ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம்: பிரதமர் மோடி, ஜனாதிபதி…

புதுடெல்லி, டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்ட இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியது. இந்திய ஆண்கள் ஆக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்றதன் மூலம் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. ஒலிம்பிக்…

காவலர்கள் உடல்தகுதி தேர்வு; நாமக்கல் திருநங்கை வெற்றி!

சேலத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை பெண் காவலர் உடல்தகுதி தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான திருநங்கை வெற்றி பெற்றுள்ளார். தமிழக முழுவதும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் ஆண்களுக்கான முதல்கட்ட இரண்டாம் நிலை காவலர் தேர்வு முடிவடைந்த…

கல்வெட்டு ஆய்வாளர்கள் அவசியம் தேவை- தொல்லியல் துறையைப் பாதுகாப்போம்

கல்வெட்டு ஆய்வாளர்களை நியமித்து தொல்லியல் துறையைப் பாதுகாக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, வைகோ இன்று (ஆக. 03) வெளியிட்ட அறிக்கை: "உலக அளவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காட்டுக்கு மேலான கல்வெட்டுகள் தென்னிந்தியாவில் மட்டுமே உள்ளன. இந்தியாவில்,…

பெண் தீக்குளிக்க முயற்சி; கலெக்டர் ஆபீசில் பரபரப்பு!

தருமபுரி மாவட்டம் மாரவாடி அடுத்த மத்திமரத்துப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தை அழிக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைத்து உள்ள விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அதிகாரிகளிடம் அழைத்து சென்று…

கற்கை நன்றே; கற்கை நன்றே !

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பாப்பாரப்பட்டி கிராமத்தில் செல்போன் கோபுரம் இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அவர்கள் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஆபத்தான முறையில் ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர். இதனால் மாணவ,…

கொரோனா தடுப்பூசி -பூட்டான் சாதனை

இந்தியா மற்றும் சீனா என்கிற இரண்டு பெரிய தேசங்களுக்கு இடையில், இமய மலையில் அமைந்திருக்கிறது பூட்டான். இந்த சிறிய நாடு, தகுதியான எல்லா பெரியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்தி முடிக்க இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் அமைப்பு, இந்த நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் விதத்தை பெரிய வெற்றிக்…

இலங்கைக்கு கடத்த முயன்ற 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா…

இலங்கைக்குப் படகு மூலம் கடத்த முயன்ற 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தல் கும்பல் 8 பேருக்கு 15 நாள் சிறைத் தண்டனை வழங்கி நாகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நாகை துறைமுகத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கஞ்சா கடத்தவிருப்பதாகத்…

கவனம்! மீண்டும் ஊரடங்கு வந்துவிடும்-மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா என்ற பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில்…

வெளிநாடுகளை எல்லாம் தூக்கி சாப்பிட போகுது சென்னை. திட்டம்போட்டு தூக்கும்…

மரங்களை நன்றாக பராமரிக்கும் குடியிருப்பு நல்ல சங்கங்களுக்கு  மாநகராட்சி சார்பாக விருது வழங்கப்படும். மாசு அதிகமாக உள்ள இடங்களில் அதிக மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கூவம், அடையாறு ஆற்றோரங்களில் வாழும் மக்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் குடிசைமாற்று வாரியம் மூலம் கொடுக்கப்பட்டு தான் அவர்கள் செல்கிறார்கள். சென்னை…

கொரோனா சிகிச்சைக்கு காசில்லாமல் தவிக்கும் இந்தியர்கள்: ‘வறுமையில் வீழ்ந்த 23…

கொரோனா இரண்டாம் அலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபடுவது அதிகரித்ததால், இந்தியர்களின் மருத்துவ செலவுகள் படுபயங்கரமாக அதிகரித்தன. காப்பீடுகளைத் தாண்டி, தற்போது மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள க்ரவுட் ஃபண்டிங்கை (பலர் சேர்ந்து நிதியளிப்பது) நாடத் தொடங்கியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் தன் இரண்டாவது குழந்தையப் பெற்றெடுத்த பிறகு சுப்ரஜா ரெட்டி யெருவாவால்…

பிகாரில் திருமணமான பெண்ணின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்ட கொடூரம்

மஞ்சு தேவி துக்கம் பொங்க, கண்ணீர் பெருக்கி, சுமார் மூன்று மணி நேரம், குடும்பத்தினருடன் பிகார் மாநிலத்தின் நாலந்தாவில் உள்ள ஹில்சா டிஎஸ்பி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அமர்ந்திருந்தார். காவல்துறையினருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது. மஞ்சுவின் கர்ப்பிணி மகள் காஜல்…

தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் திருப்புமுனை தாக்கத்தைக் காட்டும் கோவிஷீல்ட் ஆய்வு!

1.59 மில்லியன் சுகாதார மற்றும் இந்திய ஆயுதப் படைகளின் முன்னணி தொழிலாளர்கள் பற்றிய ஆய்வின் இடைக்கால முடிவுகள், உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆய்வுகளில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட பிறகு, தொற்றுநோய் பரவுதலில் 93 சதவீதம் குறைப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் AZD-1222 பார்முலாவில்  கோவிட் -19…

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய…

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நீக்கியது. மேலும், ஜம்மு -…

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கின

தொடங்கின: வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள நகர்ப்புற,கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் கடந்த 2016-ம் ஆண்டே முடிவடைந்துவிட்டது. இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தள்ளிப்போனது. இறுதியாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, முதல்கட்டமாக 27 மாவட்டங்களில் உள்ள…

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம்… அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தேர்தலின் போது உறுதி அளித்தபடி திமுக பல அறிவிப்புகளை செயல்படுத்தவில்லை என்று அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் திமுகவை கண்டித்து அதிமுகவினர் தங்கள்…

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முன்னெடுத்த முதல் திமுக எதிர்ப்பு போராட்டம்…

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவதற்காக தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு முழுவதும், தேர்தல் வாக்குறுதிகளை ஆளும் திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல இடங்களில் அதிமுகவினர் தங்களுடைய…

‘பாகிஸ்தானும், சீனாவும் பயப்பட கார்கில் போர் வெற்றியே காரணம்’ ;…

சென்னை : ''கார்கில் போரில் காட்டிய, நம் நாட்டின் வீரத்தை பார்த்து, இன்றளவும் பாகிஸ்தானும், சீனாவும் பயப்படுகின்றன,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கார்கில் போர் வெற்றி தினம், சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., அலுவலகமான கமலாலயத்தில், நேற்று நடந்தது. அதில், போரில் உயிர்…

உருமாறும் கொரோனாவால் 3வது பூஸ்டர் டோஸ் தேவையா? டெல்லி எய்ம்ஸ்…

உருமாறும் கொரோனாவால் 3வது பூஸ்டர் டோஸ் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட கூடும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் கூறியுள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா 2வது அலை முதல் அலையை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.  கடந்த சில வாரங்களாக பாதிப்புகள் குறைந்து மெல்ல கட்டுக்குள் வருகின்றன. இந்த…

பல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு தேவையா மேல்சபை

மீண்டும் மேல்சபை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், உ.பி., தெலுங்கானாவில் மட்டுமே மேல்சபைகள் உள்ளன. 1861ல் சென்னை ராஜதானியில் மேல்சபை உருவாக்கப்பட்டது. 1935ல் சென்னை ராஜதானியில் சட்டப்பேரவை,சட்ட மேல்சபை நிரந்தரமாக அமைக்கப்பட்டன. 1986 வரை மேல்சபை இயங்கியது. எம்.ஜி.ஆர்., ஆட்சியில் சட்டத்திருத்தம்…

18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு செப்டம்பரில் தடுப்பூசி- மத்திய அரசு…

கொரோனா தடுப்பூசி இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 43.87 கோடி டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு வினியோகம் செய்துள்ளது. கொரோனா வைரஸ்புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஏப்ரல்…

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் மீராபாய் சானு

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பளுதுாக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (49 கி.கி.,) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். ஜப்பானில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் பெண்களுக்கான பளுதுாக்குதல் 49 கி.கி., எடைப்பிரிவில் 'ஸ்னாட்ச்' பிரிவில் 87 கிலோ, 'கிளீன் அன்ட் ஜெர்க்'…

தடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்டதில் தமிழ்நாடு முதலிடம்: மத்திய அரசு

புது டில்லி: மே 1 முதல் ஜூலை 13 வரை தடுப்பூசி போட்டதில், கொடுத்த அளவை வீணாக்காமல் அதிலிருந்து கூடுதல் நபர்களுக்கு தடுப்பூசி போட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. தடுப்பூசி திட்டம் பற்றி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி எழுப்பிய…

கொரோனாவின் கோரம்: 2 மாதங்களில் 645 குழந்தைகள் பெற்றோரை இழந்து…

புதுடில்லி: இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில், 645 குழந்தைகள், கோவிட் பெருந்தொற்றுக்கு தங்களது பெற்றோரை இழந்துள்ளதாக அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது: இந்தியாவில்…