப்படலாம் என்று சினார் ஹரியான் கூறுகிறது. அரசு சேவையில் ஊழலை ஒழிப்பதற்கான சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஜிஐஎசிசி அமைப்பின் தலைவராக அபு…

இந்தோனேசிய மாதுவை மலைப்பாம்பு விழுங்கியது

  54 வயதான வா தீபா என்ற ஓர் இந்தோனேசிய மாதுவை தென்கிழக்கு சுலாவெசியில் ஓர் எட்டு மீட்டர் மலைப்பாம்பு விழுங்கி விட்டது. ரமதானின் கடைசி நாளன்று தமது தோட்டத்திலுள்ள சோளங்களைப் பார்ப்பதற்காகச் சென்ற வா தீபா காணாமல் போய் விட்டார். அடுத்த நாள் காலையில் அவரது உறவினர்கள்…

கைரி அம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்

  இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் அம்னோ கட்சித் தேர்தலில் கைரி ஜமாலுடின் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறார். அவர் இன்று தமது நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்வார் என்று த ஸ்டார் செய்தி கூறுகிறது. தாம் அம்னோ உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாகவும், அம்னோ தலைவர் அல்லது…

இந்திரா காந்தியின் குழந்தை கண்டுபிடிக்கப்படுவதை விரைவுபடுத்த ஐஜிபியை சந்திக்கிறார் குலா

  நீதிமன்ற உத்தரவின்படி குழந்தை பிரசனா டிக்சாவை கண்டுபிடித்து அதன் தாயார் இந்திரா காந்தியிடம் ஒப்படைக்கும் பணியை விரைவுபடுத்துவது குறித்து இந்திரா காந்தியின் வழக்குரைஞரும் தற்போது மனிதவள அமைச்சருமான மு. குலசேகரன் போலீஸ் படைத் தலைவரை (ஐஜிபி) சந்திக்க விருக்கிறார். பிரசனா டிக்சாவை அதன் தாயாரிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம்…

ரஷ்ய உலகக் கிண்ணக் காற்ப்ந்தாட்டப் போட்டியில் பயங்கரவாதம்: அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்க   வெளியுறவு   அமைச்சு,   பயங்கரவாதிகள்   ரஷ்யாவில்  உலகக்  கிண்ணக்  காற்பந்தாட்டங்கள்  நடக்கும்   இடங்களைக்  குறி  வைத்துத்   தாக்கலாம்  என  எச்சரிக்கை   வெளியிட்டுள்ளது. “உலகக்  கிண்ணம்   போன்ற   பெரிய    போட்டிகள்   பயங்கரவாதிகளுக்குக்  கவர்ச்சிகரமான   இலக்குகளாகும்”,  என  அது  ஓர்    அறிக்கையில்   கூறியது. “உலகக்  கிண்ணக்  காற்பந்தாட்டப்   போட்டிக்குப்  பாதுகாப்பு   ஏற்பாடுகள்  …

அம்னோவை வழிநடத்த ‘இளம்’ தெங்கு ரசாலியே சிறந்த தேர்வு- காடிர்…

மூத்த    செய்தியாளரான   ஏ.காடிர்   ஜாசின்   புதிய  மலேசியாவில்   அம்னோ  தலைவராவதற்கு   “இளைஞர்” தெங்கு  ரசாலியே   மிகவும்   பொருத்தமானவர்   என்று  கூறினார். “என்னைப்  பொருத்தவரை,    அம்னோவில்    பயனான   மாற்றத்தைச்    செய்யக்கூடியவர்   குவாங்  மூசாங்   எம்பியும்   முன்னாள்   அம்னோ    உதவித்   தலைவருமான    தெங்கு   ரசாலிதான். “81   வயதானாலும்   அவர்  இளைஞர்தான்.  அவருக்கு …

பெட்ரியோட்: டிபிகேஎல் ரமலான் சந்தை முறைகேடு ஹரப்பானுக்கு முதல் கரும்புள்ளி

ஆயுதப்  படை      முன்னாள்   பணியாளர்  சங்கம்,   பெட்ரியோட்,   கோலாலும்பூர்  மாநகராண்மைக்  கழக(டிபிகேஎல்)த்தின்  ரமலான்   சந்தை    விவகாரம்   பக்கத்தான்  ஹரப்பானுக்கு   முதலும்   கடைசியுமான  “கரும்புள்ளி”ச்  சம்பவமாக   இருக்கட்டும்   என்கிறது. “ஒரு  பெர்சத்து   தொகுதித்    தலைவர்,   புக்கிட்   பிந்தாங்    எம்பி,   டிபிகேஎல்    அதிகாரிகள்     சம்பந்தப்பட்டுள்ளதாகக்  கூறப்படும்    டிபிகேஎல்   ரமலான்  சந்தை   விவகாரம்   …

நாட்டின் கடன் சூழ்நிலை 100-நாள் வாக்குறுதிகளுக்கு இடையூறாராக இருக்கிறது, துணைப்…

  பக்கத்தான் ஹரப்பான் அளித்த 100-நாள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு இன்னும் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் நேற்று கூறினார். நமக்கு கடன் பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றை நாம் கட்டியாக வேண்டியுள்ளது. முன்னதாக, கடன் பிரச்சனை இந்த அளவுக்கு…

மகாதிரின் திறந்த இல்ல ஹரி ராயா உபசரிப்பில் 50,000 மேற்பட்ட…

  ஹரி ராயாவை முன்னிட்டு புத்ரா ஜெயாவில் பிரதமர் மகாதிர் அவரது ஶ்ரீ பிரடானா இல்லத்தில் இன்று அளித்த திறந்த இல்ல உபசரிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். 15 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர், மகாதிர் அளித்த முதல் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டவர்கள் மகாதிரை பார்ப்பதில் ஆர்வம்…

ஹரி ராயா நல்வாழ்த்துகள்

செம்பருத்தி.கோம் அதன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனைத்து மலேசியர்களுக்கும் அதன் ஹரி ராயா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. 

மஇகா-வின் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா தொடரவேண்டும்

‘ஞாயிறு’ நக்கீரன் - எழுபது ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கட்சி; அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொய்வின்றி ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி என்னும் பெருமைகளுக்கு உரிய கட்சி மஇகா. அப்படிப்பட்ட மஇகா.. .., தமிழர்களை மிகப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் மஇகா, தமிழர்களின் தாய்மொழியான தமிழைப் பாதுகாக்க ஓர்…

கொக்கரித்த தேர்தல் ஆணையரின் வேதனையான நிலமை !

'ஞாயிறு' நக்கீரன்- 61 ஆண்டு கால அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டுவிட்டு, புத்தாட்சியை அமைத்துள்ள நம்பிக்கைக் கூட்டணி, இன்று(ஜூன் 14) 36-ஆவது நாளை எட்டியுள்ளது. நோன்பு மாதம் இன்றோடு நிறைவு பெற்று நாளை வெள்ளிக்கிழமை நோன்புத் திருநாளைக் கொண்டாட நாடு, குறிப்பாக இஸ்லாமியப் பெருமக்கள் தயாராக இருக்கும் வேளையில்,…

நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் தமிழ்ப்பள்ளிகள் சிறப்படையும் – கல்வி அமைச்சர்…

தமிழ் வழி ஆரம்பக் கல்வி வழங்கும் தமிழ்ப்பள்ளைகளைச் சீரமைக்க கல்வி அமைச்சர் ஆர்வம் கொண்டுள்ளதாக கோலாலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறினார். நேற்று கல்வி அமைச்சருடன்   நடத்திய சந்திப்பு பயன் மிகுந்தது என்று அவர் குறிப்பிட்டார். நம்பிக்கை கூட்டணியின் கீழ் தமிழ்ப்பள்ளிகள்களின் சிக்கல்களைக் களைய ஒரு…