கேரளத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்

கேரளத்தில் வயநாடு, பாலக்காடு மாவட்டங்களில் உள்ள வனத்துறை அலுவலகங்கள் மீதும், ஒரு கேஎஃப்சி உணவகம் மீதும் மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர். வயநாட்டில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று 2 வாரங்களே ஆன நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும், இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.…

காவிரி விவகாரம்: பிரதமருடன் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் சந்திப்பு

தமிழகத்தைச் சேர்ந்த டெல்டா மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர்.   காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து,…

தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால், ஈழத் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படுமாம்…

ஈழத் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் தமிழ் நாட்டில் பாரதீயே ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைக்கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலைமை மாற்றி…

மதமாற்றத் தடைசட்டத்துக்கு கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு

இந்தியாவில் மதமாற்றத்துக்கு தடை கொண்டுவர வேண்டும் என்ற விதமாய் மத்திய அரசு பேசிவருவதை எதிர்த்து இந்தியாவின் முன்னணி கிறிஸ்தவ அமைப்புகளின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கத்தோலிக்க ஆயர்கள் அமைப்பு, தேவாலயங்களின் தேசிய மன்றம், இவாஞ்ஜெலிக்கல் உறுப்புரிமைக் கழகம் ஆகியவற்றின் கூட்டமைப்பான தேசிய ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் இந்த…

வேர்களை வெறுக்கும் விழுதுகள்: கண்டிக்காத சமூகம்; தண்டிக்காத சட்டம்

தமிழ்நாட்டில் நடக்கும் முதியோர் கொலைகள் வாழ்வின் சடங்கு போல நடப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரமிளா கிருஷ்ணன். கண்டுகொள்ளாத சமூகமும், தண்டிக்காத சட்டமும் இவை தொடர்வதற்கான காரணிகள் என்கிறார் அவர். பிறந்த குழந்தைக்கு காது குத்துவது, பெண் குழந்தைக்கு மஞ்சள் நீராட்டு விழா நட்த்துவது என்பதைப் போல,…

காஷ்மீர், ஜார்க்கண்டில் தேர்தல் முடிந்தது: 23இல் வாக்கு எண்ணிக்கை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சனிக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, தும்கா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே காத்திருந்த வாக்காளர்கள். ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநில சட்டப் பேரவைகளுக்கான ஐந்து கட்ட வாக்குப்பதிவு…

கட்டாய மதமாற்றத்தை தடுக்க புதிய சட்டம் தேவை: அமித் ஷா

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அமித் ஷா, கட்டாய மதமாற்றத்தை தடைசெய்ய புதிய சட்டம் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அமித் ஷா   கட்டாய மதமாற்றம் இந்தியாவில் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக இருந்துவருகிறது. கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான நாட்டின் ஒரே கட்சி பாஜகதான் எனக் கூறிய…

அரவிந்தர் ஆசிரமத்தை அரசு கையகப்படுத்தக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு…

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தை அரசு கையகப்படுத்த வலியுறுத்தியும், ஆசிரம சகோதரிகள் தற்கொலை சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரியும், புதுச்சேரியில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தை அரசு கையகப்படுத்த வலியுறுத்தியும், ஆசிரம சகோதரிகள் தற்கொலை சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தக்…

கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள நடவடிக்கை: பாரிக்கர்

கடல் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக மக்களவையில் கேள்விநேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசுகையில், "பாகிஸ்தான், மியான்மர்,…

221 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனே…

வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 221 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததற்காக மொத்தம் 66 மீனவர் உறவுகளை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.…

விடுதலைப் புலிகளைப் பங்கரவாதிகள் எனக்கூறிய குஷ்புவின் வீடு முற்றுகை!

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்ற சர்சைக்குரிய கருத்தினை வெளியிட்ட நடிகை குஷ்புவுக்கு எதிராக தமிழர் முன்னேற்றப்படை உறுப்பினர்கள் முற்றுகைப் போராட்டத்தையும் சிறிதுநேரம் சாலை மறியலிலும் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நடிகை குஷ்வின் வீடு தமிழர் முன்னேற்றப்படை நிறுவுனர் வீரலட்சுமி தலைமையில் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் குஷ்புவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது. குஷ்புக்கு…

மும்பை தாக்குதல்: குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய பாகிஸ்தான்

மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டர் ஜாகிர் உர் ரஹ்மான் லாக்விக்கு ஜாமீன் வழங்கி பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு, மும்பையில் கடல் வழியாக நுழைந்த 10 பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில்…

ஆசிரம குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட 3 பேர் தற்கொலை

ஆசிரம நிர்வாகத்தின் மீது இந்தச் சகோதரிகள் பல புகார்களைக் கூறிவந்தனர்.   புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகளும் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 3 பேர் பலியாகினர். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான…

இந்தியாவின் மீதான தாக்குதல் தொடரும்: தீவிரவாத அமைப்பின் தலைவர் மிரட்டல்!

புதுடெல்லி : பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே காரணம். அதற்கு பழிவாங்கும் வகையில் இந்தியாவின் மீதான தாக்குதல் தொடரும் என்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது மிரட்டியுள்ளார். மும்பையில் கடந்த 2008ல் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல் வழக்கில் தேடப்பட்டு வருபவர்…

பெஷாவர் தாக்குதலுக்கு காரணம் இந்தியாவாம் : முஷாரப் உளறல் பேச்சு

இஸ்லாமாபாத்: பெஷாவர் தாக்குதலுக்கு இந்தியாவின் உளவு அமைப்பும் ஆப்கானிஸ்தானும் தான் என பாக்.முன்னாள் அதிபர் முஷாரப் தனது உளறல் பேச்சில் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் வார்சக் சாலையில் உள்ள ராணுவ பப்ளிக் பள்ளி ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 132 குழந்தைகள் உள்பட 141…

விமானத்தை கடத்தினால் இனி மரண தண்டனை

புதுடில்லி: விமானத்தை கடத்தும் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை அளிக்கும் சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, விமான கடத்தலை தடுக்கும் சட்ட திருத்த மசோதாவை, ராஜ்ய சபாவில் நேற்று தாக்கல் செய்தார். இதில், 'விமான கடத்தல்…

இந்தியாவில் ஐ.எஸ். அமைப்புக்குத் தடை: ராஜ்நாத் சிங்

"ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து கேள்வி நேரத்தின்போது அவர் மேலும் கூறியதாவது: பல நாடுகளில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை ஊக்குவிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த…

“கச்சத்தீவு சிக்கலில் மக்களை ஏமாற்ற பொன். இராதாகிருட்டிணனும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும்…

கச்சத்தீவு காலங்காலமாக தமிழ்நாட்டின் சொத்தாக இருந்தது என்று பா.ச.க. நடுவண் அமைச்சர் பொன்.இராதாகிருட்டிணனும், இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்வதற்காகவே கச்சத்தீவை இந்திராகாந்தி இலங்கைக்குக் கொடுத்தார் என்றுதமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் பொய் ஆயுதம் ஏந்தி, போலிப் போர் நடத்துகிறார்கள். கச்சத்தீவை 1974ஆம் ஆண்டு அன்றையத் தலைமையமைச்சர் இந்திரா…

இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் நிலை குறித்து போப்பிடம் முறைப்பாடு

இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையால் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, அவர்கள் சார்ந்த அமைப்பினர் புதுடில்லியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். புதுடில்லியிலுள்ள வாட்டிகன் தூதரகத்தின் முன்பாக இந்தப் போராட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. தலித் கிறிஸ்தவர்கள் சார்ந்துள்ள தேவாலயங்கள் கூட தங்களைப் புறக்கணிப்பதாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.…

நிலக்கரி சுரங்க முறைகேடு : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம்…

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்யவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைகேட்டில் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனம் ஈடுபட்டது குறித்த வழக்கை…

117 வயதோடு உயிருடன் இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்! நீதிமன்றத்தில்…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் தொடர்பாக தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடமுள்ள 41 கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்று கோரி…

விடுதலைப் புலிகள் ஏனைய அமைப்புக்களுடன் தொடர்பா? கவனம் செலுத்துவதாக இந்தியா…

விடுதலைப் புலிகள் அமைப்பு, இந்திய தேசத்துக்கு எதிரான அமைப்புக்களுடன் தொடர்புகளை கொண்டிருக்கிறதா? என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இந்திய இணையத்தளம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணியின் பிரித்தானிய பிரிவு, சீக்கியர் நடவடிக்கை வலைப்பின்னல் போன்றவற்றுடன் இந்த தொடர்புகள் பேணப்படுகிறதா? என்று…