மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
மகாதிர் : தூண்டிலில் பொறியாக இருக்கவும் நான் தயார்
மலாய் வாக்குகளை வெல்ல, பக்காத்தான் ஹராப்பானுக்கு ஒரு தூண்டுதலாக செயல்பட தயாராக இருப்பதாக டாக்டர் மகாதிர் முகமட் கூறினார். தனக்கு 92 வயதான போதும், ஹராப்பானுக்கு உதவ தான் தயாராக இருப்பதாக அந்த முன்னாள் பிரதமர் தெரிவித்தார். “எனக்கு இப்போது 92 வயதாகிறது, எத்தனை காலத்திற்கு என்னால் பிரதமராக…
ஆஸ்திரேலியாவில் இருக்கும் பணம் சட்டபூர்வமானது, புக்கிட் அமான் இயக்குனர் நிரூபித்தார்
புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு துறை இயக்குநர் அஹ்மட் நஜ்முட்டின், தனது ஆஸ்திரேலிய வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் சட்டப்பூர்வமானது என்பதை நிரூபித்துவிட்டார் என, தலைமை போலிஸ் அதிகாரி முகமட் ஃபூஷி ஹருன் கூறினார். சிலாங்கூர், ஷா ஆலாமில் அவரது இல்லத்தை, அப்போதைய சந்தை விலையில் விற்றதன் மூலம்…
சிஐடி இயக்குனரின் வங்கிக் கணக்கை ஆஸ்திரேலியா கைப்பற்றியது
ஆஸ்திரேலிய போலீஸ், புக்கிட் அமான் சிஐடி இயக்குனர் வான் அஹமட் நாஜ்முடின் முகமட்டின் சிட்னி வங்கிக் கணக்கை முடக்கியுள்ளது. அக்கணக்கில் A$320,000 (ரிம971,800) இருக்கிறது. சிட்னி மோர்னிங் ஹெரால்ட் செய்திப்படி, வான் அஹமட்டின் கணக்கில் போடப்பட்ட பணம் சலவை செய்யப்பட்டது அல்லது குற்றச்செயல்கள் வழி கிடைத்த வருமானம்…
மார்ச் 1 தொடக்கம், எஸ்.எல்.1எம் அலவன்ஸ் ரிம 2,000
2018, மார்ச் 1 தொடக்கம், 1மலேசியா பயிற்சித் திட்ட அலவன்ஸ் (எஸ்.எல்.1எம்) ரிம 1,500-ல் இருந்து ரிம 2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள பயிற்சியாளர்களின் சுமையைக் குறைப்பதே இதன் நோக்கம் என எஸ்.எல்.1எம்-ன் தலைமைச் செயலளார் நோரஷிகின் இஸ்மாயில் கூறினார். “தலைநகரில், வாழ்க்கை செலவுகள் மிகவும் அதிகமாக…
பெட்ரோனாஸ் RM19 பில்லியன் ஈவுத்தொகையை அரசாங்கத்திற்குச் செலுத்தும்
பெட்ரோலியம் நேசனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்), RM19 பில்லியன் ஈவுத்தொகையை அரசாங்கத்திற்குச் செலுத்த உறுதியளித்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி வான் சுல்கிப்ளி வான் அரிஃபின் கூறினார். கடந்த ஆண்டு, அந்தச் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் ஒரே பங்குதாரரான அரசாங்கத்திற்கு, RM16 பில்லியனை அந்நிறுவனம் கொடுத்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. கடந்தாண்டின்…
கிட் சியாங் கழிப்பறையில் தவறிவிழுந்தார், வார இறுதி நிகழ்ச்சிகள் இரத்து
நேற்றிரவு, நாடாளுமன்ற டிஏபி தலைவர், லிம் கிட் சியாங், அவரின் ஜொகூர், கேலாங் பாத்தா இல்லக் கழிப்பறையில் தவறிவிழுந்து, நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியதால், இவ்வார இறுதி நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக, டிஏபி தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. “லிம் கிட் சியாங், இவ்வார…
கிளாந்தானில் டிஏபி-க்கு நாற்காலி இல்லை
கிளாந்தான் மாநிலச் சட்டமன்ற நாற்காலிகளுக்கான பக்காத்தான் ஹராப்பானின் பேச்சு வார்த்தைகள் ஏறத்தாழ முடிவடைந்த நிலையில், டிஏபி-க்கு எந்தவொரு தொகுதியும் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. 1986-ஆம் ஆண்டுக்குப் பின்னர், மீண்டும் அம்மாநிலத்தில் போட்டியிட வேண்டும் எனும் டிஏபி-யின் விருப்பத்திற்கு அது மாற்றாக உள்ளது. கிளாந்தான் ஹராப்பானின் கூற்றுப்படி, இன்னும் மூன்று…
லியோ : பி.என்.-னில் சிலர் மசீச-வைச் சாகடிக்க நினைக்கின்றனர்
பி.என்.-னில் சில தரப்பினர் மலேசியச் சீனர் சங்கத்தை அழிக்க, வெளி சக்திகளுடன் சதிசெய்து வருவதாக மசீச தேசியத் தலைவர், லியோ தியோங் லாய் குற்றஞ்சாட்டியுள்ளார். “வெளியேயும் உள்ளேயும் மசீச-வை எதிர்க்க ஒத்துழைப்பு நடந்துவருவதை நம்மால் காணமுடிகிறது,” என்று அவர் கூறியதாக ‘ஓரியண்டல் டெய்லி’ செய்தி வெளியிட்டுள்ளது. எந்தவொரு பெயரையும்…
முகைதின்: அம்னோ கட்சித் தேர்தலை ஒத்திவைத்தது செல்லாது
அம்னோ கட்சித் தேர்தல்களை மீண்டும் ஒத்தி வைத்திருப்பது அதன் அமைப்பு விதிகளுக்கு எதிரான செயல் என பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் இன்று கூறினார். முன்னாள் அம்னோ துணைத் தலைவரான முகைதின் ஆகக் கடைசியான ஒத்திவைப்பு அம்னோ அமைப்புவிதியின் 10.16 விதிக்கு முரணானது என்றார். அமைப்புவிதி 10.16 அம்னோ …
ஈக்குவானிமிட்டி உல்லாசப் படகு கைப்பற்றப்பட்டது குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க 1எம்டிபி…
1எம்டிபி அவைத்தலைவர் இர்வான் செரிகார் அப்துல்லா இந்தோனேசிய அதிகாரிகளும் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை(எப்பிஐ)யும் கைப்பற்றிய ஈக்குவானிமிட்டி உல்லாசப் படகு தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. இன்று காலை உள்நாட்டு வருமான வரி வாரிய நிகழ்வு ஒன்றில் கலந்து சைபர் ஜெயா வந்த இர்வான் நிகழ்வு …
கோடீஸ்வரர் மீதான சர்ச்சை: அமைச்சரவை கூட்டத்தில் பொறி பறந்தது
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அம்னோ அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீசுக்கும் மசீச, கெராக்கான் அமைச்சர்களுக்குமிடையிலான சர்ச்சை அனல் பறக்கும் விவாதமாக மாறியதாக சீனமொழி நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹாங்காங்கில் உள்ள மலேசிய கோடீஸ்வரர் ரோபர்ட் குவாக் டிஏபிக்குப் பண உதவி செய்வதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர்மீது தொடுக்கப்பட்ட சரமாரியான …
மகாதிர்-ஓராங் அஸ்லி சந்திப்புக்குச் செல்வதைத் தடுக்க பணமும் பாட்டுமா?
இன்று பகாங், தாசிக் சின்னியில் மகாதிருக்கும் ஓராங் அஸ்லி சமூகத்திற்கும் இடையிலான சந்திப்புக் கூட்டத்தில் கிராம மக்களில் சுமார் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதே இடத்தில் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 500-க்கு மேற்பட்ட கிராம மக்களில் அதிகமானோர் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர்…
நஸ்ரி: மசீச சீனர்களின் குரல் அல்ல
அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக்கை இழிவுபடுத்தியது ஒட்டுமொத்த சீன சமூகத்தையும் இழிவுப்படுத்தியதற்கு ஒப்பாகும் என்று மசீசவின் இளைஞர் பிரிவுத் தலைவர் சோங் சின் வூன் விடுத்திருந்த அறிக்கைக்காக மசீச-வை இன்று அமைச்சர் நஸ்ரி சாடினார். குவோக் சீனச் சமூகத்தை பிரதிநிதிக்கவில்லை என்று மீண்டும் கூறிய…
இந்தோனேசியா, எப்பிஐ பாலியில் ஜோ லோவின் உல்லாசப்படகை கைப்பற்றின
1எம்டிபிலிருந்து உறிஞ்சிய பணத்தில் வாங்கியதாகப் கூறப்படும் ஈக்குவானிமிட்டி என்ற பெயரைக் கொண்ட உல்லாசப்படகு பாலியில் இந்தோனேசியா மற்றும் அமெரிக்க எப்பிஐயின் கூட்டு நடவடிக்கைக்குப் பின்னர் கைப்பற்றப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து அப்படகு இந்தோனேசியக் கடலில் இருந்து வருவதாகவும் அதில் 34 சிப்பந்திகள் இருந்ததாகவும் இந்தோனேசிய ஊடகச் செய்திகள்…
நஸ்ரி, குவோக்கை இழிவுப்படுத்தியது சீன சமூகத்தையே இழிவுப்படுத்தியதாகும், சோங் கூறுகிறார்
சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக்கை கடுமையாக இழிவுப்படுத்தி பேசியிருப்பது சீன சமூகத்தையே இழிவுபடுத்தியதற்கு ஒப்பாகும் என்று மசீச இலைஞர் பிரிவுத் தலைவர் சோங் சின் வூன் கூறுகிறார். குவோக் சாதாரண மனிதர் அல்ல. அவர் உலகமுழுவதிலுமுள்ள சீன சமூகத்தினரால்…
தண்ணீர் கட்டணம் எகிறியது ஏன்? ஆயர் சிலாங்கூர்மீது வணிகர்கள் ஆத்திரம்
சிலாங்கூர் வணிகர்கள் சிலர் தங்களுக்கு வந்த தண்ணீர் கட்டண பில்லைப் பார்த்துக் கொதிப்படைந்துள்ளனர். முந்திய மாதத்துடன் ஒப்பிடும்போது சிலருடைய தண்ணீர் கட்டணம் 50 மடங்கு உயர்ந்திருந்தது. சிலாங்கூரில் நீர் விநியோகம் செய்யும் ஆயர் சிலாங்கூர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கெப்போங்கில் கடந்த 14 மாதங்களான …
22,000 வாக்காளர்களின் ஆட்சேபனைகள்: தேர்தல் ஆணையம் ஏன் மக்களின் ஆட்சேபங்களைக்…
மலேசியத் தேர்தல் ஆணையம் தேர்தல் தொகுதிகளுக்குப் பரிந்துரைத்துள்ள தொகுதி சீர்திருத்தங்கள் மீது பொது மக்கள் எழுப்பியுள்ள சட்டபூர்வமான ஆட்சேபங்களைச் செவிமடுக்க மறுப்பதன் இரகசியம் என்ன? தேர்தல் ஆணையம் அதனை அரசாங்கத்தின் ரப்பர் முத்திரையாகக் கருதுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவர் டாக்டர்…
மகாதிர்: நஜிப்புக்கு வாக்காளிக்காதீர் என்று சொல்லத்தான் பெக்கான் செல்கிறேன்
இன்று பெக்கான் செல்லும் டாக்டர் மகாதிர் முகம்மட், அதன் நடப்பு எம்பி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை நிராகரிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளவே அங்கு செல்வதாகக் கூறினார். “நஜிப் பெக்கானைச் சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியும். உள்ளூர்க்காரர்தான். உள்ளூர்க்காரராக இருந்தாலும் தப்பு செய்தால் நிராகரிக்கத்தான் வேண்டும்”, என பக்கத்தான் ஹரபான் …
14வது பொதுத் தேர்தலில் சீனர் சுனாமி இருக்காது- லியோ
நாட்டில் இதுவரை நடந்துள்ள தேர்தல்கலில் எதிர்வரும் 14வது பொதுத் தேர்தல்தான் போட்டிமிகுந்ததாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அதை ஒப்புக்கொண்டிருக்கிறார். “தேர்தல்களுக்கெல்லாம் தாய்” என வருணித்த அவர், புத்ரா ஜெயாவில் பிஎன் தொடர்ந்து இருக்குமா என்பதை முடிவு செய்யப்போகும் தேர்தல் இது …
அரசாங்க வீடுகள் கட்டித்தருவதாகச் சொன்னது என்னவாயிற்று? பினாங்கு கேட்கிறது
அரசாங்க வீடுகள்(பிபிஆர்) குறைந்த எண்ணிக்கையில் கட்டப்பட்டுள்ள மாநிலம் பினாங்குதான் என்கிறார் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ. கூட்டரசு அரசாங்கம் கட்டிய 102,000 வீடுகளில் பினாங்குக்குக் கிடைத்தது 999 வீடுகள் மட்டுமே. இதன் தொடர்பில் முதலமைச்சர்(சிஎம்) லிம் குவான் எங்கும் தாமும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் …
பேராக் மந்திரி பெசார் செயல்திறனை மதிப்பிட, மக்கள் நடுவர் மன்றம்
மக்களிடையேயானப் பிரச்சினைகளைக் கையாள்வதில், பேராக் மாநிலத் தலைவராக இருக்கும், மந்திரி பெசார் ஷம்ரி அப்துல் காடிர்-இன் செயல்திறனை மதிப்பீடு செய்ய, ஒரு மக்கள் நடுவர் மன்றத்தை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அமைக்கவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, காலை மணி 9.30 முதல் மாலை 4 மணிக்குள் நடைபெறவுள்ள அந்த…
நஸ்ரி அல்லது ஷாரீருடன் போட்டியிட விரும்பும் ஸைட் இப்ராகிம்
14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் டிஎபியின் ஸைட் இப்ராகிம் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ஷரீர் அப்துல் சமாட் அல்லது பாடங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் ஆகிய இருவரில் ஒருவருடன் மட்டுமே போட்டியிட விரும்புகிறார். ஒரு பெர்சத்து அல்லது…
ஜிஇ14 : பக்காத்தான் ஹராப்பான் ஒரே சின்னத்தைப் பயன்படுத்தும்
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், ஒரே சின்னத்தைப் பயன்படுத்த பக்காத்தான் ஹராப்பான் முடிவெடுத்துள்ளது. ஹராப்பான் கூட்டணிக்கான அதிகாரப்பூர்வப் பதிவு விண்ணப்பத்திற்கு, இயக்கப் பதிவகத்திடமிருந்து, எந்தவொரு பதிலும் வரவில்லை என்றால், அந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கூட்டணியின் தலைவர் டாக்டர் மகாதீர் தெரிவித்தார். “அனைத்து கட்சிகளும் ஒரே சின்னத்தைப் பயன்படுத்தும்,…

















