மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
சாலே : வேட்பாளர் தேர்வு, நஜிப்பின் உரிமை
14-வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை, பிரதமர் நஜிப்பிடமே விட்டுவிடும்படி பாரிசான் நேசனல் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குக் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிஎன் மற்றும் அம்னோ தலைவராக அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்று அம்னோவின் பொருளாளர், டாக்டர் சாலே சைட் கெருவாக் தெரிவித்தார். "ஒரு வேட்பாளருக்காகப் பரப்புரை செய்வதற்கான…
அஸ்மின் : மகாதீர் போட்டியிடவுள்ளார் எனும் வதந்திக்கே ரிம 1.3…
இன்று, லங்காவி மேம்பாட்டிற்காக ரிம1.3 பில்லியன் ஒதுக்கீட்டைப் பிரதமர் நஜிப் அறிவித்துள்ளதை, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி விமர்சித்துள்ளார். பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளரான டாக்டர் மகாதிர் முகமட், மற்ற இடங்களிலும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்க வேண்டும், அப்போதுதான் அங்கெல்லாம் அதிக ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்று பிகேஆர் துணைத்…
நஜிப்: இம்மாதக் கடைசியில் பி40 இந்தியர்களுக்கு சிறப்பு அமனா சஹாம்…
இன்று லங்காவியில் சுமார் 1,000 இந்தியர்கள் கலந்துகொண்ட ஒரு "தே தாரிக் நிகழ்ச்சியில்" பேசிய பிரதமர் நஜிப் ரசாக் இம்மாதக் கடைசியில் பி40 வகையைச் சேர்ந்த இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு அமனா சஹாம் 1மலேசியா (எஎஸ்1எம்) ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார். இதை அறிவித்த பிரதமர் மொத்தம்…
ஓன்லைன் செய்தித்தளங்களில் வெளியான கட்டுரைகளை அகற்ற எம்சிஎம்சி உத்தரவு
மலேசிய தொடர்புகள் மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) இரண்டு ஓன்லைன் செய்தித்தளங்கள் வெளியிட்டுள்ள பல கட்டுரைகளை அகற்றும்படி அவற்றுக்கு உத்தரவிட்டுள்ளது. அக்கட்டுரைகள் சட்டத்திற்கு முரணானதாக இருப்பதாக அது கூறிற்று. த ஸ்டார் செய்தியின்படி, ஒரு செய்தித்தளம் அதன் ஏழு கட்டுரைகளை அகற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அச்செய்தித்தளம் த மலேசியன்…
நஜிப் : சீனப் புத்தாண்டின் உற்சாக வரவேற்பு, பொருளாதாரத்தில் நம்பிக்கையைப்…
இவ்வாண்டு சீனப் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுவது, நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு கண்டிருப்பதைக் காட்டுகிறது என்று பிரதமர் நஜிப் இரசாக் கூறியுள்ளார். இந்தப் புத்தாண்டு கொண்டாட்ட மகிழ்ச்சியை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரிசானுக்கு வாக்களிப்பதில் பிரதிபலிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். கடந்தாண்டு, நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்று வந்ததையும் உள்நாட்டு உற்பத்தி…
இல்ஹாம் : வாக்காளர்கள் இரு-கட்சி முறையை விரும்புகின்றனர்
14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் அல்லது ஹராப்பான் இரண்டில் ஒன்றுக்கு வாக்களித்து, இரு கட்சி முறையைத் தேர்வு செய்வதன் வழி, வாக்காளர்கள் பி.எஸ்.எம். மற்றும் பாஸ்-ஐ புறக்கணிப்பர் என்று ஓர் ஆய்வாளர் கூறியுள்ளார். "இரு கட்சி அமைப்பு முறையை வாக்காளர்கள் தேர்வு செய்ய உள்ளதால் பாஸ் மற்றும் பி.எஸ்.எம்.…
நஜிப்: 14வது ஜிஇயை எப்போது வைத்துக்கொள்ளலாம்?நீங்களே சொல்லுங்கள்
இன்று கோலாலும்பூரில் மசீசவின் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்துகொண்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் பொதுத் தேர்தல் எப்போது என்று வினவப்பட்டதற்கு “எப்போது வைத்துக்கொள்ளலாம்?”, என்று கேள்வி கேட்டவர்களிடமே திருப்பிக் கேட்டார். தேதியை முடிவு செய்து விட்டீர்களா என்று விடாமல் கேட்கப்பட்டதற்கு “எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று நீங்களே சொல்லுங்கள்”, …
வளமான நாட்டை உருவாக்குவோம், சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஹாடி
சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வளமான, பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப மலேசியர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார். “இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்த நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தியோங்ஹுவா இனத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். "வளமான, அமைதியான மற்றும் செழிப்பான மலேசியாவை உருவாக்க நாம் தயாராக வேண்டும்"…
அஸ்மின்: ஈஜோக் நில விவகாரம் தொடர்பான ஆவணங்கள் எம்ஏசிசி-இடம்
சிலாங்கூர் அரசு ஈஜோக் நில விவகாரம் தொடர்பான ஆவணங்கள் எல்லாவற்றையும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைத்து விட்டதாக மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி கூறினார். சம்பந்தப்பட்ட நிலம்மீது விசாரணை தேவை என்று அரசுசாரா அமைப்புகள் பல புகார் செய்ததை அடுத்து ஆவணங்கள் எம்ஏசிசி-இடம் ஒப்படைக்கப்பட்டன என்றாரவர். “மாநில …
சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
சீனப் புத்தாண்டை வரவேற்கும் அனைத்து மலேசியர்களுக்கும் செம்பருத்தி.கோம் குடும்பத்தாரின் இனிய வாழ்த்துகள்.
போலி விரல் பயன்பாட்டு முயற்சியை, இசி அடையாளம் கண்டுள்ளது
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14), புதிய வாக்களிப்பு நடைமுறை அறிமுகப்படுத்தப்படாது என்று தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் முகமது ஹாசிம் அப்துல்லா கூறுகிறார். புத்ரா ஜெயாவில், இன்று ஓர் அறிக்கையில், ஜிஇ14-ல் மோசடிகளைத் தடுக்க 'ஆணை விரல்' முறையைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது என்ற நேற்றைய…
எம்.ஏ.சி.சி. : அரசு ஊழியர்கள் இலஞ்ச ஊழலை அறிவிக்க வேண்டும்
அரசு ஊழியர்கள், இலஞ்சம் கொடுக்கும், வாங்கும் சம்பவங்களைப் புகார் செய்ய முன்வர வேண்டும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) கேட்டுக்கொண்டுள்ளது. எம்ஏசிசி சமூகக் கல்வி பிரிவு இயக்குநர், அப்துல் சமாட் காசா, இந்நடவடிக்கையால் ஊழல்களைத் தடுக்க மட்டுமல்ல, அரசு துறை அல்லது நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும் அதிகரிக்க…
அஸ்மின்: மலேசியாவில் சீனாவின் முதலீடு வரவேற்கப்பட வேண்டியது
சிலாங்கூர் மந்திரி பெசார் முகமட் அஸ்மின் அலி, மலேசியாவில் சீனாவின் முதலீடு வரவேற்கப்பட வேண்டியது என்றார். சீனாவின் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (ஃப்.டி.ஐ.) விமர்சித்து வரும் துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் கருத்துக்கு மாறாக, சீனாவின் முதலீடு நம் நாட்டிற்குப் பயனளிக்கும் என அஸ்மின் நினைக்கிறார். "சீனா பொருளாதார…
ஐஜேஎன்னிலிருந்து மகாதிர் வீடு திரும்பினார்
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகமட் இன்று தேசிய இருதய கழகத்திலிருந்து (ஐஜேஎன்) இருதய சிகிட்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு அக்கழகத்தில் சிகிட்சை பெற்ற மகாதிர் இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். 93 வயதான மகாதிர் கடந்த வெள்ளிக்கிழமை ஐஜேஎன்னில் சிகிட்சைக்கு…
பேராக்கில் பி.எஸ்.எம். சிக்கலை உருவாக்குகிறது, டிஏபி குற்றச்சாட்டு
பேராக்கில், டிஏபி வசமிருக்கும் 1 நாடாளுமன்றம் மற்றும் 5 சட்டமன்றங்களில், மலேசியச் சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தனது வேட்பாளர்களை நிறுத்துவது சிக்கலை ஏற்படுத்தும் எனப் பேராக் டிஏபி குற்றம் சாட்டியுள்ளது. பி.எஸ்.எம்., பாரிசான் மற்றும் ஹராப்பானுடன் மும்முனைப் போட்டிகளை ஏற்படுத்தி, எதிர்க்கட்சியினரின் ஓட்டுகளைப் பிரிக்கிறது என்று பேராக் டிஏபி…
ரோன்95, 10 சென் குறைகிறது
இன்று நள்ளிரவு தொடக்கம், பெட்ரோல் ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் முறையே 10 சென், 11 சென் மற்றும் 12 சென் குறைகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு ரோன்95 லிட்டருக்கு ரிம2.23 ஆகவும், ரோன்97 லிட்டருக்கு ரிம2.50 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரிம 2.19 ஆகவும் விற்கப்படும். பெட்ரோல்…
ரோஸ்மாவைப் பற்றி மகாதிர் அவதூறாக பேசக்கூடாது
டாக்டர் மகாதிர் போன்றோர் ரோஸ்மா மான்சோர் மீது அவதூறு கூறுவது வருத்தத்திற்குரியதாகும் என்று பிரதமர் நஜிப்பின் துணைவி ரோஸ்மா மன்சோரின் சிறப்பு அதிகாரி கூறுகிறார். மகாதிர் போன்ற ஒருவர் எப்படி வதந்தியை செவிமடுத்து, அதை நம்புவது? அவர் குற்றம்சாட்டுவதற்கு முன்னர் அது சம்பந்தட்ட உண்மையை ஆய்ந்து தெரிந்துகொண்டிருக்க…
சுப்ரா: கேமரன் மலை மஇகாவுக்கே
மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியமும் மைபிபிபி தலைவர் எம். கேவியஸும் இன்று புத்ரா ஜெயாவில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு கேவியஸ் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கொண்டுள்ள விருப்பம் பற்றியதாகும். எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் மஇகா இத்தொகுயில் போட்டியிடும். அதை விட்டுக்கொடுக்கப்…
தேர்தலில் பிஎன், நஜிப் கை மேலோங்கியிருக்கும்: ஆய்வாளர்கள் கணிப்பு
எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் மற்றும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கை மேலோங்கியிருக்கும் எனப் பிரபல அரசியல் ஆய்வாளர்கள் இருவர் கூறுகின்றனர். கடந்த ஓராண்டுக் காலமாக பக்கத்தான் ஹரபான் ஆதரவு சரிந்திருப்பதாகக் கூறிய யுனிவர்சிடி மலேசியா சரவாக் இணைப் பேராசிரியர் டாக்டர் ஜெனிரி அமிர், …
கெடாவில் வெற்றி உறுதி: ஹரபான் எம்பி நம்பிக்கை
14வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரபான் கெடாவைக் கைப்பற்றும் வய்ப்பு பிரகாசமாக இருப்பதாய் பிகேஆர் எம்பி ஒருவர் கூறினார். அதற்கு முக்கிய காரணம் டாக்டர் மகாதிர். இதனைத் தெரிவித்த சுங்கை பட்டாணி எம்பி ஜொஹாரி அப்துல், 2016இல் முக்ரிஸ் மகாதிர் திடீரென்று பதவியிலிருந்து அகற்றப்பட்டு அஹமட் பாஷா ஹனாபியா …
திருடர்கள் கைகளில் வைரக் கேரட், சொத்தின் உரிமையாளர்களுக்கு வாயில் கேரட்டா?
மலேசியாவின் 1எம்டிபி நிதியிலிருந்து கொள்ளையடித்த பிரதமரின் அயல் நாட்டு தோழர் ஜோலோ காதலர் தினப் பரிசாக அவர் காதலி கெர்கிற்கு (ஆஸ்திரேலிய அழகிக்கு) 50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான இதய வடிவிலான 11.72 கேரட் வைரத்தைப் பரிசளித்தார். மலேசியப் பிரதமர் நஜிப் துன் ராசாக்கின் மனைவி…
அஸ்மின்: பாஸை இனியும் சகித்துக்கொள்வதற்கில்லை
வரும் பொதுத் தேர்தலில் பாஸுடன் ஒத்துழைப்பு இல்லை என்று சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி மீண்டும் வலியுறுத்தியிருப்பதாக நன்யாங் சியாங் பாவ் அறிவித்துள்ளது. “சிறிது காலமாக சகித்துக் கொண்டிருந்தேன், மிகவும் பொறுமை காத்தேன்”, என அஸ்மின் அந்தச் சீனமொழி நாளேட்டிடம் கூறினார். பாஸுடன் தொகுதி பங்கீட்டுப் …
சாப் கோ மே-வுக்குப் பிறகு, நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்
சாப் கோ மே முடிந்த ஒரு வாரத்தில், மார்ச் 2-ல் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சாப் கோ மே, இம்மாதம் 16-ம் தேதி வரவுள்ள சீனப்பெருநாளின் 15-வது நாள் கொண்டாடப்படும். அரசியல் ஆய்வாளர்கள் பொதுத் தேர்தலுக்கான சிறந்த காலம் குறுகியதாகவும், மார்ச் மாத…




















