கிளந்தானில் பேரரசர், பேரரசியார் படங்களுக்கு இப்போது அனுமதி

கிளந்தானில் மாநில, மத்திய அரசாங்க அலுவலங்களில் பேரரசர் சுல்தான் அப்துல்லா அஹமட் ஷா, பேரரசியார் துங்கு அமினா மைமுனா இஸ்கண்டரியா ஆகியோரின் படங்களையும் வைப்பதற்கு மாநில அரசு இப்போது அனுமதி அளிக்கிறது. மாநில துணைச் செயலாளர்(நிர்வாகம்) அட்னான் உசேன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதைக் குறிப்பிட்டதாக மலாய்மொழி நாளிதழான…

இக்குவானிமிட்டியால், கெந்திங் பங்கு பரிவர்த்தனை சுறுசுறுப்படைந்தது

இரண்டு நாட்களுக்கு முன்னர், 126 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (அமெரிக்கா $1 = RM4.08), இக்குவானிமிட்டி சொகுசுக் கப்பலை வாங்கியப் பின்னர், இன்று காலை, பங்குச் சந்தையில், கெந்திங் நிறுவனத்தின் பங்குகள் தீவிரமாக வர்த்தகம் செய்யப்பட்டன. அந்த ஆடம்பரக் கப்பலால், கெந்திங் சூதாட்ட வணிகம் மற்றும் விடுமுறை வணிக…

நஜிப்: நான் கொள்ளைக்காரன் என்றால், பெட்ரோனாஸ்சில் எப்படி RM174b பணம்…

ரந்தாவ் இடைத்தேர்தல் | தன்னைக் கொள்ளைக்காரன் என்று குற்றஞ்சாட்டியவர்களின் வாயை அடைக்க, தனது நிர்வாகம் விட்டுச்சென்ற பெட்ரோனாஸ் பண இருப்பை முன்னாள் பிரதமர் நஜிப் தெரிவித்தார். "நான் கொள்ளைக்காரன் என்றால், பெட்ரோனாஸ்சின் ரொக்கம் எப்படி RM174 பில்லியன் இருக்கும்," என்று அவர், நேற்றிரவு சென்டாயான், நெகிரி செம்பிலானில் நடந்த…

பிஎன்னுக்கு வாக்களித்தால் ரிம50 என்றுகூறிக் கட்சிப் பெயரைக் கெடுக்க முயல்கிறார்கள்…

ரந்தாவில் பிஎன் ஆதரவாளர்களுக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் அவை பிஎன்னுக்கு வாக்களித்தால் ரிம50 கொடுக்கப்படும் என்று கூறுவதாகவும் முகம்மட் ஹசான் இன்று கூறினார். பிஎன் வேட்பாளரான அவர், தம் கட்சி பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டதில்லை என்றும் அது யாரோ பிஎன் பெயரைக் கெடுப்பதற்காக…

புத்ரா ஜெயா சிறார் ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடைசெய்ய சட்டம் கொண்டுவராது

பெற்றொரில் ஒருவர் மதம் மாறும்போது பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதமாற்றப்படுவதைத் தடை செய்யும் சட்ட உள்பிரிவு 88 ஏ-யை நடைமுறைப்படுத்த புத்ரா ஜெயா எண்ணங் கொண்டிருக்கவில்லை. 2018-இல் கூட்டரசு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் ஐந்து சிறார்கள் மதமாற்றப்பட்ட விவகாரத்தைச் செல்லாதென்று தீர்ப்பளித்திருப்பதை உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் சுட்டிக்காட்டினார். “சட்ட…

ஜிடிபி உயர்ந்ததால் தேசிய கடன் குறைந்துள்ளது- மகாதிர்

உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி(ஜிடிபி) பெருகிவருவதைத் தொடர்ந்து தேசியக் கடனளவு குறைந்து வருவதால் நாட்டின் நிதிநிலை ஆரோக்கியமாக உள்ளது என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “ஜிடிபி உயரும்போது கடன்கள் குறையும். இது அப்பட்டமான உண்மை”, என இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மகாதிர் கூறினார். “பல கடன்களைக் கட்டி…

வெளிநாட்டு நன்கொடைக்கு வரி இல்லையா? சட்டம் அப்படிக் கூறவில்லை-நிபுணர்

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக எந்தச் சட்டமும் கூறவில்லை என்கிறார் வரி நிபுணர் வீரேந்தர்ஜிட் சிங். ஒரே ஒரு நன்கொடைக்கு மட்டும் வரிவிலக்கு உண்டு. பெற்றோரிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் பெறப்படும் நன்கொடைக்கு. அது சேவைக்காகக் கொடுக்கப்படும் சன்மானமாக அல்லாமல் பாசத்துடன் கொடுக்கப்படும் பரிசாகக் கருதப்படுகிறது. “ஒருவருக்கு ஒரு நன்கொடை வருகிறது.…

கோ, அம்ரி காணாமல் போனதை விசாரிக்க சுயேச்சைப் பணிக்குழு அமைப்பீர்-…

பாதிரியார் ரேய்மண்ட் கோ, அம்ரி ச்சே மாட் ஆகியோர் காணாமல் போனதற்கு போலீஸ் சிறப்புப் பிரிவுதான் காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ள மலேசிய மனித உரிமை ஆணையம், அவ்விருவர் காணாமல்போன விவகாரத்தைத் திரும்பவும் விசாரிக்க ஒரு சுயேச்சைப் பணிக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இருவர் காணாமல்போனதுமீதான போலீஸ்…

‘டத்தோஸ்ரீ’ பட்டம் பறிக்கப்பட்டதாகக் கூறப்படுவது வதந்தி- தொழிலதிபர்

தொழில் அதிபர் ஜி.ஞானராஜாவுக்குக் கொடுக்கப்பட்ட டத்தோ ஸ்ரீ பட்டத்தை பகாங் மாநில அரசு பறித்துக்கொண்டதாகக் கூறும் கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மார்ச் 13 எனத் தேதியிடப்பட்ட அக்கடிதத்தில் மாநிலச் செயலாளர் சலேஹுடின் ஈஷாக், 2014-இல் தொழிலதிபருக்கு வழங்கப்பட்ட ஸ்ரீசுல்தான் அஹமட் ஷா விருது உடனடியாக இரத்துச் செய்யப்படுவதாகக்…

RM19 மில்லியன் மோசடி, தொழிலபதிபர் மீது குற்றச்சாட்டு

பினாங்கு, கடலுக்கடி சுரங்கப்பாதைத் திட்டத்தில், முகான்மை ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம், RM19 மில்லியன் மோசடி செய்துவிட்டார் என்று தொழிலபதிபர் ஜி ஞானராஜா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தனது அரசியல் தொடர்பு மூலம், கொண்சோர்ட்டியம் ஜீனித் கொண்ஸ்ட்ராக்‌ஷன் சென் பெர் (Consortium Zenith Construction Sdn Bhd) நிறுவனத்தின், நிர்வாக…

RM514 மில்லியனுக்கு, கெந்திங் நிறுவனத்திடம் இக்குவானிமிட்டி விற்கப்பட்டது

ஆடம்பரப் பயணக் கப்பல், இக்குவானிமிட்டி, 126 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (RM514 மில்லியன்) கெந்திங் மலேசியா பெர்ஹாட் நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டது என்று அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் இன்று தெரிவித்தது. "கோலாலம்பூர் கடற்படை நீதிமன்றம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கெந்திங் நிறுவனத்திடம் அந்தச் சொகுசு கப்பலை வழங்க…

‘இது நகைச்சுவை நேரமல்ல’, டாக்டர் ஶ்ரீராம் மாட் ஹசானுக்கு நினைவூட்டல்

ரந்தாவ் இடைத்தேர்தல் | இடைத்தேர்தல் பிரச்சார நேரத்தில், கேலி கிண்டலுக்கு இடமில்லை எனப் பிஎச் வேட்பாளர் டாக்டர் ஶ்ரீ ராம், பிஎன் வேட்பாளர் முகமட் ஹசானுக்கு நினைவுபடுத்தினார். “இது கிண்டலடிக்கும் நேரமல்ல. மக்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்ட வேண்டிய நேரம். "பிரச்சாரத்தில் 'குடிபோதையில்' என்ற…

ஹாடி சிகிச்சைக்காக ஐஜேஎன் -இல் சேர்க்கப்பட்டார்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், சிகிச்சை பெறுவதற்காக தேசிய இருதயக் கழகத்தில் சேர்க்கப்பட்டார். அதை அவரின் பத்திரிகைச் செயலர் அப்துல் மாலிக் அப் ரசாக்கும் உறுதிப்படுத்தினார். . “ஆமாம், நேற்று அவர் ஐஜேஎன்னில் சேர்க்கப்பட்டார். துவான் குரு ஓய்வெடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர்”, என்றவர் மலேசியாகினிக்கு இன்று காலை…

மாட் ஹசான்: என் சொத்துகளை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை

அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான், ரந்தாவ் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தன் சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றார். நெகிரி செம்பிலான் மந்திரி புசாராக இருந்தபோதே, மாநில அரசின் கொள்கைக்கேற்ப தன் சொத்து விவரத்தை அறிவித்திருப்பதாக அவர் சொன்னார். “மேலும், இப்போது என் சொத்துகள் நாளுக்குநாள்…

கையூட்டு பெற்ற அமைச்சரின் உதவியாளருக்கு நான்கு நாள் தடுப்புக் காவல்

மேம்பாட்டாளர் ஒருவரிடமிருந்து ரிம28,000 மதிப்புள்ள கடிகாரத்தைக் கையூட்டாகப் பெற்றார் எனும் சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி)த்தால் கைது செய்யப்பட்ட விவசாயம், விவசாயம் சார்ந்த அமைச்சர் சலாஹுடின் ஆயுப்பின் உதவியாளர் நான்கு நாள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அமைச்சர் சலாஹுடின் எம்ஏசிசி-இல் தலையிடப்போவதில்லை என்று…

தொகுதிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டப்படுவதாக எதிரணியினர் புலம்பல்

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் தொகுதிகளுக்காகக் கொடுக்கப்படும் மான்யமான ரிம100,000 பக்கத்தான் ஹரப்பான் எம்பிகளுக்குக் கொடுக்கப்படும் மான்யத்தில் பத்தில் ஒரு பங்குக்கூட இல்லை எனக் குறைப்பட்டுக் கொண்டனர். இவ்வாண்டில் ஹரப்பான் எம்பிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரிம1.5 மில்லியன். அத்தொகை கடந்த ஆண்டு கொடுக்கப்பட்டதைக் காட்டிலும் மும்மடங்கு அதிகம்.…

RM 28,000 மதிப்புள்ள கடிகாரத்தை இலஞ்சமாகப் பெற்றார், அமைச்சரின் அரசியல்…

தோராயமாக RM28,000 மதிப்புள்ள கடிகாரத்தைக் கையூட்டாகப் பெற்றுக் கொண்டார் எனும் சந்தேகத்தின் பேரில், அமைச்சர் ஒருவரின் அரசியல் செயலாளரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது. புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில், மாலை மணி 5 அளவில், 47 வயதான அந்நபர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள்…

நஜிப் விசாரணை நேரடி ஒளிபரப்பு இல்லை

புதன்கிழமை தொடக்கம், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும், நஜிப் ரசாக் மீதான எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் சென். பெர். நிதி தொடர்பான குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை, நேரடியாக ஒளிபரப்ப முடியாது. நீதிமன்றத்தின் விசாரணை, எந்த ஊடகத்திலும் நேரடியாகவோ அல்லது பதிவு செய்யப்பட்டோ ஒளிபரப்ப முடியாது என்று, மத்திய நீதிமன்ற அலுவலகத்தின்…

ரிம1.5 பில்லியன் வருமான வரி செலுத்துக- நஜிப்பிடம் ஐஆர்பி கெடுபிடி

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பணமோசடி வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு வர இன்னும் இரண்டு நாள்கள் உள்ள வேளையில் நிலுவையில் உள்ள ரிம1.5பில்லியன் வருமான வரியைக் கட்டச் சொல்லி அவருக்கு உள்நாட்டு வருமான வாரியம்(ஐஆர்பி) கடிதம் அனுப்பியுள்ளது. 2011இலிருந்து 2018வரை ஏழாண்டுகளுக்கு நஜிப் வருமானத்துக்குக் கணக்குக் காண்பித்து…

நஜிப்பின் பணமோசடி வழக்கு தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட வேண்டும்- அன்வார்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பணமோசடி வழக்கு விசாரணைக்கு வரும்போது அது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பட வேண்டும் என்பதை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமும் ஆதரிக்கிறார். என்றாலும், “நேரடியாக ஒளிபரப்புவதா வேண்டாமா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்”, என்று அந்த போர்ட் டிக்சன் எம்பி கூறியதாக…

ஹாடி: பாஸ்-அம்னோவைக் குறைகூறுவோர் ‘யூதர்கள்’

பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பாஸ்-அம்னோ ஒத்துழைப்பைக் குறைகூறுவோர் யூதர்களுக்கு ஒப்பானவர்கள் என்று சாடினார். நாட்டைக் காக்கத்தான் பாஸும் அம்னோவும் ஒத்துழைப்பதாக அவர் வலியுறுத்தினார். “பாஸும் அம்னோவும் ஒன்றுசேர்வதைக் குறை கூறுகிறார்கள். மற்ற இனங்களுக்கு எதிராக போரிடத்தான் அவை ஒன்றுசேர்வதாகக் கூறுகிறார்கள். (எங்களைக்) குறை சொல்வோர்…

ரந்தாவ் இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிந்துகொள்வோம்

கடந்தாண்டு பொதுத் தேர்தலில், பிஎன் மற்றும் பிஎச் வேட்பாளர்களிடையே, நேர்முனை போட்டியாக இருந்திருக்க வேண்டிய ரந்தாவ் தேர்தல் களம், ஏப்ரல் 13 இடைத்தேர்தலில் நான்கு முனை மோதலாக மாறியுள்ளது. பிப்ரவரி 18-ம் தேதி, பெடரல் நீதிமன்றம், தேர்தல் நீதிமன்றத்தின் முடிவைத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்த பின்னர், முகமட்…

‘சிஇபி அறிக்கையைக் கண்டிப்பாக பொதுவில் வெளியிட வேண்டும்’

அரசாங்க ஆலோசனை மன்றத்தின் (சிஇபி) அறிக்கையில், உணர்ச்சியைத் தூண்டும் சில விஷயங்களில் திருத்தம் செய்தாவது, பொதுவில் வெளியிட வேண்டும் என்று, 54 அரசு சார்பற்ற இயக்கங்கள் மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன. நிறுவன மறுசீரமைப்பு குழுவைப் (ஐஆர்சி) போல், சிஇபி அறிக்கையும் அரசாங்க சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டதனால், அதனைப் பொதுவில்…