மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
இன்று பிரதமரின் ‘சிறப்பு அறிவிப்பு’ இல்லை
14வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “சிறப்பு அறிவிப்பு” ஒன்றைச் செய்வார் என்று கூறும் பழைய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அக்காணொளி இன்று “சிறப்பு அறிவிப்பு” செய்யப்படும் என்று கூறுவதை …
மன்றங்கள் பதிவாளர் மீது ஹரப்பான் சட்ட நடவடிக்கை எடுக்கும்
அதிகாரப்பூர்வமான கூட்டணியாக பதிவு செய்வதற்கு பாக்கத்தான் ஹரப்பான் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு பதில் அளிக்க தவறிவிட்ட மன்றங்கள் பதிவாளரை (ரோஸ்) நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஹரப்பான் தீர்மானித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறுகிறார். ரோஸுடன் தொடர்பு கொண்டிருந்தும் அதனிடமிருந்து எந்த…
அபராதத்தைச் செலுத்த, தான் வரைந்த கோமாளி படத்தை விற்க விரும்புகிறார்…
வரைகலை வடிவமைப்பாளர் ஃபாமி ரேஸா, தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்த, தான் வரைந்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கோமாளி ஓவியத்தை விற்க உள்ளதாகக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜூனில் , அக்கேலிச் சித்திரத்தை மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் அடையாளச் சின்னத்தோடு பதிவேற்றம் செய்ததற்காக, தொடர்பு, பல்லூடகச் சட்டம் (சிஎம்ஏ) பிரிவு 233(1) (ஏ) இன்கீழ் ஃபாமி மீது குற்றஞ்சாட்டப்பட்டு, இன்று ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு …
பாஸ்: இந்திரா வழக்கு முடிவில், ஹராப்பானுக்கு மகிழ்ச்சி
சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்திவரும் சட்டப்பிரிவு 164 பிரச்சனையை, குறிப்பாக இந்திரா காந்தி மற்றும் அவரது முன்னாள் கணவர் முகமட் ரித்வான் அப்துல்லா ஆகியோரை உள்ளடக்கிய ஒருதலைபட்ச மத மாற்ற வழக்கு போன்றவைக் குறித்து பாஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட பின்னர், அனைத்தும் நீதிமன்றத்…
குவான் எங் : ஜிஎஸ்டி அகற்றப்படாவிட்டால், தொடர்ந்து உயரும்
நாட்டில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) தற்போதையப் போக்குகளுக்கு ஏற்ப தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். இது, 2021 மற்றும் 2025-க்கு இடையில், சிங்கப்பூர் அதன் ஜிஎஸ்டி-யை 7 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காடாக உயர்த்த உள்ளதாக, நேற்று…
பொதுத் தேர்தல்14 – ‘நான் பெக்கானுக்கு போக விரும்புகிறேன்’, மகாதிர்…
14 ஆவது பொதுத் தேர்தலில் எங்கே போட்டியிடப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் ஒரு புலனாகாத பதிலை அளித்தார். பிரதமர் நஜிப் ரசாக் மீதான அவரது தாக்குதலில், தாம் நஜிப்பின் நாடாளுமன்ற தொகுதியான பெக்கானில்கூட தோன்றக்கூடும் என்று மகாதிர் எச்சரிக்கை விடுத்தார். "நாங்கள்…
நஜிப்பைக் கோமாளியாக வரைந்த ஓவியருக்கு ஒரு மாதச் சிறை, ரிம30,000…
ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கோமாளியாக்கி ஓவியம் வரைந்த வரைகலை வடிவமைப்பாளர் ஃபாமி ரேஸாவுக்கு ஒரு மாதச் சிறையும் ரிம 30,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. அக்கேலிச் சித்திரத்தை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் அடையாளச் சின்னத்தோடு பதிவேற்றம் செய்ததற்காக தொடர்பு, பல்லூடகச் சட்டம்…
‘வேற வேலை இருந்தா போய்ப் பாருங்க’- கைக்கூலிகளுக்கு அபாண்டியின் காட்டமான…
சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, இரண்டு இணைய செய்தித்தளங்களில் தம்மை நேரடியாகத் தாக்கி வெளிவரும் செய்திகளைக் குப்பைகள் என்று ஒதுக்கித்தள்ளினார். பணத்துக்காக அவை அப்படி எழுதுவதாக அவர் சொன்னார். “அவை கைக்கூலிகளால் நடத்தப்படுபவை, பணம் கொடுத்தால் அவர்கள் எழுதுவார்கள். “அவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் ‘வேற வேலை …
பதிவு செய்துகொள்ளாதிருக்கும் குடியேறிகளுக்கு எதிராக ‘ஓப்ஸ் மெகா 2.0’ நடவடிக்கை
குடிநுழைவுத் துறை பதிவு செய்துகொள்ளாதிருக்கும் குடியேறிகளுக்கு எதிராக “ஓப்ஸ் மேகா 2.0” நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அதன்கீழ் இதுவரை 1725 பேர் சோதிக்கப்பட்டு 604பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாளிகள் அறுவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 19இல் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் முஸ்தபார் அலி தலைமையில் முதலாவது அதிரடிச் சோதனை …
பெந்தோங்கில் போட்டியிடுவது பற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை: லியோவுக்கு லிம் பதிலடி
டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், மசீச தலைவர் லியோ தியோங் லாய் நேற்று கூறியதுபோல் 14வது பொதுத் தேர்தலில் பெந்தோங்கில் போட்டியிடும் எண்ணம் தமக்கு அறவே இல்லை என்று மறுத்துள்ளார். விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு லியோ அப்படிக் கூறியிருக்கலாம் என்றாரவர். “மசீச துணைத்தலைவர் வீ கா சியோங் …
பெந்தோங்கில் கிட் சியாங்: வரட்டும், கவலையில்லை என்கிறார் லியோ
டிஎபியின் மூத்த தலைவரும் கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் அடுத்த பொதுத் தேர்தலில் பெந்தோங்கில் போட்டியிடும் நோக்கம் கொண்டிருப்பது உண்மையானால், அவரை எதிர்கொள்ள தயார் என்கிறார் மசீசவின் தலைவர் லியோ தியோங் லாய். மக்கள் பிரதிநிதியாக 1999 ஆம் ஆண்டிலிருந்து பெந்தோங் தொகுதியில்…
குவான் எங்கிற்கு ரிம185,000 இழப்பீடு கொடுக்க எப்இஸட்டிற்கு நீதிமன்றம் உத்தரவு
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் வணிகர் டான் கோக் பிங் ஆகிய இருவருக்கும் தற்போது மூடப்பட்டுவிட்ட செய்தித் தளம் எப்இஸட்.கோம் (FZ.com) மற்றும் அதன் நிருவாக ஆசிரியர் டெரன்ஸ் பெர்ணான்டஸ் மொத்தம் ரிம320,000 இழப்பீடு கொடுக்கும்படி பினாங்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த அவதூறு…
வீ காசி சியோங், பொய் சொல்வதை நிறுத்துவீர், குவான் எங்…
மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் ஒரு நாணயமில்லாதவர் என்று இன்று மதியம் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் குற்றம் சாட்டினார். இது சீனப் புத்தாண்டின் நான்காவது நாள் மட்டுமே. தயவு செய்து பொய் சொல்வதை நிறுத்துவீர் என்று குவான் எங் செய்தியாளர்களிடம் கூறினார்.…
விட்டு விலகுங்கள்: 90வயது மகாதிருக்கு 80 வயதானவர் அறிவுறுத்து
இரண்டு தசாப்தங்கள் நாட்டை வழிநடத்திய டாக்டர் மகாதிர் முகம்மட் 92வது வயதில் பக்கத்தான் ஹரபானின் பிரதமர் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த வயதில் மகாதிருக்கு இது தேவையில்லை என்கிறார் சரவாக்கின் முன்னாள் துணை முதல்வர் டாக்டர் ஜார்ஜ் சான். “எல்லாவற்றுக்கும் காலமும் இடமும் உண்டு”, என்றவர் கூறியதாக த …
கேபிள் கார் சேவையில் கோளாறு முழுமையாக ஆராயப்படும்
லங்காவி ஸ்கைகேப் கேபிள் கார் சேவையை நடத்திவரும் பனரோமா லங்காவி சென்.பெர்ஹாட், நேற்று கேபிள் கார் சேவை கோளாறு ஏற்பட்டடதற்கான காரணத்தை முழுமையாகக் கண்டறியும். நேற்று கேபிள் கார் சேவையில் ஏற்பட்ட கோளாற்றினால் சுற்றுப்பயணிகள் பலர் கேபிள் காரில் அந்தரத்தில் சிக்கித் தவித்தனர். நேற்றைய சம்பவத்துக்குப் பழுதடைந்த ‘பேரிங்’தான் …
பிகேஆர் : ஹிஷாம் ‘ஆணவம்’ பிடித்த அமைச்சர்
தேசிய சேவை பயிற்சித் திட்டம் குறித்த முன்னாள் இராணுவ அதிகாரிகளின் விமர்சனத்தைத் தள்ளுபடி செய்த பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன்னின் செய்கையை “ஆணவம் மற்றும் திமிர்’ தனம் என்று பிகேஆர் கூறியுள்ளது. பிகேஆர் துணைத் தலைவர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அக்கின், இராணுவத் துறையில் அனுபவம் வாய்ந்த தரப்பினரின்…
இலவச பிளாஸ்டிக் பை கொடுப்பது மடத்தனத்தின் உச்சம்: டிஏபி சாடல்
பிளாஸ்டிக் பை பயனீட்டைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உலகம் போராடிவரும் வேளையில் பிளாஸ்டிக்(நெகிழிப்) பைகளை இலவசமாகக் கொடுக்க முன்வந்திருப்பது மடத்தனத்தின் உச்சம் என லிம் லிப் எங் இன்று சாடினார். அண்மையில் சிலாங்கூர் பிஎன் தகவல் தலைவர் சதிம் டிமான், வரும் தேர்தலில் பிஎன் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றினால் …
ஜாஹிட் : ‘சிறந்ததைச் செய்ய முடியவில்லை என்றால், பின்வாங்க நான்…
பாகான் டத்தோ மாவட்ட மன்றத்தை அமைக்க, பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவின் ஒப்புதலைப் பெற துணைப் பிரதமர் டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி முனைந்துள்ளார். பாகான் டத்தோ மாவட்ட மன்றம் நிர்வகித்தால், இந்தப் பகுதியில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவும் என்று பாகான் டத்தோ,…
மசீச அதன் கேளாங் பாத்தா தலைவரை அத்தொகுதி வேட்பாளராக அறிவித்தது
கேளாங் பாத்தா மசீச கிளைத் தலைவர் ஜேசன் தியோ 14வது பொதுத் தேர்தலில் அத்தொகுதி வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் கூறினார். டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்கிடம் பறிகொடுத்த அத்தொகுதியை மீட்பதற்கு தியோவைவிட சிறந்த ஒருவர் இருப்பதாக மசீச …
மாட் சாபு : மலாய்க்காரர்களைப் பிரிப்பதாக ஏன் அமானாவை மட்டும்…
முஸ்லீம் அல்லது மலாய் வாக்குகளைப் பிரிப்பதாக, அமானாவைக் குற்றம் சாட்டிய பாஸ் தலைவர் அப்துல் ஹடி ஆவாங்கின் அறிக்கை குறித்து, தேசிய அமானா கட்சி கேள்வி எழுப்பியது. பிகேஆர் மற்றும் பெர்சத்து கட்சிகளும் அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றை எதிர்க்கும் வேளையில், ஏன் அமானா மட்டும் மலாய்க்காரர்களைப் பிளவுபடுத்துகிறது…
சிலாங்கூரில் பிஎன் வென்றால், இலவச பிளாஸ்டிக் பைகள்!
14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பிஎன் வெற்றி பெற்றால், வாக்களித்தபடி மக்களுக்கு சாமான்கள் வாங்குவதற்கான பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கொடுக்கப்படும். இப்போது மக்கள் சாமான்கள் வாங்கும் போது ஒரு பிளாஸ்டிக் பைக்கு 20 சென் கொடுக்க வேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் கூட்டணி ஒரு பிளாஸ்டிக்…
பெர்மாத்தா புரவலர் பதவியைத் துறக்க மாட்டேன்: ரோஸ்மா திட்டவட்டம்
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், எதிரணியினர் என்னதான் அழுத்தம் கொடுத்தாலும் பெர்மாத்தாவின் புரவலர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். இதுவரை தாம் பட்ட பாடும் முயற்சிகளும் நாட்டுக்காகவும் குழந்தைகளுக்காகவும்தானே தவிர அதில் தன்னலம் துளியும் இல்லை என்றார். கடந்த 10ஆண்டுக் காலத்தில் பெர்மாத்தா பல தொல்லைகளையும் …
‘போலிச் செய்திகள்’ தண்டனையைப் பத்து மடங்கு உயர்த்த எம்சிஎம்சி உத்தேசம்
போலிச் செய்திகள் பரப்புவதைத் தடுக்க வேண்டுமா, இப்போது தொடர்புப் பல்லூடகச் சட்டத்தில்(சிஎம்ஏ) வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்கிறார் மலேசிய தொடர்புப் பல்லூடக ஆணைய(எம்சிஎம்சி) தலைமை நடவடிக்கை அதிகாரி மஸ்லான் இஸ்மாயில். அக்குற்றச் செயல் புரிய நினைப்பவரைத் தடுப்பதற்கு சிஎம்ஏ பிரிவு 233(1)இன்கீழ் இப்போது வழங்கப்படும் தண்டனை போதுமானதல்ல …














