இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

போலி தடுப்பூசி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து சந்தையிட்டு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி, இந்திய அரசின் தடுப்பூசி திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 86 வயதான முன்னாள் முதல்…

கல்விக்கு வயது ஒரு தடை அல்ல. இதை நிரூபித்து இருப்பவர், ஒரு சாமானியர் அல்ல. அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓ.பி.சவுதாலா. 10-ம் வகுப்பு தேர்வு இவர் 86 வயதான நிலையில், சிர்சாவில் ஆர்ய கன்யா சீனியர் செகண்டரி பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த 10-ம் வகுப்பு ஆங்கில…

கொரோனா வார்டுகளாக மாறிய மனநல மருத்துவமனை: தமிழ்நாடு மன நோயாளிகளை…

`அனைவருக்கும் அனைத்தையும் பொதுவான விதியாக மாற்ற முடியாது. கொரோனா பேரிடரில் மனநோயாளிகளை அரசு எதிர்கொண்ட விதம் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அரசு செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் நீதிமன்றம் சென்றே தீர்க்க முடிந்ததுதான் பெரும் துயரம்" என்கிறார், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்…

கடற்படை தளங்கள் மேல் ‘ட்ரோன்’கள் பறக்க தடை

சென்னை:தமிழகத்தில் உள்ள கடற்படை தளங்களை சுற்றி, 3 கி.மீ., சுற்றளவில், 'ட்ரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்திய கடற்படை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:- சென்னையில், ஐ.என்.எஸ்., அடையாறு, வேலுார் மாவட்டம், அரக்கோணத்தில், ஐ.என்.எஸ்., ராஜாளி, ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் ஐ.என்.எஸ்., பருந்து, திருநெல்வேலி மாவட்டத்தில், ஐ.என்.எஸ்., கட்டபொம்மன் ஆகிய கடற்படை…

குழந்தைகளுக்கு கொரோனா வேக்சின் எப்போது கிடைக்கும்.. பள்ளிகள் திறப்பு பாதுகாப்பானதா?

இந்தியாவில் சிறார்களுக்கான கொரோனா வேக்சின் அடுத்த மாதம் முதல் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் என்று ஐசிஎம்ஆரின் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் இயக்குநர் பிரியா ஆபிரகாம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் வேக்சின் பணிகள் நடந்து வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்குத் தொடங்கி வேக்சின் பணிகள் படிப்படியாக…

மதுரைக்கு மெட்ரோ; அறிவிப்பை அரங்கேற்றுமா அரசு

மதுரை: தமிழகத்தில் 2வது பெரிய நகராக கருதப்படும் மதுரையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஏற்ப நகருக்குள் நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதனால் ஓரிடத்திலிருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கிறது. புராதன, வரலாற்று நகரமான மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்து அமையப்பெற்றது. இதனால்…

கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார மந்திரி…

கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரி தலைமையிலான குழு கேரளாவுக்கு வந்தது. திருவனந்தபுரம், நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் தணிந்து விட்டது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அங்கு நேற்று முன்தினம் 18 ஆயிரத்து 582…

இந்தியாவில் 5 மாதங்களுக்கு பிறகு 25 ஆயிரமாக குறைந்த தினசரி…

புதுடில்லி: இந்தியாவில் 5 மாதங்களுக்கு பிறகு தினசரி கோவிட் பாதிப்பு 25 ஆயிரமாக குறைந்தது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,166 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 36,803 பேர் கோவிட்…

இந்தியாவில் 54.58 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை…

இந்தியாவில் 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட்ட 19.68 கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுள்ளனர்.இந்தியாவில்  54.58 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது…

வாகன ஓட்டிகளுக்கு இலவச பெட்ரோல் !

புதுச்சேரியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் நலத்திட்டமாக வழங்கப்பட்டது. இலவச பெட்ரோலை போட நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் வரிசைகட்டி நின்றனர். கடந்த காலங்களில் புதுச்சேரியில் தமிழகத்தைவிட பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும். கொரோனா காலங்களில் போடப்பட்ட வரி…

கொரோனா 3-வது அலை மோசமானதாக இருக்காது – எய்ம்ஸ் இயக்குனர்…

எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பதில் தடுப்பூசி பெரும் பங்காற்றுகிறது என டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் சாா்பில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் இயக்குநா் ரந்தீப் குலேரியாவிற்கு…

தாக்குதல் முறியடிப்பு: பயங்கரவாதிகள் கைது

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் இருசக்கர வாகனம் வாயிலாக வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று வாகன வெடிகுண்டு தாக்குதல் நடத்த, ஜெய்ஷ் - இ -…

நாட்டின் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை

நகரம், கிராமம் என்று இல்லாமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என பிரதமர் மோடி பேசினார். புதுடெல்லி, நாட்டின்  75-வது சுதந்திர தினம், கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில், கட்டுபாடுகளுடனும், அதே நேரத்தில் வழக்கமான உற்சாகத்தோடும் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

தடுப்பூசி போடாமல் கூட்டமான இடத்திற்கு செல்ல வேண்டாம்: சுகாதார செயலர்

சென்னை: தடுப்பூசி போடாமல், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நிருபர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் இரண்டாவது அலை குறைந்தாலும் சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், தினசரி கோவிட்டால்…

பான் கார்டு எண் உடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் கணக்கு…

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையை வழங்கியுள்ளது. அதில், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30 -க்கு முன் தங்கள் நிரந்தர கணக்கு எண்ணை (PAN) ஆதார் எண் உடன் இணைக்குமாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 30…

நீட்’ தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்திய தாயை கொலை செய்த…

மும்பை : நீட் தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்தியதால், சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், இப்படியொரு விபரீத கொலை நடந்து இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நவிமும்பை ஐரோலி செக்டார்- 7 பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும்…

பள்ளிகளை விரைவில் திறக்க பார்லி., குழு வலியுறுத்தல்

புதுடில்லி- கொரோனா தொற்றால் ஓராண்டுக்கு மேல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பல குடும்பங்களின் நிலைமை மாறியுள்ளது; அதனால் குழந்தைகள் நலன் கருதி பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என, கல்வித்துறைக்கான பார்லி., நிலைக்குழு தெரிவித்துள்ளது. கல்வித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் முதல்…

2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்மின்சார ரெயிலில் பொதுமக்கள் பயணிக்க…

டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரெயில்களில் 15-ந் தேதி முதல் பயணம் செய்யலாம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். மும்பை, 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரெயில்களில் 15-ந் தேதி முதல் பயணம் செய்யலாம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். பா.ஜனதா…

விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை ரூ.19,500 கோடி…

பிரதமர் மோடி பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை ரூ.19,500 கோடி - பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார் புதுடெல்லி: பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு…

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி அளவு 50 கோடியை கடந்தது…

தடுப்பூசி போடும் பணி 40 கோடி முதல் 50 கோடி வரையிலான பத்து கோடி தடுப்பூசி டோஸ்கள் வெறும் 20 நாட்களில் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். புதுடெல்லி: இந்தியாவில் ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆரம்பத்தில் கொரோனா…

கேரளாவில் புதிய கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை அரசு எச்சரிக்கை

கேரளாவில் தினமும் 20 ஆயிரத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. 3-வது அலையின் ஆரம்பமா? என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருவனந்தபுரம், கேரளாவில் தினமும் 20 ஆயிரத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. 3-வது அலையின் ஆரம்பமா? என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் கேரள…

அமெரிக்க நிறுவனத்தின் ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி, இந்தியாவுக்கு வருகிறது –…

அமெரிக்க நிறுவனத்தின் ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி, இந்தியாவுக்கு வருகிறது - அவசர பயன்பாட்டு அனுமதிக்கு விண்ணப்பம் Facebook  Twitter  Mail  Text Size  Printகொரோனாவுக்கு எதிராக, அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தாரின் ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி இந்தியாவுக்கு வருகிறது. இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.…

ஒவ்வாத சட்டத்தால் மக்கள் அபதி

கடைக்குச் செல்ல வெளியே செல்லும் போது கூட கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என கேரள அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு…