அறிக்கை : தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நஜிப் கூறுகிறார்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தனக்கும் தன் குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக போலிஸ் புகார் செய்துள்ளதாக உள்ளூர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 1எம்டிபி ஊழல் தொடர்பான மோசடி விசாரணையில் ‘சாட்சிகள் பாதுகாப்பு திட்ட’த்தின் கீழ் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டதாகவும் மலாய் மெயில் கூறியுள்ளது.…

புதிதாக அமைக்கப்பட்டு வரும் அமைச்சரவையில் மூன்று அல்லது நான்கு இந்தியர்கள்…

    பக்கத்தான் ஹரப்பான் தலைவரும் பிரதமருமான மகாதிர் “இந்தியச் சமூகத்தைச் சமூகப் பொருளியல் ரீதியில் இதர சமூகங்களுக்கு இணையாக உயர்த்துவது தன் முக்கிய இலக்குகளில் ஒன்றென” கூறியிருப்பதை வரவேற்பதாக “நாட்டின் முதன்மை இந்திய சமூக அமைப்புகள்” என்று கூறிக்கொள்ளும் 14 இந்திய என்ஜிஒ-கள் நேற்று பிரிக்பீல்ட்ஸில் நடந்த…

‘நஜிப்பிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு, மார்க்கோசின் சொத்து மதிப்பை…

முன்னாள் பிரதமர் நஜிப்பின் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட சொத்தின் மதிப்பு, பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி பெர்டினாண்ட் மார்க்கோஸ் மற்றும் அவரது துணைவியார் இமெல்டாவின் சொத்து மதிப்பையும் மிஞ்சும் சாத்தியம் உள்ளது. "ஓர் அற்புதமான சாதனையை நாம் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன், இமெல்டா மற்றும் மற்றவர்களையும் மீற (சொத்து) வாய்ப்புள்ளது,” என…

இரும்புப் பெட்டிக்குள் பழைய வெளிநாட்டு நாணயம், திருமணச் சான்றிதழ் –…

ஜாலான் லங்காக் டூத்தா, தாமான் டூத்தாவில் உள்ள நஜிப் துன் ரசாக்கின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரும்புப் பெட்டி வெற்றிகரமாக திறக்கப்பட்டது, அதனுள் பழைய வெளிநாட்டு நாணயங்கள் வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக கூறுகையில், நஜிப்பின் செய்தித் தொடர்பாளர், அதனுள் நஜிப் – ரொஸ்மாவின் திருமணச் சான்றிதழ்களும் இருந்தது என்றார்.…

முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுவதை இசி தலைவர் மறுத்தார்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் இல்லத்திற்குச் சென்றதையும் அங்கு செய்தி சேகரித்துகொண்டிருந்த பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஒரு தவறான அறிக்கையை வெளியிட்டார் எனக் கூறப்படுவதையும் தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா மறுத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவ்வாறு பதிவிட்ட இரண்டு முகநூல் செயலர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையை அவர்…

நாட்டின் எதிரியாகக் கருதப்பட்ட சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் இப்போது மலேசியா…

  முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அவரது நிருவாகத்தைக் கவிழ்க்கச் சதி செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு நாட்டின் எதிரியாகக் கருதப்பட்ட சரவாக் ரிப்போர்ட்டின் ஆசிரியர் கிளேர் ரியுகாசல்-பிரவுன் இப்போது நாட்டிற்குள் வருவதற்கான சுதந்திரம் பெற்றுள்ளார். பிரச்சனை இன்றி வந்து சேர்ந்தேன். எனது இருதயம் சற்று தயங்கியது. ஆனால், குடிநுழைவுத்துறையில்…

ஜொகூர் பாருவில் ‘மே18 – முள்ளிவாய்க்கால்’ நினைவேந்தல் நிகழ்ச்சி

கடந்த 2009, மே18-ம் நாள் இலங்கை அரசு நடத்திய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தங்கள் இன்னுயிரை ஈந்த அப்பாவி பொதுமக்களை நினைவு கோரும் நிகழ்ச்சி, நேற்றிரவு ஜொகூர் பாரு மாநகரில் நடந்தேறியது. ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஏற்பாட்டில், தொடர்ந்து 9-ம் ஆண்டாக நடந்த இந்த ‘மெழுகுவர்த்தி ஏந்தல் நினைவஞ்சலி’ நிகழ்ச்சியில்…

டைம்” நான் மகாதிர், பாக் லா, நஜிப் ஆகியோரல் விசாரணைக்கு…

  மேன்மக்கள் மன்றத்தின் தலைவர் டைம் ஸைனுடின் தமக்கு எதிராக அன்வார் இப்ராகிம் விடுத்துள்ள எச்சரிக்கையை உதறித்தள்ளினார். அன்வார் இப்ராகிம் மலேசியாகினியுடன் நடத்திய நேர்காணலில் டைமின் ஜனநாயக பொறுப்புடைமை குறித்து கேள்வி எழுப்பியதுடன் அந்த முன்னாள் நிதி அமைச்சர் அவரது கடந்த கால பெரும் பிரச்சனைக்களுக்கு விளக்கம் அளிக்க…

பேரரசரின் ஒப்புதலோடு அமைச்சர்களின் பெயர்களை மகாதிர் வெளியிட்டார்

  அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளப் போகிறவர்களின் பெயர் பட்டியலை பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டது. பேரரசர் சுல்தான் மாமுட் V தின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இந்தப் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. இரண்டு உயர்மட்ட பதவிகளைத் தவிர்த்து, பெர்சத்துக்கு மூன்று பதவிகள், பிகேஆருக்கு மூன்று, டிஎபிக்கு 4…

மகாதிர்: கல்வி அமைச்சர் பதவியை நான் எடுத்துக்கொள்ள முடியாது

  கல்வி அமைச்சர் பதவியைத் தாம் எடுத்துக்கொள்ள முடியாது, ஏனென்றால் அது பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கைக்கு முரணானது என்று பிரதமர் மகாதிர் கூறினார். அது தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் அதை இப்போதைக்கு மீற முடியாது...ஆனால் நான் கல்வி அமைச்சர் பதவியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை…

இன்று மாலை, பிரதமர் பேரரசரைச் சந்திக்கிறார்

யாங் டி-பெர்த்துவான் அகோங்கிடம் மலேசிய அமைச்சரவையின் பட்டியலை வழங்க, இன்று மாலை அவரைச் சந்திக்கவிருக்கிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட். இன்று மாலை 5 மணியளவில், இஸ்தானா நெகாராவில் அச்சந்திப்பு நிகழும் என பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். "டாக்டர் மகாதிர், அவர் தரப்பு முன்மொழிந்த…

தனது விமர்சகர் கைது செய்யப்பட்டதை ஏற்கவில்லை என்கிறார் மகாதிர்

தன்னை விமர்சித்தார் என்பதற்காக ஒருவரைக் கைது செய்த போலிசாரின் நடவடிக்கையைத் தான் ஏற்கவில்லை என்றும், போலிஸ் தரப்பினர் அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பிரதமர் டாக்டர் மகாதிர் கூறியுள்ளார். "என்னை விமர்சிப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுடன் நான் உடன்படவில்லை. இதைப் பற்றி போலிசாருக்கு நான் தெரிவித்திருக்கிறேன். நாடாளுமன்றம்…

அன்வார் : டாக்டர் எம் கல்வி அமைச்சராக இருக்க முடியும்

டாக்டர் மகாதிர் பிரதமராகவும் கல்வி அமைச்சராகவும் செயல்படுவது, பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கைக்கு எதிராக இல்லை என ஹராப்பான் பொதுத் தலைவரான அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். "இது முரண்பாடானது (தேர்தல் அறிக்கைக்கு) என்று நான் நினைக்கவில்லை. பிரதமர் என்பது ஒரு ‘போர்ட்ஃபோலியோ’ அல்ல என்று நான் நினைக்கிறேன். “பிரதமர்…

கொண்டோவில் மலைக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் – 284 ஆடம்பர கைபேக்குகள்,…

  நேற்றிரவு கோலாலம்பூர் பெவியியன் குடியிருப்பு அடுக்ககத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்குச் சொந்தமான வீட்டில் போலீஸ் மேற்கொண்ட சோதனைகளில் பிரமிக்க வைக்கும் சொத்துகளையும் ரொக்கத்தையும் கண்டனர். போலீஸ் மேற்கொண்ட சோதனைகளின் போது 284 ஆடம்பர கைபேக்குகள் மற்றும் நகைகள், இதர விலையுயர்ந்த பொருள்கள் மற்றும் பல வகையான…

அன்வார் : பொதுத் தேர்தல் இரவன்று, நஜிப் இரண்டு முறை…

மே 9-ம் தேதி பொதுத் தேர்தலில், பிஎன் கடுமையான தோல்வியைச் சந்தித்தபின்னர், என்ன செய்வது என்று ஆலோசனை பெற, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அன்வார் இப்ராஹிமைத் தொடர்பு கொண்டுள்ளார். யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் மன்னிப்பைப் பெற்ற பின்னர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அன்வார், பொதுத் தேர்தல் (ஜிஇ) இரவன்று…

மகாதிரை அவமதித்தார், ஆடவர் ஒருவர் கைது

பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமதை அவதூறாகப் பேசினார் என்பதற்காக, காவல்துறையினர் ஒருவரை இன்று கைது செய்தனர். ‘மகாதிர் மற்றும் இஸ்லாத்தை அவமதித்துள்ளார்’ என அதிருப்த்தி அடைந்த சில அரசு சாரா நிறுவனங்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அந்நபரைக் கைது செய்ததாக லங்காவி போலிஸ் தலைமையகம் முகநூல் வழி…

முன்னாள் ஏஜி அபு தாலிப் தலைமையில் 1எம்டிபி குழு நிறுவப்பட்டுள்ளது

  1எம்டிபி ஊழல்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாக மேன்மைமிக்கவர்கள் மன்றம் இன்று மாலை அறிவித்தது. 1எம்டிபி விவகாரத்தை ஆய்வதற்காக ஒரு தனிப்பட்ட முழு இருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை மன்றம் அங்கீகரிப்பதாக ஒரு செய்தி அறிக்கையில் அம்மன்றம் கூறுகிறது. அக்குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். அக்குழுவின்…

மகாதிர் கல்வி அமைச்சராகிறார், வான் அசிஸா மகளிர் விவகாரங்களுக்கான அமைச்சர்

பக்கத்தான் ஹரப்பானின் புதிய அமைச்சரவையில் கல்வி அமைச்சர் பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதாக பிரதமர் மகாதிர் இன்று அறிவித்தார். இந்த நாட்டில் ஏராளமானோர் கல்வி கற்காதவர்களாக இருக்கிறார்கள். அதனால் நான் கல்வி அமைச்சர் பதவியை எடுத்துக் கொண்டேன். அதன் மீது நான் கவனம் செலுத்த முடியும் என்று நகைச்சுவையோடு…

மஇகா-வுக்குச் சொந்தமான RM3 பில்லியன் சொத்துக்களைத் திருப்பிக் கொடுங்கள், கட்சி…

மஇகா-வுக்குச் சொந்தமான சொத்துக்களைத் திருப்பிக் கொடுக்குமாறு, கட்சியின் முன்னாள் தலைவர் ச சாமிவேலுவையும் கட்சியின் கல்வி பிரிவு - எம்.ஐ.இ.டி. வாரிய உறுப்பினர்களையும் மஇகா உறுப்பினர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான RM2.5 பில்லியன் சொத்துக்களை நிர்வகிக்கும் எம்.ஐ.இ.டி., அச்சொத்துக்களைக் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டுமென கட்சியின் உறுப்பினர்…

‘போலீஸ் நடவடிக்கை இயல்புக்கு மாறானது!’ – நஜிப்புக்கு நெருங்கிய வட்டாரங்கள்

முன்னாள் பிரதமர் நஜிப் இல்லத்தில் போலிசார் மேற்கொண்ட சோதனை தொடர்பில், அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிபடுத்தியுள்ளனர். இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக போலிசார் மேற்கொண்டுள்ள இச்சோதனை, இயல்புக்கு மாறாக அமைந்துள்ளது என மலேசியாகினியிடம் ஒருவர் தெரிவித்தார். மேலும் அந்நபர், நேற்றிரவு மலாய் சட்டை அணிந்திருந்த…

அன்வார்: டைம் பங்களிப்பு செய்யலாம், ஆனால் பழைய ஊழல்களை நினைவில்…

  பெர்சத்து அமைக்கப்படுவதற்கு முன்பே, பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஸைனுடினை ஊழல் பேர்வழிகள் ஒருவராக முன்னிநிலைப்படுத்தி இருந்தார். தற்போதைய பிரதமர் மகாதிர் அம்னோவை விட்டு வெளியேறி பக்கத்தான் ஹரப்பானுடன் சேர்ந்து குடிமக்களின் பிரகடனம் வெளியிட்ட போதும்கூட, டைமுடன் ஒத்துழைப்பது பற்றி…

நஜிப் வீட்டில் போலிசாரின் தேடல் தொடர்கிறது

நேற்று இரவு, கோலாலம்பூர், ஜாலான் லங்காக் டூத்தாவில் உள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் இரசாக்கின் தனியார் இல்லத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடல் நடவடிக்கை, 12 மணி நேரங்கள் கடந்தும் இன்னும் தொடர்கிறது. சில போலிஸ் வாகனங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறின, ஆனால் ‘பிளாக் மரியா டிரக்’…

பிஎம் : 17,000 அரசியல் நியமனப் பொது ஊழியர்கள் நிறுத்தப்படுவர்

அரசாங்க செலவினங்களைக் குறைக்க, 17,000 அரசியல் நியமனப் பொது ஊழியர்களை அரசாங்கம் அகற்றும் எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் அறிவித்துள்ளார். அரசியல் நியமனப் பதவிகள் ஒரு 'வீண் செலவு' என அவர் விவரித்தார். "அதிகமான ஒப்பந்த ஊழியர்கள் இருப்பதாக நாங்கள் அறிகிறோம். இவர்களில் சிலர் நிர்வாகத்…