வெளிமாநிலங்களில் குடியேறிய கிளாந்தானியர்களைத் திருப்பிக்கொண்டுவர பாரிசானால் முடியும், கு லி…

14-வது பொதுத் தேர்தலில், கிளாந்தான் மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தைப் பி.என்.னுக்கு வழங்கினால், பிற மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்த 500,000-க்கும் மேற்பட்ட கிளாந்தானியர்களை, அம்மாநிலத்திற்குத் திருப்பிக்கொண்டுவந்து, அவர்களைச் சேவையாற்ற வைக்க முடியும் என குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலி ஹம்ஸா தெரிவித்தார். பிற மாநிலங்களில் அனுபவித்துவரும் கல்வி, பொருளாதாரம்…

மகாதிர்: நஜிப் மீதான பயம் ஜப்பானியர் ஆக்கிரமிப்பு காலத்து பயத்தைவிட…

  இருப்பத்திரண்டு ஆண்டுகால அவரது ஆட்சியில் மகாதிர் நாட்டை இரும்புக் கரம் கொண்டு ஆண்டார் என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிராக இருந்து வருகிறது. ஆனால், மலேசிய வரலாற்றில் மக்கள் தற்போதைய பிரதமர் நஜிப்பின் தலைமையத்தின் கீழ் பயப்படுவதைப் போல் பயப்பட்டதே இல்லை என்று மகாதிர் கூறிக்கொள்கிறார். ஜப்பானிய ஆக்கிரமிப்பின்…

பி.எஸ்.எம். : மலேசியாவின் மோசமான ஊழல் குறியீடு,  தேசிய முன்னணியின் பலவீனமான…

மலேசிய சர்வதேச வெளிப்படைத்தன்மை (தி.ஐ.-எம்) அமைப்பு வெளியிட்டுள்ள ஊழல் குறியீட்டில் (சிபிஐ), மலேசியா மோசமான தரநிலையில் இருப்பதானது, தேசிய முன்னணியின் பலவீனமான ஆட்சியைப் பிரதிபலிப்பதாக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறுகிறது. எனவே, பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்னும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நாடாளுமன்றத்தைக்  களைத்துவிட்டு, புதிய அரசின்…

‘இந்தியர்களுக்கு ம.இ.கா. என்ன செய்தது என சிவராஜ் கேட்க வேண்டும்’

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் இந்திய சமூகத்தை ஓரங்கட்டிவிட்டார் என குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர், இந்தியச் சமூகத்துக்கு ம.இ.கா. என்ன செய்தது என்பதைப் பற்றி ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜ் கேள்வி எழுப்ப வேண்டும். சி.சிவராஜ்ஜை சிறு பையன் என சித்தரித்த, சுங்கை நாடாளுமன்ற உறுப்பினர்…

மகாதிர்: நான் உள்ளூர் அரிசி மட்டுமே சாப்பிடுகிறேன்

  தாம் அரிசி (சோறு) சாப்பிடுவதிலிருந்து மாறி விட்டதாகவும் அதற்கு மாற்றாக தென்அமெரிக்காவிலிருந்து வரும் கென்வா (சீமை திணை என்று கூறப்படும்) சாப்பிடுவதாக பிரதமர் நஜிப் கூறியிருந்ததற்கு பதிலடி கொடுத்த பாக்கத்தன் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர், தாம் உள்ளூர் அரிசி மட்டுமே சாப்பிடுவதாக கூறினார். நேற்று, பாங்கி…

வான் சைபுல்: டிஏபி பற்றிய அச்சம் ஹரப்பான் நகர்ப்புற மலாய்க்காரர்களைக்…

பக்கத்தான்  ஹரப்பானுக்கு  நகர்ப்புற   மலாய்க்காரர்  ஆதரவைப்  பெறுவது  “பெரும்  சிரமமாக”  இருக்கும்    என்கிறார்  பிரபல   கல்விமான்  வான்  சைபுல்  வான்  ஜான், வான்  சைபுல்   பெர்சத்து   கட்சியில்   இணைந்து   14வது   பொதுத்   தேர்தலில்   போட்டியிடுவார்   என்று   ஊகங்கள்    தெரிவிக்கப்பட்டுவரும்    வேளையில்,   சிங்கப்பூரின்   நியு   ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸில்  வெளிவந்த   ஒரு  …

மலேசிய கினியின் நன்றியைத் தெரிவிக்க இலவச திரைப்படம்

மலேசியாகினி  அதன்  சட்டக்  காப்பு  நிதிக்கு   தாராளமாக     வாரி   வழங்கிய  அதன்  வாசகர்களுக்கு    நன்றி   தெரிவிக்க     ஸ்டீபன்  ஸ்பீல்பெர்க்கின்   “த  போஸ்ட்”  திரைப்படத்தை    இலவசமாக  திரையிடவுள்ளது. அப்படம்  (பெட்டாலிங்   ஜெயாவில்   பண்டார்    உத்தாமாவில்   உள்ள)  டிஜிவி 1 உத்தாமா  தியேட்டரில் ,  மலேசியாவில்   அப்படம்  மலேசியாவில்  திரையிடப்படுவதற்கு   ஒரு  …

அம்னோ வேட்பாளர் பட்டியல் பிரதமரிடம் ஒப்படைப்பு

அம்னோ   14வது  பொதுத்  தேர்தலுக்கான  அதன்  வேட்பாளர்   பட்டியலைப்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்கிடம்   ஒப்படைத்துள்ளதாக    தலைமைச்    செயலாளர்   தெங்கு  அட்னான்  தெங்கு   மன்சூர்   கூறினார். இப்போது   வேட்பாளர்களை    இறுதிசெய்ய   நஜிப்பும்  கட்சித்  துணைத்    தலைவர்   பணிகளைக்  கவனித்து  வரும்   உதவித்   தலைவர்   அஹமட்  ஜாஹிட்   ஹமிடியும்   அம்னோ  …

‘நாட்டைக் காப்பாற்ற பாஸ்-க்கு உதவுங்கள்’, ஹாடி சீனர்களைக் கேட்டுக்கொண்டார்

மலேசியாவை வழிநடத்த, பாஸ் கட்சியின் மீது நம்பிக்கை வைக்குமாறு, சீன சமூகத்தைப் பாஸ் தலைவர் அப்துல் ஹடி ஆவாங் கேட்டுக்கொண்டார். கோலா திரெங்கானுவில், நேற்று, சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்துகொண்ட அவர் ஜிஇ14-ல் வெற்றிபெற்று, நாட்டை வழிநடத்த பாஸ் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். “ஜிஇ14-ல், பாஸ் 130 நாடாளுமன்றங்களில் போட்டியிட…

நாற்காலி பகிர்வில் பினாங்கு ஹராப்பான் தோல்வி

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆறு சட்டமன்ற இடங்கள் பகிர்வில் தோல்வி கண்டதை அடுத்து, பினாங்கு ஹராப்பான் கூட்டணியின் 3 கட்சிகள் அதற்கான முடிவை தலைமை மன்றத்திடம் ஒப்படைத்தன. பினாங்கில் 40 சட்டமன்றங்கள் உள்ளன. தற்போது டிஏபி 19 இடங்கள், பிகேஆர் 10, அம்னோ 10 மற்றும் பாஸ் 1…

எம்.ஏ.சி.சி. : மலேசியாவின் ஊழல் குறியீடு அதிர்ச்சி தருகிறது

இன்று, மலேசிய சர்வதேச வெளிப்படைத்தன்மை (தி.ஐ.-எம்) அமைப்பு வெளியிட்ட ஊழல் குறியீட்டில் (சிபிஐ) மலேசியா மோசமான தரநிலையில் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கூறியுள்ளது. எம்.ஏ.சி.சி. மேற்கொண்ட ஆக்கிரோஷ நடவடிக்கை மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், மலேசியா ஒரு சிறந்த…

ஊழல் குறியீடு: மலேசியாவின் மோசமான தரநிலைக்கு 1எம்டிபி, ஃபெல்டா ஊழல்கள்…

மலேசியா 2017 ஊழல் குறியீட்டில் (சிபிஐ) மோசமான தரநிலையில் இருப்பதற்கான சில காரணங்களை மலேசிய சர்வதேச வெளிப்படைத்தன்மை (தி.ஐ.-எம்) அமைப்பு வெளியிட்டுள்ளது. தி.ஐ.-எம் தலைவர், அக்பார் சத்தாரின் கூற்றுபடி, 1எம்டிபி, எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் சென்.பெர். வழக்கு, ரிம 2.6 பில்லியன் நன்கொடை, ஃபெல்டா ஊழல் மற்றும் சபா நீர்…

மகாதிர் திரும்பி வரக்கூடாது, மஇகா இளைஞர் தலைவர் எச்சரிக்கை

  டாக்டர் மகாதிர் மீண்டும் பிரதமர் ஆகும் சாத்தியம் குறித்து மலேசிய இந்தியர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவர் ஆட்சியிலிருக்கும் போது இந்திய சமூகத்திற்கு எந்த உயர்பதவியும் அளிக்கவில்லை என்று மஇகா இளைஞர் பிரிவு தலைவர் சி. சிவராஜா கூறுகிறார். "தவறான தலைவர்" ஒருவரை தேர்ந்தெடுத்தால் இந்தியர்களுக்கு…

மசீச மலாய்- பெரும்பான்மை இடங்களை நாடுவது இயல்பே, ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை-…

மசீச  பல  இனங்கள்  வாழும்   தொகுதிகளில்,  அதுவும்  மலாய்க்காரர்களைப்  பெரும்பான்மையாகக்  கொண்ட   தொகுதிகளில்   அதன்   தலைவர்களைக்  களமிறக்குவது  “இயல்பானதே”  என்கிறார்  அக்கட்சிப்   பேச்சாளர்   டி  லியான்  கெர். அது   டிஏபி-யைப்   போல்    அல்லாமல்     மசீசவை   மலாய்க்காரர்களில்   பெரும்பான்மையினர்  உள்பட   எல்லா  இனத்தவரும்   ஏற்றுக்கொள்கிறார்கள்   என்பதைக்  காண்பிக்கிறது. “இதற்கு  முற்றிலும்  …

ஜிஇ14 : பாஸ் 5 மாநிலங்களை இலக்காகக் கொண்டுள்ளது

எதிர்வரும் ஜிஇ14-ல், ஐந்து மாநிலங்களைக் கைப்பற்ற, பாஸ் இலக்குக் கொண்டுள்ளதாக அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார். கிளந்தானில் ஆட்சியைத் தக்கவைத்து கொள்வதோடு, திரெங்கானுவை மீண்டும் கைப்பற்றவும், புதிய இலக்காக பெர்லிஸ்-ஐயும் அதனோடு சிலாங்கூரையும் கெடாவையும் பாஸ் குறிவைத்துள்ளது. அரசாங்கத்தை அமைக்கவிருக்கும் தரப்பினருக்கு ஆதரவாக இருக்க, 40…

பொக்கோக் செனாவில் ஹரபான் வெல்லும், மாபுஸ் திட்டவட்டம்

பொக்கோக்  செனா   எம்பி  மாபுஸ்   ஒமார்,   அத்தொகுதியில்   பாஸ்   கெடாவின்  பிரபல   கால்பந்தாட்ட  வீரர்   ரதி  முகம்மட்  டினைக்   களமிறக்கினாலும்கூட   வெற்றி  பக்கத்தான்   ஹரபானுக்குத்தான்   என்று   உறுதியாக    நம்புகிறார். “மக்கள்,    மாநிலத்திலும்  நாட்டிலும்  மாற்றத்தை   விரும்புவதால்   இத் தொகுதியில்   பக்கத்தான்   ஹரபான்   வெற்றி  பெறும்  என்று    நம்புகிறேன்”,  என …

ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டது தேர்தல் விரைவில் என்பதற்கு அறிகுறியா?

தேர்தல்   ஆணையம்  சாபாவில்    தனியார்  நிறுவனங்களின்  ஹாலிகாப்டர்கள்  அனைத்தையும்      ஏப்ரல்,  மே   மாதங்களுக்கு   வாடகைக்கு    எடுத்துக்  கொண்டிருப்பதாக   த  ஸ்டார்   ஆன்லைன்   அறிவித்துள்ளது. சாபாவின்  இரண்டு  ஹெலிகாப்டர்   நிறுவனங்களும்   இத்தகவலைத்    தெரிவித்தனவாம். ஹெலிகாப்டர்கள்   வாடகைக்கு    எடுத்துக்கொள்ளப்பட்டதை   வைத்து    அம்மாதங்களில்   தேர்தல்    நடத்தப்படும்    என்ற  முடிவுக்கு   வந்து  விடக்கூடாது. அதேவேளை  …

ஊழல் குறியீடு : மலேசியா இப்போது கியூபாவுக்கு நிகராக உள்ளது

புதிய ஊழல் குறியீட்டில் (சிபிஐ) மலேசியா, கம்யூனிச அரசான கியூபாவுக்கு நிகராக உள்ளது. சுழியத்திலிருந்து 100 வரையிலான அளவில், இரு நாடுகளுக்கும் 47 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. சுழியம் என்பது ஆக மோசமான ஊழல் என்றும் 100 மிக சுத்தமான நாடு எனவும் பொருள்படுகிறது. இன்று, கோலாலம்பூரில், மலேசிய சர்வதேச…

அனைத்து எண்ணெய் விலைகளும் தொடர்ந்து சரிந்தன

கடந்த வாரம், குறிப்பிடத்தக்க அளவு குறைந்த ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள், இன்று நள்ளிரவு தொடக்கம் முறையே 6 சென், 7 சென் மற்றும் 6 சென் என மீண்டும் குறைகிறது. அடுத்த ஒரு வாரம், ரோன்95 லிட்டருக்கு RM2.17, ரோன்97 லிட்டருக்கு RM2.43 மற்றும்…

கேவியஸ் : பி.எஸ்.எம். போட்டியிடக்கூடாது என டிஏபி கூறுவது ஆணவம்

எதிர்வரும் ஜிஇ14-ல், கேமரன் மலையில் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தனது வேட்பாளரை நிறுத்தக்கூடாது எனக் கூறியிருக்கும் டிஏபி-யின் போக்கு ஆணவமானது என மைபிபிபி தேசியத் தலைவர் எம்.கேவியஸ் கூறியுள்ளார். பி.எஸ்.எம். போட்டியிட்டால், அது ஹராப்பானுக்குச் சாதகமாக அமையாது என, கேமரன் மலைக்கான முன்னாள் டிஏபி வேட்பாளர் எம்.மனோகரன்…

மன்றங்கள் பதிவகத்தின் மீது ஹரப்பான் வழக்கு பதிவு செய்தது

  பாக்கத்தான் ஹரப்பானை பதிவு செய்வதற்கு தாக்கல் செய்திருந்த மனுவுக்கு இதுவரையிலும் எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்துவரும் மன்றங்கள் பதிவகத்தின் பதிவாளருக்கு (ரோஸ்) எதிராக ஹரப்பானின் தலைவர்களில் பலர் இன்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர். ரோஸுக்கு எதிரான வழக்கை ஐந்து ஹரப்பான் தலைவர்கள் -…

பொருளாதாரம் சிறப்பாக உள்ளத்தை எதிரணி ஒத்துக்கொள்ள வேண்டும்- சாலே

எதிரணியினர்   மலேசியா  நல்ல   நிலையில்  உள்ளதையும்    அரசாங்கக்  கொள்கைகள்    சிறப்பாக    செயல்படுவதையும்   ஒப்புக்கொள்ள  வேண்டிய   நேரம்   வந்தாயிற்று   என்கிறார்   தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சாலே சைட்  கெருவாக். மலேசியா   நொடித்துப்  போகும்  நிலையில்   இருப்பதாக   எதிர்க்கட்சிகள்  புளுகி  வந்துள்ளன. அவற்றின்  கூற்று   பொய்  என்பதை   அனைத்துலக    செய்திகள்   நிரூபித்தாலும்கூட  …

மலேசியாவின் சிறந்த கோல்காவலர் சீ கியோங் காலமானார்

மலேசிய  கால்பந்து   ஜாம்பவான்களில்  ஒருவராக  விளங்கியவர்    இன்று நம்மை   விட்டுப்  பிரிந்தார். கோல்காவலில்   சிறந்து  விளங்கிய    செள  சீ  கியோங்    சிறுநீர்ப்பை  புற்றுநோயால்  இன்று  காலை   கோலாலும்பூர்   யுனிவர்சிடி  மருத்துவ  மையத்தில்    காலமானார். சீ  கியோங்  மலேசியாவின்  மிகச்  சிறந்த   கோல் காவலர்    என்பதில்   ஐயமில்லை.   வரும்  நவம்பர் …