அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகால ஒப்பந்தப் பணிக்காலத்தை நிறைவு செய்த மருந்தாளுநர்களுக்கு (Pharmacists), ஒப்பந்த நீட்டிப்பு வழங்கப்படாது என்று சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. "பணி முடிவடைவதால் 45 ஒப்பந்த மருந்தாளுநர்கள் தவிப்பு" என்ற செய்தி தொடர்பாக எழுப்பப்பட்ட கவலைகளைத் தாங்கள் கவனித்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்ட…
சீனப் புத்தாண்டின்போதுதான் விசாரணையா? போலீஸ்மீது குவான் எங் சீற்றம்
போலீசார், பிஎன் உறுப்புக் கட்சிகள் பிஎன்னிலிருந்து விலக வேண்டும் என்று நவம்பர் 23-இல் அறிக்கை விட்டதற்காக பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கை விசாரணை செய்ய விரும்புகிறார்கள். ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி)ச் சட்டத்துக்கு பாஸ் முன்மொழிந்த திருத்தங்கள்மீது பிஎன் கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மசீச, கெராக்கான், மஇகா …
மகாதிர்: நான் தவறு செய்து விட்டேன், துணைப் பிரதமர் பதவி…
டிஎபி துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று கேட்டிருந்தது என்று முன்னதாக கூறிக்கொண்ட மகாதிர், தான் அவ்வாறு கூறியது தவறு என்றும், மசீசதான் அப்பதவி வேண்டும் என்று கேட்டுக்கொண்டது என்றும் கூறுகிறார். டிஎபி துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று தாம் கூறியதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்…
மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடந்தார்
நேற்று ஜோகூர் பாருவில், ஸ்ரீஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில், துப்பாக்கிகளைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த சார்ஜன் மேஜர் ஒருவர் தற்செயலாக துப்பாக்கி ஒன்று வெடித்ததில் பலியானார். நெகிரி செம்பிலானைச் சேர்ந்த அபு பக்கார், 51, 30 ஆண்டுகளாக போலீசில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று நிலையத்தில் அவர் தனியாக இருந்தபோது அச்சம்பவம் …
நஜிப்: அவர் துன் மகாதிர் அல்ல; யு-டர்ன் மகாதிர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அடிக்கடி தம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் டாக்டர் மகாதிரை மீண்டும் சாடினார். இன்று காலை கோலாலும்பூரில் தேசா பாண்டானில் ஒரு நிகழ்வில் உரையாற்றிய நஜிப் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரை மட்டம் தட்டிப் பேசினார். “டாக்டர் மகாதிரை யு-டர்ன் (பல்டி அடிக்கும்) மகாதிர் என்றுதான் …
எம்எச்370 : விமானத்தைக் கண்டுபிடிக்க உதவும் முக்கிய தகவலை மலேசியா…
மலேசியா காணாமல்போன எம்எச்370 பற்றிய முக்கியமான தகவலை ஆஸ்திரேலிய அதிகாரிகளிடமும் தனிப்பட்ட விமானப் போக்குவரத்து நிபுணர்களிடமும் கொடுக்காமல் வைத்துக்கொண்டது. அத்தகவல் கிடைத்திருந்தால் விமானத்தைக் கண்டுபிடித்திருக்க முடியுமாம். இவ்வாறு ஆஸ்திரேலிய இணையச் செய்தித்தளம் நியுஸ். காம். ஏயு ஒரு கட்டுரையில் கூறியுள்ளது. “வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போன்ற பணியில் …
குவான் எங்: டிஎபி துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் துணைப் பிரதமர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று டிஎபி கோரியதாக கூறப்படுவதை லிம் குவான் எங் மறுத்துள்ளார். அந்தாராபோஸ் வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையை மேற்கோள்காட்டி பெரித்தா ஹரியான் டிஎபி துணைப் பிரதமர் பதவியை கேட்டுள்ளது என்று முன்னாள் பிரதமர்…
மலிவுவிலை வீடமைப்புத் திட்டம் ஏன் சீனாவுக்குக் கொடுக்கப்பட்டது? பேராக்கிடம் கேள்வி
சீனாவிடம் உள்நாட்டுக் குத்தகைகள் கொடுக்கப்படுவதுமீது சர்ச்சைகள் தொடர்கின்றன. இப்போது பேராக்கில் வீடமைப்புத் திட்டமொன்று சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பார்டி அமனா நெகரா (அமனா), ஈப்போ, மேரு ராயாவில் 'D'Aman Residensi' கட்டுப்படி விலை வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைக் கட்டித்தர ஜனவரி 16-இல் சீனாவின் …
பெர்சேக்கு எதிராக அரசாங்கத்தின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது
கூட்டரசு நீதிமன்றம், 2012 பேரணியின்போது நிகழ்ந்த சேதங்களுக்கு பெர்சே அமைப்பிடமிருந்து இழப்பீடு பெற அரசாங்கம் செய்திருந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றம் அம்முறையீட்டைத் தள்ளுபடி செய்ததன் மூலம், அமைதிச் சட்டம் 2012-இன்கீழ் பேரணிக்குப் பின்பு இழப்பீடு கோரும் உரிமை அரசாங்கத்துக்கும் போலீசுக்கும் கிடையாது என்று கடந்த ஆக்ஸ்ட் …
வியாழக்கிழமை ரொஹின்யா விவகாரம்மீது ஓஐசியின் அவசரக் கூட்டம்
இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு மன்றம்(ஓஐசி) மியான்மாரில் ரொஹின்ய முஸ்லிகளின் நிலை குறித்து விவாதிப்பதற்காக அதன் வெளியுறவு அமைச்சர்களின் அவசரக் கூட்டமொன்றைக் கோலாலும்பூரில் நடத்துகிறது. மலேசியாவின் வேண்டுகோளுக்கிணங்கக் கூட்டப்பட்டுள்ள அக்கூட்டம் மலேசியாவின் தலைமையில் நடைபெறுகிறது. வியாழக்கிழமை கோலாலும்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும் அக்கூட்டத்தில் 59 உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் …
காலிட் சமட்டுக்கு ரிம2,900 அபராதம், ஷா ஆலம் தொகுதியை இழக்கும்…
கிள்ளான் ஷியாரியா நீதிமன்றம் தகுந்த தகுதிச் சான்றுகள் இன்றிச் சமயக் கல்வி புகட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அமனா எம்பி காலிட் சமட்டுக்கு ரிம2,900 அபராதம் விதித்ததை அடுத்து அவர் தம் எம்பி பதவியை இழக்கும் அபாயமும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. காலிட் …
நஜிப்: பிஎன் தோற்றால் டிஏபிதான் ஆட்சி செய்யும்
அடுத்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராபான், பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) கூட்டணி வெற்றி பெற்றால், டிஏபி அரசாங்கத்தில் உயர்ப் பதவியை வைத்திருக்கிறதோ இல்லையோ, ஆட்சி செய்யப்போவது அக்கட்சிதான் என்று பிரதமர் நஜிப் கூறினார். “ஜனநாயகமும் அரசியலும் எண்ணிக்கையை வைத்து ஆடப்படும் ஆட்டமாகும். அரசாங்க உயர் பதவி …
யூபிஎஸ்ஆர் தேர்வுத் தாள் வைத்திருந்த குற்றச்சாட்டிலிருந்து ஆசிரியர் விடுதலை
2014 யூபிஎஸ்ஆர் தேர்வுத் தாள்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்த பள்ளி ஆசிரியரை கோலா கங்சார் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. கே. அன்பரசு,52, குற்றம் செய்தார் என்பதை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என நீதிபதி நிரான் டான் கிரான் தீர்ப்பளித்தார். பெங்களான் உலு, கெரு…
‘இதுவே, மாற்றம் நிகழ ஏற்ற தருணம்’ அன்வார் இப்ராகிம்
அரசாங்கத்தில் மாற்றம் நிகழ இதுவே சரியான தருணம் என்றுரைத்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், 14வது பொதுத் தேர்தலில் எதிரணி தோற்கும் என்ற அரசியல் கணிப்பாளர்களின் ஆருடங்களைப் புறந்தள்ளினார். அரசியல் ஆய்வாளர்கள் இதே கருத்தைத்தான் 2008-இலும், 2013-இலும் தெரிவித்தார்கள் என்று அன்வார் கூறினார். அவர் இன்று ஒரு …
பாஸ் கட்சியின் சட்டம் 355 பேரணிக்கு எதிர்ப்புப் பேரணி
தன்னை ‘பேபாஸ்’ என்று அழைத்துக்கொள்ளும் ஒரு தரப்பு பிப்ரவரி 18-இல் பாஸ் கட்சி நடத்தும் சட்டம் 355 பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணி ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. சமூக ஆர்வலர்களான அஸ்ருல் முகம்மட் காலிப், அசிரா அசிஸ், ஆர். சுரேஷ் ஆகியோர் இன்று ஓர் அறிக்கையில் அவ்வறிப்பைச் செய்திருந்தனர்.…
மகாதிரின் பல கருத்துகள் காலத்துக்கு ஒத்துவராதவை- சாலே கெருவாக் தாக்கு
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தெரிவிக்கும் பல கருத்துகள் காலவதியானவை, இக்காலத்துக்குப் பயனற்றவை என்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் சாடியுள்ளார். மகாதிர் இக்காலத்தில் எப்படி செயலாற்றப்படுகிறது, உலக மயம் என்றால் என்ன என்பனவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு பேச வேண்டும். “இது எல்லைகளற்ற உலகம். மகாதிர் …
பெர்சேயில் கலந்துகொண்ட இரண்டு மாணவர்களை விசாரணைக்கு அழைத்தது யுஎம்எஸ்
யுனிவர்சிடி மலேசியா சாபா(யுஎம்எஸ்), கடந்த ஆண்டு பேர்சே பேரணியில் கலந்துகொண்ட அதன் மாணவர்கள் இருவரை ஜனவரி 25-இல் கட்டொழுங்கு விசாரணைக்கு அழைத்துள்ளது. சுவாரா மஹாசிஸ்வா யுஎம்எஸ் தலைவர் முக்மின் நந்தாங், முன்னாள் “தங்காப் எம்ஓ1” கூட்டணி உறுப்பினர் நுருல் அக்கிலா முகம்மட் சைனுசி ஆகியோரே அவ்விருவருமாவர். நுருல் அக்கிலாவைத் …
மகாதிர்: நான் ராஜத் துரோகியா? அப்படியே ஆகட்டும்
முன்னாள் பிரதமர் மகாதிர் வரம்பை மீறி விட்டார் என்று ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தார் கூறியிருந்த குற்றச்சாட்டிற்கான பதிலை மகாதிர் கடிதத்தில் எழுதியுள்ளார். இன்றைய த ஸ்டார் நாளிதழில் பக்கம் 33, கடிதங்கள் பகுதியில் மகாதிரின் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், சுல்தான் தமக்கு சவால் விட்டாரா அல்லது அந்த…
சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்
பாரிசான் நேசனலின் சுங்கை ஆயர் தாவார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கமாருல் ஸாக்கி அப்துல் மாலிக், 58, இன்று காலை சாபா பெர்ணாமில் அவரது இல்லத்தில் காலமானார். இன்று காலை அவரது தொகுதியில் நடைபெறவிருந்த நிகழ்வுக்கு அவரை அழைத்து வர அவரது இல்லம் சென்றபோது அவரின் கார் ஓட்டுனர் …
ரிம15ஆயிரம் வருமானம் பெறுவோரும் பிரிமா வீடுகளை வாங்கலாம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்ட(பிரிமா)த்தின்கீழ் மேலும் பலர் வீடு வாங்குவதற்கு வழிகோலும் இரண்டு கொள்கை மாற்றங்களை இன்று அறிவித்தார். ஒன்று, பிரிமா வீடமைப்புத் திட்டத்தில் வீடு வாங்குவோருக்கான வருமான வரம்பு ரிம10 ஆயிரத்திலிருந்து ரிம15 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, பிரிமா வீடுகளை வாங்குவோர்…
தடை செய்யப்பட வேண்டியவை லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் அல்ல- வான்…
கோலாலும்பூர் மையப்பகுதியில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க சிறுரக மோட்டார் சைக்கிள்களை தடைசெய்யும் கருத்தை இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் ஏற்கவில்லை. “அவற்றால்(மோட்டார் சைக்கிள்கள்) ஏற்படும் தூய்மைக்கேடு சிறிதுதான். பெரிய ஊர்திகள்தாம் தூய்மைக்கேட்டுக்குக் காரணம். “சிறிய வாகனங்களைத் தடை செய்ய வேண்டுமா என்பது …
எம்ஆர்டி அறிமுகக் காலத்தில் 1.2 மில்லியன் பேர் அதில் பயணம்…
டிசம்பர் 16-இல் தொடங்கிய சுங்கை பூலோவுக்கும் செமாந்தானுக்குமிடையிலான எம்ஆர்டி முதல் கட்டச் சேவையில் நேற்றுவரை பயணம் செய்தவர் எண்னிக்கை சுமார் 1.2 மில்லியன். எம்ஆர்டியை அறிமுகப்படுத்தும் வகையில் டிசம்பர் 16-லிருந்து ஒரு மாதத்துக்குப் பயணிகள் எம்ஆர்டி-இல் இலவசப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அந்த இலவசப் பயணத் திட்டம் இன்றுடன் …
சமூக வலைத்தளங்கள் அபாயகரமானவை- எச்சரிக்கிறார் அஸலினா
பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் அரசு அதிகாரிகள் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டுமாய் எச்சரித்துள்ளார். அனுபவம் அவரை அப்படிப் பேச வைத்துள்ளது. “லாஸ் வேகாஸ் சென்றிருந்தேன். லாஸ் வேகாஸில் நிறைய சூதாட்ட இயந்திரங்கள் இருப்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. “அதைப் படமெடுத்தேன். அதைக் கண்ட …
1எம்டிபி ஊழலாலும் நம்பிக்கை குறைந்திருந்திருப்பதாலும் என்சிசி2 அவசியமாகிறது- நாஸிர்
1எம்டிபி சர்ச்சை காரணமாக கூட்டரசு அரசாங்கத்தின்மீதும் அதன் முக்கிய அமைப்புகளின்மீதும் நம்பிக்கை குறைந்திருப்பதால் இரண்டாது தேசிய ஆலோசனை மன்ற(என்சிசி2)த்தைக் கூட்டுவது அவசியமாகும் என்கிறார் சிஐஎம்பி குழுமத் தலைவர் நாஸிர் ரசாக். என்சிசி2 அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கடந்த செப்டம்பர் மாதமே முன்வைத்த நாஸிர், 1எம்டிபி சர்ச்சையால் அதிகாரத்தைக் …


