திடீர் உடல் நலக்குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் கல்கி பகவான் அனுமதி

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கல்கி பகவான். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். எல்ஐசி முகவராக இருந்தவர். இவரது மனைவி பெயர் புஜ்ஜம்மா. தற்போது இவர் தனது பெயரை…

தமிழகத்திலிருந்து 40 பேர் மறுவாழ்வுக்காக இலங்கை பயணம்

இலங்கையிலிருந்து உள்நாட்டுப் போரின் போது அகதிகளாக இந்தியா வந்த லட்சக்கணக்கானோர், பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் மறு வாழ்வுபெறும் வகையில் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை, ஐக்கியநாடுகள் சபையின் அகதிகள் மறுவாழ்வு ஆணையம் செய்து வருகின்றது. ஏராளமானோர் இதுவரையில் தமிழகத்திலிருந்து இலங்கை அனுப்பப்பட்டு வருகின்றனர்.…

நவம்பர் 1 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்!

தமிழகத்தில் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தலை அடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  சட்டத்தை அமல்படுத்தினாலும் விலையில்லா அரிசி வழங்குவது தொடரும் என அரசு விளக்கம்…

யாழ். மாணவர்கள் படுகொலை – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான், திருமாவளவன்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன், பவுன்ராஜ் சுலக்ஷன் ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி…

கோவை அருகே பிடிபட்ட கேரள கழிவு லாரிகள் பிரச்சனை குறித்து…

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே கே எஸ் எம். தெகலான் பாகவி விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "கேரளாவில் இருந்து தமிழக எல்லைப்பகுதியில் மருத்துவ கழிவுப் பொருட்கள் கொட்டப் படுவதாக  நீண்ட காலமாக பிரச்சனை எழுப்பபட்டு வருகிறது.இந்த நிலையில் கோவையில் எல்லையோர கிராமமான எட்டிமடையை சேர்ந்த மக்கள் நேற்று…

இயற்கை மருத்துவம் மீதான மக்களின் ஆர்வமே எமனாக மாறுகிறதா? போலி…

நெல்லை: ஆங்கில மருத்துவம் மீதான எரிச்சலும், இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த அரைகுறை புரிதலும் போலி சித்த வைத்தியர்களை தமிழகத்தில் வளரச் செய்துவருகிறது. இதன் எதிர் விளைவுதான், நெல்லை மாவட்டத்தில் நடந்த 4 பேரின் கொடுமையான மரணங்கள். இப்போதெல்லாம் இயற்கை மருத்துவம், இயற்கை விவசாயம்தான் உயர்…

தென்காசியில் நாட்டு மருந்து சாப்பிட்ட 4 பேர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம், தென்காசி அருகே குத்துக்கல் வளசை பக்கம் உள்ளது அழகப்பபுரம் கிராமம். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு மாதம் முன்பு தென்காசியில் உள்ள மலையான்தெருவைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் முத்துப்பாண்டி என்பவர் சென்றுள்ளார். தன்னை நாட்டு வைத்தியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், குண்டாக இருக்கும் மனிதர்களுக்கு நீரிழிவு…

கோவாவில் கன்னடர்கள் மீது கொடூர தாக்குதல்- அடித்து விரட்டப்பட்டதால் கர்நாடகாவில்…

பனாஜி: கோவாவில் 40 ஆண்டுகாலமாக குடியிருந்து வந்த கன்னடர்கள் தாக்கப்பட்டு கர்நாடகாவுக்கு விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தால் இரு மாநிலங்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஃபோன்டா பகுதி. இது கோவாவின் மத்திய பகுதியில் உள்ளது. இப்பகுதியில் 5 கன்னட குடும்பங்கள்…

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை: சீமானின் அதிரடி அறிக்கை!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்ல்ப்பட்ட சம்பவத்தில் உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறி்க்கையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடராசா கஜன், பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவரும் யாழ்ப்பாண சோதனைச்சாவடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது…

தேவஸ்தான கஜானாவில் 35 ஆயிரம் கிலோ வெளிநாட்டு நாணயங்கள்

திருமலை திருப்பதி தேவஸ்தான கஜானாவில் 35 ஆயிரம் கிலோ வெளிநாட்டு நாணயங்கள் உள்ளது. இதுகுறித்து, சனிக்கிழமை தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் கூறியதாவது: ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களில் சிலர் வெளிநாட்டு நாணயங்களை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இவற்றை, தேவஸ்தானம் தனியாகப் பிரித்து கஜானாவில் பத்திரப்படுத்தி வருகிறது.…

தமிழகத்தில் 7 மாதங்களில் 47 காட்டு யானைகள் உயிரிழப்பு

தமிழகத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை பல்வேறு காரணங்களால் 47 காட்டு யானைகள் உயிரிழந்தன. ஜூன், ஜூலை மாதங்களில் மட்டும் 14 யானைகள் இறந்தன. ஓராண்டில் தமிழகத்தில் மட்டும் 80-90 யானைகள் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் 4,000 யானைகள் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள்…

இந்தியாவில் குறைந்து வரும் வேலைத்திறன்

டில்லி: இந்தியாவில் வேலை பார்ப்பவர்களின் திறன் குறைந்து வருவதாக வேலைவாய்ப்பு நிறுவனமான மேன்பவர் குரூப் இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 லட்சம் பேர் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு நிறுவனங்களில் தங்கள் விவரங்களை பதிந்து வரும் நிலையிலும் இந்தியாவில் உள்ள 48 சதவிகித நிறுவனங்கள்…

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் செய்த மனதை உருக்கும் காரியம்

இந்தியாவின் டெல்லி மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் ராகுல் நர்வேகர்- ஆர்.ஜெ பல்லவி. பல்லவி கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளி, ஆனால் எந்தவொரு காரணத்திற்காகவும் அவர் துவண்டுபோகவில்லை, மாறாக அதை எதிர்த்து தன் வாழ்க்கையை மீட்க போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பக்க பலமாக அவரின் கணவர் ராகுல் இருந்து வருகிறார்.…

சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவினை மத்திய அரசு திரும்பப்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் இரசாயன மற்றும் உரத்தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனம் சிப்பெட்(CIPET) எனப்படுகிற மத்திய பிளாஸ்டிக்ஸ் பொறியியல் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனமாகும். இது முன்னாள் குடியரசுத் தலைவர்  ஆர்.வெங்கட்ராமன் மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்தபோது…

அப்பல்லோவில் ஒரு மாதம்- முதல்வருக்கு வந்திருக்கும் நோய் இதுதானா?

இன்றோடு ஒரு மாதமாகிறது!. 1984ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போலோவில் ஒரு மாதம் வரை சிகிச்சைக்காகத் தங்கி இருந்தார். அவருக்கு அடுத்து நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெரும் தமிழக முதல்வர் ஜெ., தான். கடந்த செப் 22ல் அப்போலோவின் விவிஐபி-க்களுக்கான அறை எண் 2008ல் அவர்…

இந்தியத் தொலைக்காட்சி சேனல்களுக்கு பாகிஸ்தானில் தடை: இந்தியா கண்டனம்

இந்தியத் தொலைக்காட்சி சேனல்கள், வானொலி நிகழ்ச்சிகளின் ஒளி-ஒலிபரப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்திருப்பது துரதிருஷ்டவசமானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறிய தாவது: இந்தியத் தொலைக்காட்சி சேனல்களுக்கும், வானொலி நிகழ்ச்சிகளுக்கும் பாகிஸ்தான் அரசு…

ஏ.டி.எம். அட்டைகளின் ரகசிய குறியீடு திருட்டு: 32 லட்சம் கார்டுகள்…

சென்னை: வங்கி ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை திருடி போலியான ஏ.டி.எம். கார்டுகளை உருவாக்கி அதன் மூலமாக பணத்தை திருடும் கும்பல் நீண்ட நாட்களாகவே கைவரிசை காட்டி வருகிறது. சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசாரிடம் இது தொடர்பாக ஏராளமானோர் தொடர்ச்சியாக…

சிவகாசி பட்டாசு விபத்தால் பூமியில் சிந்திய மனிதர்களின் ரத்தம்! இந்த…

'ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை வரும்போது பட்டாசுகள் தயாரிக்கும் இடமான சிவகாசியில் மனிதர்களின் இரத்தம் பூமியில் சிந்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் என்ன விதிவிலக்கா? இந்த வருடமும் ஒரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகாசியில் உள்ள பட்டாசு கிடங்கில் இருந்து இன்று பிற்பகலில் மின்…

தலித்துகள் மீதான தாக்குதல்… வெட்கித் தலை குனிகிறேன்… பஞ்சாபில் மோடி…

லூதியானா: நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆன போதிலும் தலித்துகள் மீதான தாக்குதல் இன்றளவும் தொடர்வதை எண்ணி வெட்கித் தலைகுனிவதாக வேதனை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தலித் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் தொழில் மேம்பாட்டுக்கான தேசிய மையத்தை பிரதமர்…

இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம்- காவிரி உரிமை மீட்பு…

தஞ்சாவூர்: காவிரி விவகாரத்தில் 'இந்திய' அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வெளியிட்ட அறிக்கை: காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு…

திருப்பதி கோவில் வருமானத்தில் பங்கு கேட்டு கேஸ் போட்ட பூசாரி!

ஹைதராபாத்: திருப்பதி தேவஸ்தான வருமானத்திலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ. 1000 கோடியை பங்காக தர வேண்டும் என்று கோரி ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் அர்ச்சகர் ஒருவர் வழக்குப் போட்டுள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா உருவாக்கப்பட்டது. அப்போது திருப்பதி கோவில் வருமானத்தை இரு மாநிலங்களுக்கும் சமமாக பிரிக்க…

திருவண்ணாமலை.. மலையை குடைந்து சாமியார்கள் ஆக்கிரமிப்பு… பக்தர்கள் போர்கொடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மலையை குடைந்து சாமியார்கள் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிவ பக்தர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள ஸ்தலம் திருவண்ணாமலை. மாதந்தோறும் பௌர்ணமி அன்று இரவில் மலையை வலம் வந்து வழிபாடு நடத்தி வரும் பக்தர்களால் இந்த இடம் படுபேமஸ். இதனைப்…

தண்ணீர் திறக்க முடியாது.. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல் மீண்டும்…

பெங்களூர்: காவிரி நீர் வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வாதம் நிறைவடையாத நிலையில் இன்றும் விசாரணை தொடரும் என நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடரும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அந்த உத்தரவின்படி தமிழகத்திற்கு கர்நாடக…