49 வயதான டோ டெக் ஹூய், தனது தண்டனைத் தீர்ப்பை அறிவித்த போது நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார். 49 வயதான டோ டெக் ஹூய், ஒரு சுயசேவை சலவை நிலையத்தில் பூனைக்குட்டியை சுவர் மீது வீசிய குற்றத்தை காஜாங் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஒரு சுயசேவை சலவை நிலையத்தில்…
குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்க வட கொரிய தூதருக்கு விஸ்மா புத்ரா…
கிம் ஜோங்-நாம் கொலை விவகாரத்தில் புத்ரா ஜெயா எதையோ மூடிமறைப்பதாகக் குற்றஞ்சாட்டிய வட கொரியா தூதர் காங் சோலை விளக்கம் கேட்பதற்காக விஸ்மா புத்ரா அழைத்துள்ளது. அதே வேளை வட கொரியாவுக்கான மலேசியத் தூதரையும் ஆலோசனை கலப்பதற்காக கோலாலும்பூருக்குத் திரும்ப அழைத்துக் கொண்டிருப்பதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் …
அரசியல் நோக்கம் கொண்ட சட்டம் 355 பேரணி சரியானதல்ல, மகாதிர்…
சட்டம் 355 பேரணியின் ஏற்பாட்டாளர்கள் மறுத்திருந்தும் பெர்சத்துவின் தலைவர் மகாதிர் நேற்று நடைபெற்ற சட்டம் 355 பேரணியை அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறினார். நேற்றைய பேரணியில் பங்கேற்றவர்கள் ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355க்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்த போதிலும்,…
பாலமுருகனை அடித்த போலீஸ்காரர்களைக் கைது செய்யுங்கள், வழக்குரைஞர்கள்
போலீஸ் லாக்கப்பில் இருக்கும் போது மரணமடைந்த எஸ். பாலமுருகனின் உடல்மீது நடத்தப்பட்ட இரண்டாவது பிரேதச் சோதனை அவர் கடுமையாக அடிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது. அச்சோதனையில் கிடைத்த தகவல் அடிப்படையில் அதில் சம்பந்தப்பட்டவர்களை "உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்று வழக்குரைஞர்கள் என். சுரேந்திரன் மற்றும் லதீபா கோயா வலியுறுத்தினர்.…
உயிரோடு போலீஸ் லாக்கப்புக்குள் சென்ற 243 பேர் பிணமாகினர், அமைச்சரவை…
மலேசியாவில் போலீஸ் லாக்கப் மரணம் ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த ஜனவரி 15 இல், சோ கை சியோக் என்ற லாக்கப் கைதி மரணமடைந்தார். பெரா மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி மான்சூர் சம்சுடீன் லாக்கப் கைதிக்கு அளிக்க வேண்டிய அனைத்து லாக்கப் நடைமுறைகளும் சோவுக்கு…
அஸ்மின் தாயார் காலமானார்
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியின் தாயார் ,82, இன்று அதிகாலை 2.14 மணிக்கு கேபிஜே டமன்சாரா நிபுணத்துவ மருத்துவமனையில் காலமானார். நான்கு மாதங்களுக்குமுன் தம் தாயார், ச்சே தோம் யஹயா, பக்கவாதத்தால் தாக்கப்பட்டு அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக முகம்மட் அஸ்மி பிப்ரவரி 11-இல் தெரிவித்திருந்தார். அவரது …
டாக்டர் சுப்ரா: வட கொரியா சவப் பரிசோதனை விசயத்தில் மலேசிய…
சவப் பரிசோதனை செய்வதற்கென மலேசியாவில் சில நடைமுறைகள் இருப்பதை வட கொரியா மதிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் வலியுறுத்தினார். வட கொரியா தலைவர் கிம் ஜோங்- உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் ஜோங் - நாம் இறந்தது மலேசியாவில் என்பதால் இறப்பு தொடர்பான சோதனைகளையெல்லாம் செய்ய …
கார் மோதியதில் சைக்கிளோட்டிகள் எண்மர் பலி
ஜோகூர் பாரு ஜாலான் லிங்காரான் டாலாமில் கார் ஒன்று மோதியதில் எட்டு சைக்கிளோட்டிகள் பலியானார்கள். இன்று அதிகாலை மூன்று மணிக்கு நிகழ்ந்த அவ்விபத்தில் மேலும் அறுவர் காயமுற்றனர் அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலைமான் சாலே தெரிவித்தார். 13 …
ஜோங்-நாம் உடலை ஒப்படைப்பதில் தாமதம்: வட கொரியா குற்றச்சாட்டை ஐஜிபி…
ஜோங்- நாம் உடலை ஒப்படைக்காமல் மலேசியா வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக வட கொரியா சுமத்திய குற்றச்சாட்டை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மறுத்துள்ளார். ஜோங்-நாம் குடும்பத்தின் மரபணு கிடைக்காதவரை விசாரணையை முடித்துக் கொள்ள இயலாது என்றாரவர். வட கொரியா மலேசிய சட்டங்களை மதிக்க வேண்டும் …
ஜோங்-நாம் கொலையில் மேலும் ஒருவர் கைது
கிம் ஜோங்-நாம் கொலையில் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தின்பேரில் நான்காவது நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு ஜாலான் கூச்சாய் லாமாவில் ஒரு கொண்டோமினியத்தில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது அந்நபர் கைதானதாகத் தெரிகிறது. 47-வயது நிரம்பிய அவர் வட கொரிய கடப்பிதழ் வைத்திருந்தார் என த ஸ்டார் அறிவித்தது.…
பிஎன் அழைப்பு: டிஏபி நால்வர் நிராகரிப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை டிஏபி-இலிருந்து வெளியேறிய நான்கு பிரதிநிதிகளும் அவர்களின் முன்னாள் கட்சி குறித்துப் பேச பாரிசான் நேசனல் விடுத்த அழைப்பைப் புறந்தள்ளினர். கோத்தா மலாக்கா எம்பி சிம் தோங் ஹிம், தம்மையும் கட்சியிலிருந்து விலகிய ஏனைய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் பிஎன் கருத்தரங்கமொன்றில் பேசுவதற்கு மலாக்கா முதல்வர் இட்ரிஸ் …
அஸலினா: எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் கிட் சியாங் அன்னிய செலாவணி…
டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பேங்க் நெகாரா மலேசியாவில் ஏற்பட்ட அன்னிய செலாவணி இழப்பைப் புலனாய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிக்குழுவுக்கு உதவ முன்வர வேண்டும் என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட் . “பார்க்கப்போனால், அவர்தான் பணிக்குழுவுக்கு ஆதரவு …
இஸ்கண்டர்: சிலாங்கூரில் பிகேஆருடன் பாஸ் உறவைத் துண்டித்துக்கொள்ளக் கூடாது
பாஸ், எதிர்வரும் ஆண்டுக் கூட்டத்தில் அது குறித்து விவாதிப்பதற்குத் திட்டமிட்டிருந்தாலும் சிலாங்கூரில் பிகேஆருடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாது என்றே அதன் உதவித் தலைவர் இஸ்கண்டர் அப்துல் சமட் நினைக்கிறார். “முக்தாமார்( பொதுப் பேரவை) பிகேஆருடன் உறவுகளை வெட்டிக்கொள்ள முடிவெடுக்காது என்றே நம்புகிறேன்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். “பாஸ், கிழக்குக்கரை …
பாஸ் கட்சியின் சட்டம் 355 பேரணிக்கு ஆட்சேபம் இல்லை, ஹமிடி…
எதிர்வரும் சனிக்கிழமை பாஸ் கட்சி நடத்தவிருக்கும் சட்ட 355 பேரணியை உள்துறை அமைச்சு ஆட்சேபிக்கவில்லை என்று உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார். இப்பேரணியை பாடாங் மெர்போக்கில் நடத்துவதற்கு டிபிகேஎல் அனுமதி வழங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் போலீசாரும் அப்பேரணிக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றார்.…
கிம் கொலை தொடர்பில் கைதான இருவருக்கு 7நாள் தடுப்புக் காவல்
வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் என்று நம்பப்படும் கிம் ஜொங் நாம் படுகொலை தொடர்பில் கைதான இரு பெண்களும் விசாரணைக்காக ஏழு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்ட்டனர். சந்தேகத்துக்குரிய இரண்டாவது பெண் இன்று அதிகாலை மணி 2க்குக் கைது செய்யப்பட்டதாக இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் …
ஜமாலின் சவப்பெட்டி கூத்தைத் தற்காக்கிறார் நோ ஒமார்
ஜமால் யூனுஸ் பிணப்பெட்டிகளை வைத்துக் கொண்டு சிலாங்கூர் செயலகம் முன் அரங்கேற்றிய ‘கூத்தை’த் தற்காத்துப் பேசிய சிலாங்கூர் அம்னோ தொடர்புத் தலைவர் நோ ஒமார், அவர் அதன் மூலமாக ஒரு செய்தியைச் சொல்ல முனைந்தார் என்றார். “அவர் (ஜமால்) அந்தத் திட்டங்களின் அமலாக்கம் ஏமாற்றமளிப்பது ஏன் என்று (மந்திரி …
டிஏபியின் வாக்காளர் பதிவை ஊக்குவிக்கும் இயக்கம்
எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள 4 மில்லியன் மலேசியர்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள வலியுறுத்தும் இயக்கமொன்றை டிஏபி தொடங்கியுள்ளது. 2013 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய வாக்காளர்களின் பதிவு மிகவும் குறைந்திருப்பதை அறிந்து அக்கட்சி இவ்வியக்கத்தைத் தொடங்கியுள்ளது. 2011-இல் 1.02மில்லியன் பேர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொண்ட …
சிலாங்கூர் அரசில் இருப்பதா வேண்டாமா? பாஸ் அதன் ஆண்டுக் கூட்டத்தில்…
சிலாங்கூர் மாநில அரசில் பாஸின் நிலை குறித்து அதன் பொதுப் பேரவை முடிவு செய்யும் என அதன் தகவல் பிரிவுத் தலைவர் நஸ்ருடின் ஹசான் கூறினார். பொதுப் பேரவைக் கூட்டம் அடுத்த ஆண்டு ஏபரலில் நடக்கிறது. அதில் பிகேஆருடன் ஒத்துழைப்பது குறித்து விவாதிப்பதுடன் மாநில அரசில் தொடர்ந்து இருப்பதா …
கொலையாளிகளை ஏற்றிச் சென்ற டாக்சி ஓட்டுனர் பிடிபட்டார்
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாமைக் கொலை செய்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரு பெண்களை ஏற்றிச்சென்ற டெக்சி ஓட்டுனரை போலீஸ் பிடித்துள்ளதாக ஓரியெண்டல் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது. மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கும் ஓரியெண்டல் டெய்லி, அப்பெண்கள் இருவரும் …
போலீஸ் காவல் இறப்பு: இரண்டாவது சவப் பரிசோதனைக்கு நீதிமன்றம் அனுமதி
கடந்த வாரம் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மரணமடைந்த எஸ்.பாலமுருகன் உடல்மீது இரண்டாம் முறையாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பாலமுருகனின் இளவல் எஸ். பால்ராஜ் கேட்டுக்கொண்டதைப் போல் இரண்டாவது சவப் பரிசோதனையை கோலாலும்பூர் மருத்துவமனையில்(எச்கேஎல்) செய்வதற்கு நீதிபதி அஸ்மான் உசேன் அனுமதி …
ஜோகூர், சிலாங்கூர் டிஏபி-இலிருந்து தலைவர்கள் வெளியேற்றமா?
ஜோகூர் டிஏபி-இலிருந்தும் சிலாங்கூர் டிஏபி- இலிருந்தும் கட்சித் தலைவர்கள் வெளியேறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து அவற்றின் தலைவர்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை. நேற்று, முன்னாள் டிஏபி உதவித் தலைவர் துங்கு அப்துல் அசிஸ் துங்கு இப்ராகிம் 48மணி நேரத்தில் ஜோகூரிலும் சிலாங்கூரிலும் இரண்டு மூத்த டிஏபி தலைவர்கள் …
கிம் ஜோங்-நாமை வட கொரிய ஆள்கள் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாமை வட கொரிய ஆள்கள்தாம் விஷம் வைத்து கொன்றிருக்க வேண்டும் என தென் கொரிய உளவுத் துறை கூறியது. இத்தகவல் எப்படித் தெரிய வந்தது என்பதை அது தெரிவிக்கவில்லை. ஆனால் ஜோங் உன்னின் மாற்றாந் தாய் மகனான …
மகாதிர்: பாஸ் தலைவர்களின் கால்களை முத்தமிட மாட்டேன்
பெர்சத்துவுடன் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ள பாஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்ட ஒரு மாதகால அவகாசம் உறுதியானது என்று அக்கட்சியின் தலைவர் மகாதிர் முகமட் கூறுகிறார். இந்த விவகாரத்தை தீர்க்க நாங்கள் முயற்சிகள் எடுத்தோம். மிகவும் பொறுமையாக இருந்தோம். பாஸ் கட்சியைப் பற்றி நாங்கள் எதுவும் தவறாகக் கூறவில்லை. நாங்கள்…
மாபுஸ்: ஹாடியின் நிலைப்பாட்டின் அடிப்படையில் பாஸுக்கும் பிகேஆருக்குமிடையில் இனி ஒத்துழைப்பு…
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், டிஏபி மற்றும் பார்டி அமனாவுடன் தொடர்பு வைத்துள்ள கட்சிகளுடன் ஒத்துழைக்கப்போவதில்லை என்று அறிவித்திருப்பதால் இனி பிகேஆருடன் ஒத்துழைப்பு இருக்காது என்று பொகோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார் கூறினார். அந்த வகையில், பிகேஆர் தலைமையில் செயல்படும் சிலாங்கூர் அரசிலிருந்து வெளியேறுவது குறித்து …


