மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
குவாக் டிஏபிக்குப் பண உதவி செய்யவில்லை என்பதைக் கேட்டு மகிழ்கிறார்…
கோடீஸ்வரர் ரோபர்ட் குவாக் பிஎன் அரசாங்கத்தைக் கவிழ்க்க டிஏபிக்குப் பண உதவி செய்வதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார் என்பதைக் கேட்டு மகிழ்ச்சி கொள்கிறார் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ். ஆனால், அதற்குமுன் தொழிலதிபரை வசைபாடியதற்கு அவர் வருத்தப்படத் தயாராக இல்லை. “முன்பே அவர் மறுத்திருந்தால் இவ்வளவு நடந்திருக்காது.…
’ஐயா, நான் பெக்கானுக்கு ஆயுதங்களுடன் செல்லவில்லை’- மகாதிர் கிண்டல்
டாக்டர் மகாதிர் முகம்மட் நாளை பகாங்கில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கோட்டையான பெக்கானுக்குச் செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்லவில்லை என்றும் பேசுவதற்கு மட்டுமே செல்வதாகவும் கூறினார். தங்கள் தொகுதிக்கு வந்தால் கலகம் மூளலாம் என்று பெக்கான் அம்னோ எச்சரித்திருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது மகாதிர் அவ்வாறு கூறினார். “கலகம் …
ஒரு கோடீஸ்வரர்மீது வசைபாடிய நஸ்ரிக்கு இன்னொரு கோடீஸ்வரர் கண்டனம்
சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் கோடீஸ்வரர் ரோபர்ட் குவாக்கை விமர்சித்துத் தள்ளியதை இன்னொரு கோடீஸ்வரர் கண்டித்திருக்கிறார். ஒரு திறந்த மடல் வரைந்த கண்டரி ஹைட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனரும் அதில் பெரும்பான்மை பங்கு வைத்திருப்பவருமான லீ கிம் இயு, அம்னோவின் மூத்த தலைவர் மிகவும் மரியாதைக் …
நஜிப்பின் டோல்-எதிர்ப்புப் பேச்சு, ஒரு தேர்தல் தந்திரம்- பிகேஆர் சாடல்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நெடுஞ்சாலை டோல் கட்டணங்களுக்கு எதிராக பேசுவது ஒரு தேர்தல் தந்திரம் என்கிறார் பிகேஆர் தகவல் தலைவர் சைட் இப்ராகிம் சைட் நோ. “நஜிப் பேசுவது கேட்பதற்கு இனிக்கிறது. ஆனால், எல்லாமே தேர்தல் பேச்சு. “பிஎன் டோலை ஒரு கருவியாக பயன்படுத்துவதைத் தடுக்க ஒரே …
சமயத்தைவிட்டு வெளியேறும் வழக்குகளை சிவில் நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது –…
இஸ்லாத்தைவிட்டு வெளியேற விரும்பும் நால்வர் அதற்காக சிவில் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது எனக் கூட்டரசு நீதிமன்றம் கூச்சிங்கில் தீர்ப்பளித்தது. சமயத்தை விட்டு விலகும் விவகாரங்களில் முடிவு செய்யும் அதிகாரம் சிவில் நீதிமன்றங்களுக்கு இல்லை எனக் கூட்டரசு நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதிபதிகள் குழு ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளதாக போர்னியோ போஸ்ட் …
மலேசிய சட்டவிரோத தொழிலாளர்கள் 200 பேரை, நியூசிலாந்து வெளியேற்றியது
மலேசியா, சட்டவிரோதத் தொழிலாளர்களைக் கைதுசெய்துவரும் வேளையில், நம் மக்களில் அதிகமானோர் சட்ட விரோதமாக நியூசிலாந்தில் வேலை செய்துவருவது தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களில், சுமார் 200 மலேசிய சட்டவிரோத கட்டுமானத் தொழிலாளர்களை நாடுகடத்தியதாக அல்லது அந்நாட்டில் நுழைவதிலிருந்து தடுத்துள்ளதாக, நியூசிலாந்து குடிநுழைவுத்துறை கடந்த வாரம் அறிவித்தனர். அவர்களில் சுமார்…
குவோக், ஆண்மையற்றவராக இருக்காதீர், பொதுத் தேர்தலில் போட்டியிட வாரும், நஸ்ரி…
கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக்கை சீண்டும் மிக அண்மைய அம்னோக்காரராக கிளம்பியிருக்கிறார் சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ். ஹோங்காங்கில் வசித்து வரும் "சீனி மன்னன்" ரோபர்ட் ஹுவோக், 94, மலேசியாவுக்குத் திரும்பி வந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மலேசியகினியிடம் பேசிய…
பெப்ரவரி 28 – நஜிப்பின் கோட்டையில் மகாதிர்!
பிரதமர் நஜிப் ஓர் ஊழல் பேர்வழி, நாட்டின் கஜனாவை காலி செய்தவர். அவரை மக்கள் ஆதரிக்கக்கூடாது என்று நாடு தழுவிய அளவில் பயணம் மேற்கொண்டு, பேசி வரும் முன்னாள் பிரதமர் மகாதிர், எதிரியின் கோட்டைக்கே செல்கிறார். எதிர்வரும் புதன்கிழமை (பெப்ரவரி 28), 93 வயதான பாக்கத்தான் ஹரப்பான்…
பாஸ் கெடாவுக்கான தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டது
பாஸ் கட்சி ககாசான் செஜாத்ரா கூட்டணியில் உள்ள அதன் பங்காளிக்கட்சிகளுடன் இன்று கெடா, அலோர் ஸ்டாரில் 14வது பொதுத் தேர்தலுக்கான அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டது. கோட்டா சராங் சிமுட்டில் கெடா பாஸ் வளாகத்தில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் அந்த அறிக்கையை வெளியிட்ட …
குவாக் பற்றிக் கூறப்படுவதை ஜோகூர் தலைவர்கள் நம்பவில்லை
மலேசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ரோபர்ட் குவாக் எதிர்க்கட்சிக்கு நிதியுதவி செய்வதாகக் கூறப்படுவதை ஜோகூர் தலைவர்கள் இருவர் நம்பவில்லை. ஏழு தவணைகள் ஜோகூர் எம்பி-ஆகவுள்ள ஷாரிர் சமட், குவாக்கை ஒரு தொழில் அதிபராக நன்றாகவே தெரியும் என்றும் அவர் அரசியலில் தலையிடுபவர் அல்ல என்றும் கூறியதாக சைனா பிரஸ் …
‘மின்வெளிப் போரில் தோற்பதற்கு அம்னோ/பிஎன் விரும்பவில்லை’
14வது பொதுத் தேர்தலில் எதிரணியிடம் மின்வெளிப் போரில் தோற்றுப்போக அம்னோ/பிஎன் தயாராக இல்லை. எனவே, 191 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள ஐடி மற்றும் சமுக ஊடக அதிகாரிகள் எதிரணியினரின் இணையவெளித் தாக்குதல்களை முறியடிப்பதற்குத் துடிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அம்னோ தகவல் தொழில்நுட்ப(ஐடி)ப் பிரிவுத் தலைவர் அஹமட் மஸ்லான் …
ஜாம்: குவாக்குக்கு எதிராக மலாய்க்காரர் உணர்வுகளைக் கிளறி விடுகிறார் நஜிப்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ரோபர்ட் குவாக்குக்கு எதிராக கருத்துரைத்ததன் மூலமாக மலாய்க்காரர்களின் உணர்வுகளைக் கிளறி விட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் சைனுடின் மைடின் கூறினார். பிஎன் அரசாங்கத்தால்தான் குவாக் பெரும் செல்வந்தராக முடிந்தது என நஜிப் கூறியிருந்தார். குவாக் டிஏபிக்கு நிதியுதவி செய்வதாக …
ஜிஇ14 : சிலாங்கூரை பி.என். மீட்டெடுத்தால், கோயில்கள் உடைக்கப்படாது
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சிலாங்கூரில் பாரிசான் நேசனல் ஆட்சி அமைந்தால், அம்மாநிலத்தில் கோயில்கள் இடிக்கப்படாது என்று பிரதமரின் சிறப்பு அதிகாரி இஸ்ஸாம் ஜாலில் தெரிவித்துள்ளார். தமிழ்நேசன் பத்திரிக்கைக்கான ஒரு சிறப்பு நேர்காணலில், பி.என். அரசாங்கம் சட்டவிரோதமான கோயில் உடைப்பைக் கடுமையாக எதிர்ப்பதாக இஸ்ஸாம் கூறியுள்ளார். "இந்த நாட்டிலுள்ள…
ஜிஇ14 : ஜொகூரில் சுனாமி ஏற்படாது, கெராக்கான் நம்பிக்கை
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் நேசனல் கூட்டணிக் கட்சிகளுக்கு அரசியல் சுனாமி எதுவும் ஏற்படாது என்று ஜொகூர் கெராக்கான் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. சீன மற்றும் இந்திய வாக்காளர்களின் சாதகமான வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு, இந்த நம்பிக்கை வந்தது என்று ஜொகூர் மாநிலக் கெராக்கான் தலைவர் தீ…
ஜொகூர், தஞ்சோங் லங்சாட் ஈமக்கிரியை நில விவகாரம், ஆட்சிமன்ற உறுப்பினர்…
30 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து, கடந்த 2016-ல் வழங்கப்பட்ட தஞ்சோங் லங்சாட் ஈமக்கிரியை நில விவகாரத்தை மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் இரா. வித்தியானந்தன் கைக் கழுவி விட்டதாக ஜொகூர் ஜசெக சந்திர சேகரன் சாடியுள்ளார். ஜொகூர் பாரு, லீடோ கடற்கரை, மேம்பாட்டு திட்டத்தால் விரிவாக்கம் செய்யப்பட்டதால், கடந்த…
லியோ: சீன வாக்காளர்கள் மசீசவுக்கு திரும்பி வருவார்கள்
14 ஆவது பொதுத் தேர்தலில் சீன வாக்காளர்களிடமிருந்து கூடுதல் ஆதரவை. குறிப்பாக நகர்புற பகுதிகளிலிருந்து, திரட்ட முடியும் என்று மசீச தலைவர் நம்புகிறார் கடந்த இரண்டு தவணைகளில் எதிரணி எவ்வித உறுதியான மேம்பாடுகளைக் கொண்டு வராததால், சீன வாக்காளர்களின் ஆதரவு அலைபோல் வந்து கொண்டிருக்கிறது என்று மசீச…
நஜிப்: பிரிம் வாக்குகளுக்காகக் கொடுக்கப்படும் விலையல்ல
வாக்குகளுக்கு விலையாகத்தான் பிரிம் கொடுக்கப்படுகிறது என்பது உள்பட எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் வேளையில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிரிம் உதவித் தொகை வழங்கப்படுவதற்கான உண்மையான காரணத்தை இன்று எடுத்துரைத்தார். பிரிம் உதவித் தொகை பெறும் சுமார் ஈராயிரம் பேரடங்கிய கூட்டத்தில் பேசிய அவர், அது மக்களில் …
அரசாங்கத்திற்கு எதிரான முன்னாள் இராணுவ வீரர்களை பெர்லிஸ் எம்பி சாடினார்
மலேசிய இராணுவ சேவையிலிருந்து விலகியதும் சிலர், உயர்மட்டத்திலிருந்தவர்கள் உட்பட, அரசாங்கத்தை எதிர்ப்பது குறித்து பெர்லிஸ் மந்திரி பெசார் அஸ்லான் மான் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். சூழ்நிலையை மேம்படுத்த அவர்கள் விரும்பினால் அவர்களுடைய அதிருப்தியைத் தெரிவிக்கலாம், ஆனால் அரசாங்கத்திற்கு எதிராகப் போகக் கூடாது என்று ஒன்பதாவது ரோயல் ரேஞ்சர் ரெஜிமெண்ட்…
டோல் ஒப்பந்தம் போடப்பட்டபோது நஜிப் எங்கிருந்தார்? கேட்கிறார் என்எஸ்டி முன்னாள்…
டோல் ஒப்பந்தங்கள் கையொப்பமானபோது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எங்கு போனார் என்று கேட்கிறார் முன்னாள் செய்தியாசிரியர் ஒருவர். முகநூலில் பதிவிட்டுள்ள நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் குழும முன்னாள் செய்தியாசிரியாரான முஸ்டபா கமில் முகம்மட் ஜானோ, நஜிப் இப்பொது டோல் கட்டணத்தை அகற்ற விரும்புவதாகக் கூறுவது அரசியல்தானே தவிர …
நஜிப் விடுவிக்கப்பட வேண்டும் எனும் ஏஜியின் கருத்து, முடிவல்ல
1எம்டிபி விவகாரத்தில், பிரதமர் நஜிப் எந்தவொரு தவறும் செய்யவில்லை எனும் அட்டர்னி ஜெனரல், முகமட் அஃபென்டியின் முடிவு இறுதியானது அல்ல. புக்கிட் குளுகோர் எம்.பி. ராம் கர்ப்பால் சிங், இதனை முடிவு செய்ய வேண்டியது அட்டர்னி ஜெனரலோ (ஏஜி) அல்லது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமோ (எம்ஏசிசி) அல்ல;…
ஜெருசலத்தில் அமெரிக்க தூதரகம் – மே மாதத்தில் திறக்கப்படும்
எதிர்வரும் மே மாதத்தில் ஜெருசலத்தில் அமெரிக்கா அதன் தூதரகத்தை திறக்கும் என்று கடந்த வெள்ளிக்கிழமை யுஎஸ் அறிவித்தது. அமெரிக்க கொள்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அமெரிக்க ஆதரவு நாடுகளில் பிரச்சனையைக் கிளப்பும், ஏனெனில் அந்நாடுகள் அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது…
எதிரணி வெற்றி பெற்றால் சீனாவுடனான உறவுகள் நலிவடையும் – நஜிப்
எதிரணியினர் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சீனாவுடனான உறவுகளில் சரிவு ஏற்படும் என்று எச்சரிக்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். சீனாவுடன் தொடர்புள்ள திட்டங்களைத் தாக்கிப் பேசுவதை எதிரணியினர் வழக்கமாகக் கொண்டிருப்பதாக பிஎன் தலைவர் கூறினார். “இந்நிலையில் எதிரணியினர் ஆட்சியைப் பிடித்தால் சீனாவுடனான உறவுகள் நலிவடையும். “மலேசிய-சீன உறவுகளுக்காக, அப்படிப்பட்ட …
செடிக் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டது
பிரதமர் அலுவலகத்திலிருந்து செயல்படும் இந்திய சமுதாயத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பிரிவான செடிக், ஊழலை எதிர்க்கும் எம்ஏசிசி உறுதிமொழியை எடுத்துக்கொண்டு கடமையை நேர்மைதவறாமல் செய்வதாய் சூளுரைத்தது. செடிக் அதிகாரிகளும் செடிக்கிடமிருந்து மான்யங்கள் பெறும் என்ஜிஓ-களும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்கள். இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்வது இந்திய சமூகத்துக்கு உதவும் செடிக் திட்டங்கள் …












