உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை..! இப்போது இளைஞரின் கதி என்ன…

தன்னுடைய உயரத்தை அதிகரிப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் தீடீரென படுத்த படுக்கையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் நிகில் ரெட்டி. இவர் தனது உயரம் இரண்டு அங்குலம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள பிரபல குளோபல் மருத்துவமனையில் அறுவை…

சித்தூரில் போலி நெய் தயாரித்த கும்பல் கைது- இயந்திரங்கள் பறிமுதல்

சித்தூர்: ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே இறந்த மாட்டின் கொழுப்பு குரூட் ஆயில் கொண்டு போலி நெய் தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், இயந்திரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். -http://tamil.oneindia.com

11,000 தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் அதிரடி ரத்து!

டெல்லி: 11,000 தொண்டு நிறுவனங்களின் புதுப்பிக்காத உரிமங்களை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. மேலும் 25 தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை புதுப்பிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது. வெளி நாடுகளிடமிருந்து நிதியுதவி பெறும் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இவை ஜூன் மாதத்துக்குள் தங்களின் உரிமங்களை புதுப்பித்திருக்க வேண்டும்.…

காஷ்மீரில் சுயாட்சி உரிமையை சிதைக்கும் பாகிஸ்தான்.. ஐ.நா.வில் சீறிய இந்தியா

நியுயார்க்: காஷ்மீர் விவகாரத்தில் சுயாட்சி முறையை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டி விடுகிறது என்று ஐ.நா பொதுச் சபையில் இந்திய நிரந்தர பிரதிநிதி மயங்க் ஜோஷி கடுமையாக பேசினார். "பாகிஸ்தான் மக்களுக்கே இத்தனை கால அந்நாட்டு வரலாற்றில் அவர்களுக்கான ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.…

ரூ.4,700 கோடி (RM295 கோடி) போதைப்பொருள் பறிமுதல்: பிரபல பாலிவுட்…

உதய்பூர்: ராஜஸ்தானில் ரூ. 4, ஆயிரத்து 700 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாலிவுட் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள குடோன் ஒன்றில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியத்தின் புலனாய்வு பிரிவான, வருவாய்…

தீபாவளி ஸ்பெஷல்: சீனாவிற்கு இந்தியர்கள் கொடுத்தது அடி இல்லை இடி..

கடந்த சில வாரங்களாக இந்திய வியாபாரிகள் மற்றும் மக்கள் சீன பொருட்களை வாங்கவும் விற்கவும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் தீபாவளி பண்டிகை நாட்களில் மட்டும் இந்தியாவில் சீன பொருட்களின் விற்பனை சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய வர்த்தகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. -tamil.goodreturns.in

பாகிஸ்தான் வீரர்களை கொன்ற இந்திய வீரர்கள்! பரபரப்பு சிசிடிவி காட்சி…

ஜம்முவில் உள்ள பாகிஸ்தான் இராணுவ முகாம்களை அழித்த சிசிடிவி காட்சியை இந்திய எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் வெளியிட்டுள்ளார். ஜம்முவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இந்திய எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.கே. உபாத்யாய் குறித்த சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் பேசியதாவது,…

மலப்புரம் குண்டு வெடிப்பில் அல்-உம்மா கைவரிசை? விசாரிக்கிறது என்.ஐ.ஏ

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் கோர்ட் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரிக்க உள்ளது. மலப்புரம் நீதிமன்றத்தின் வெளியே நேற்று மதியம் சுமார் 1 மணியளவில், நடந்த குண்டு வெடிப்பில் 3 கார்கள் சேதமடைந்தன. நல்லவேளையாக யாருக்கும் ஆபத்து நேரவில்லை. சம்பவ இடத்திற்கு…

இரண்டே என்கவுண்டர்கள்.. புனே குண்டு வெடிப்பு வழக்கு மொத்தமாக க்ளோஸ்!…

டெல்லி: போபாலில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வருடம் நடைபெற்ற என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளுமே, புனே குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள். இவ்விரு என்கவுண்டர்கள் மூலமாக புனே குண்டு வெடிப்பு வழக்கு கோர்ட்டில் தீர்வு எட்டப்படும் முன்பே 'முடித்து' வைக்கப்பட்டுள்ளது.2014ம் ஆண்டு ஜூலை மாதம்…

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்.. மோடி தலைமையில் உயர்மட்ட குழு அவசர…

டெல்லி: காஷ்மீரில் எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய நிலைகள் மீதும், அப்பாவி மக்களை குறி வைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.ஆனால், நிகியால், ஜாண்ட்ராட் பகுதிகளில் 31ம் தேதி இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உள்பட 6…

4 வயது சிறுமியை உயிர்ப்பலி கொடுத்த கும்பல்: அதிர வைக்கும்…

அசாம் மாநிலத்தில் தொலைந்த மொபைல் போனை மீட்டெடுப்பதற்காக கும்பல் ஒன்று 4 வயது சிறுமியை கழுத்தை துண்டித்து பலியிட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின் ரத்னாபூர் என்ற ஆதிவாசி கிராமத்தில் குறித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்து கைகள்…

குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர வேண்டியது அவசியம்: மோடி வலியுறுத்தல்

டெல்லி: குழந்தைகள் ஸ்பானிஷ் அல்லது பிரஞ்சு மொழி பேசும் போது, தமிழ், ஒடியா போன்ற பிராந்திய மொழிகளையும் கற்பது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்தநாள் விழா திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் உள்ள…

சென்னை ரோட்டோரத்தில் ஜோராக விற்கப்படும் பூனை கறி பிரியாணி..! அதிர…

சென்னை ரோட்டோர கடைகளில் விற்கப்படும் உணவுகளில் பூனை கறி பயன்படுத்தி வருவது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. விலங்கு உரிமை ஆர்வலர்கள் பல்லாவரம் பகுதி இளைஞர்களின் உதவியோடு பூனைகள் இறைச்சிக்காக பயன்படுத்துவதை வீடியோவாக பதிவு செய்து ஆதாரத்துடன் பொலிசில் புகார் அளித்துள்ளனர். குறித்த வீடியோவில் பூனைகளை உயிருடன்…

சிறையில் இருந்து தப்பிய பயங்கரவாதிகள்: சுட்டு வீழ்த்திய பொலிஸ்

மத்திய பிரதேச மாநிலத்தில் பாதுகாவலரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 8 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சிமி இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம்…

எல்லையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்… பாகிஸ்தானுடன் இனிப்பு பகிர்ந்துகொள்ளப்போவதில்லை!

ஸ்ரீநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விளக்கேற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நாட்டை பாதுகாக்க வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இந்த தீபாவளி பண்டிகையை அர்பணிப்பதாக அவர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு பாகிஸ்தானுடன் இனிப்புப் பகிர்ந்துகொள்ள மாட்டோம்…

இனி ஓ.பி.எஸ்..! மோடியின் பாக்கெட்டில்..! யாரும் அசைக்க முடியாது..!

தமிழ் நாட்டின் மொத்த தலை எழுத்து இனி நமது பிரதமரின் கட்டுப் பாட்டில். அதை விட பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமரின் பாக்கெட்டில் என்கிறார்கள். மோடியின் கண் அசைவிற்கு பன்னீர் இனிக் கட்டுபடுப்படுவார் என்கிறார்கள். காரணம் சசிகலா எடப்பாடி தான் பொறுப்பு முதல்வர் என்று முடிவு செய்த போது…

இந்தியா வீரர் படுகொலைக்கு பதிலடி! பாகிஸ்தானின் 4 நிலைகள் தரைமட்டம்!…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மச்சில் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் துப்பாக்கிச் சூட்டை பயன்படுத்திக் கொண்டு இந்திய எல்லைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் ஒரு வீரரை கொண்டு தலையை மற்றும் உடல்பகுதிகளை கூறுபோட்டு கொடூரமாக கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி…

இராணுவ வீரரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய தீவிரவாதிகள்!…

இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ வீரரை கொன்று துண்டு துண்டாக வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உரி இராணுவ முகாமில் கடந்த 18ம் திகதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக்…

போதையில் காரை ஓட்டி கொன்ற பிரபல வீரருக்கு ஜாமீன்! உயிரின்…

சென்னை கதீட்ரல் சாலையில் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் திகதி அதிகாலை வேளையில், போதையில் சொகுசுக் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் திருத்தணியை சேர்ந்த ஆறுமுகம் என்ற ஓட்டுநர் பரிதாபமாக பலியானார். 12 பேர் காயமடைந்ததுடன், 12 ஆட்டோகளும் சேதமடைந்தது. இந்த விபத்தை ஏற்படுத்தியதாக தேசிய கார்பந்தய வீரரான விகாஸ்…

இந்திய தூதரக அதிகாரியை அதிரடியாக வெளியேற்றும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேறும்படி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த மெஹ்முத் அக்தர் என்பவர் உளவு வேலையில் ஈடுபட்டதாக 48 மணிநேர கெடுவில் அவர்…

சிறுவர்களும் சீண்டாத சீனப் பட்டாசு.. ஜோரான விற்பனையில் சிவகாசி பட்டாசு!

சென்னை: சீனப்பட்டாசுகள் சந்தையில் கிடைப்பதை கட்டுப்படுத்தி உள்நாட்டில் தயாரித்த பட்டாசுகளே விற்கப்படும் தீபாவளியாக இந்த தீபாவளி மாறியிருக்கிறது. இதனால் சிவகாமி பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை என்றால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் சுண்டி இழுப்பது பட்டாசுதான். பட்டாசுகளால் பல விபத்துக்கள் ஏற்பட்டாலும்,…

எல்லை தாக்குதலுக்கு செம பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்- 15…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு ராணுவம் தக்க பதிலடியைக் கொடுத்துள்ளது. இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி…

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 83 தமிழர்கள் கைது

கடப்பா: ஆந்திர மாநிலம், கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 83 பேரை அம் மாநில வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை முறைகேடாக வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து செம்மரம் வெட்டுபவர்களை கண்காணிக்க காவல்துறை, வனத்துறையினர் சேர்ந்து சிறப்பு…